இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, August 28, 2017

வெண்முரசு : மழைப்பாடல் - ஜெயமோகன்



மழைப்பாடல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எத்தனை எத்தனை வர்ணனை எங்கு இருந்து கொட்டுகிறது ஜெயமோகனுக்கு வியப்பு வியப்பு. ஓரே ஒரு உவமையை தவிர வேறு எந்த உவமை திரும்ப வரவில்லை ' விழி மூடி இமையுள் அசையும் குருதியை பார்த்து கொண்டு இருந்தான்' இது மட்டும் இரண்டு இடத்தில் வருகிறது. அனேகமாக அனைத்து அத்தியாயத்திலும் துனை கதை வருகிறது, ஆறுமுகன் அவதாரம் மிக முக்கியமான ஒன்று. பீஷ்மர் காந்தாரம் செல்லும் போது மோகஞ்சந்தாரோ (இறந்தவர்களின் மேடு) போய் பார்க்கிறார்
“சூதர்களின் கதைகளில் கிருதயுகத்துக்கு முன்பு சத்யயுகத்தில் மூதாதையர் இறப்பதேயில்லை என்றும் அவர்கள் முதுமையால் குருதியிழந்து உலர்ந்துச் சுருங்கியதும் பெரியதாழிகளில் வைத்து மண்ணுக்குள் இறக்கிவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.” இப்பொழுது இது திராவிடதேசத்திலும் தமிழ் மக்கள் இடத்திலும் இது வழக்கில் உள்ளது என்றும்
பிரம்மாவின் சந்ததியில்
“காந்தாரருக்கு ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். மூத்தகுலம் காந்தாரகுலமாக ஆகி இந்த மண்ணை ஆள்கிறது. பிறநால்வர் சேரர் சோழர் பாண்டியர் கோலர் என்று சொல்லப்பட்டார்கள். அவர்கள் இங்கிருந்து கிளம்பி தட்சிணத்தை அடைந்து அங்கே எங்கேயோ நாடாள்கிறார்கள்” என்றும்
இது அக்னிபுராணத்தில் உள்ளது என்று பீஷ்மர் சொல்லும் செய்தி வியப்பாக உள்ளது.
மேலும் மஹாபாரதம் காலத்தில் திராவிடம், தமிழகம் தனி தனி பகுதிகள் என்று தெரிகிறது. மஹாபாரதம் காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் இருந்தனவா என்று தெரியவில்லை.
மஹாபாரதம் முழுவதும் நடைபெற்றபோகும் அனைத்திற்கும் பெண்களே அடித்தளம் அமைக்கிறார்கள், அம்பிகை கரம் பிடித்து அன்னை என்று அஸ்தினபுரியில் கால்வைத்த அம்பாலிகை இருவர் இடத்திலும் எப்படி இந்தனை குரோதம் விரிசல் வந்தது என்று நினைத்தால், அறியனை என்று தோன்றுகிறது. எப்போதும் அம்பிகை வயிற்றில் இன்னோர் உயிர் வளந்ததோ அப்போதே அவள் என் அன்னையல்லை என்றும் இனி இவள் உண்பதும் உயிர்ப்பதும் அந்த உயிருக்கு தான் என்று அம்பாலிகா நினைக்கிறாள், அதன்பொருட்டு அவள் எந்த எல்லையையும் தொடுவாள் என்று உணர்கிறாள். அப்போது உறவுகள் என்பது மேலும் மேலும் உறவுகளை வளர்க்கவா அல்லது உறவுகள் இடையே பிரிவுகளை பகைமையை ஏற்படுத்த மட்டும் தானா?. இன்றும் கூட திருமணம் முடிந்தால் தன் குடும்பத்தை பார்க்க தான் சொல்லிதருகிறது சமுகம் அப்போது அன்று முதல் இன்றுவரை மனித அகம் மாறவே இல்லையா,? அப்போது நாம் மாற்றம் என்று சொல்லிக்கொள்வது எல்லாம் வெறும் புறமாற்றாம் தானா? மானிட மனித அகம் அன்று இன்றும் எப்போதும் அப்படியேதான் இருக்கபோகிறது அதில் எந்த மாற்றமும் அற்ப மானிட்டர்கள் நம்மால் ஏற்படுத்தவே முடியாது என்ற உண்மையை இந்த மழைப்பாடல் உணர்த்துகிறது.
திருதராஷ்டிரன் மகன்கள் தியவர்களக பிறப்பதற்கும், தாமதமாக பிறப்பதற்கும், அவன் விழியற்றவனாக பிறந்தற்கும் யார் காரணம் எவர் பிழை? ஏன் திருதராஷ்டிரன் அறம் கொண்டவனாகவே இருந்தாலும் அவனுக்கு நடப்பவை எல்லாம் தியவையாகவே அமைகிறது? பாரதம் முழுக்க இரத்தாறு ஓட ஏற்கனவே முடிவு செய்யபட்டுவிட்டது இறை இவர்களை அரசியல் காய்களாக வைத்து தாயத்தை உருட்டி விலையாட தொடங்கி விட்டான் நடப்பவைகளை யாராலும் தடுக்க முடியாது அல்லவா.


சிறு பிழையால் காந்தாரம் மகதம் இடையேயான மண உறவு தடைபட்டு போகிறது இந்த சிரிய இடைவெளி பீஷ்மர் பயன்படுத்திகொல்கிறார் வரலாறு மாறிவிடுகிறது. சுகோணன் என்னும் தூது பருந்து இறப்பதும் அதை ஓனாய் உண்ணும் போது சகுனி பார்ப்பது இந்த இடத்தில் இரு கதை இனைகிறது மிகச் சிறந்த இடம் இது. பழங்காலத்தில் தாலி பனையேலையில் கட்டப்பட்டது என்று தெரியும் ஆனால் அந்த பனையேலை எப்படி எடுக்கப்படுகிறது என்று தெரியாது, வசுமதி திருதராஷ்டிரன் திருமண சடங்கில் இது வருகிறது, ஏறத்தாழ அன்று முதல் இன்று வரை திருமண சடங்கு ஒன்றாக இருப்பது பெரும் வியப்பாக உள்ளது. பனை பல ஆண்டுகள் வளர்ந்தபின் ஒரு கட்டத்தில் பூக்கிறது அப்படி பூக்கும் பனை தாலிபனை எனப்படும், அந்த பனையை வணங்கி அதில் இருந்து ஓலை மற்றும் பூவை வெட்டி வந்து அதற்கு சடங்குகள் செய்து தாலி செய்யப்படுகிறது. அந்த பனையோலையில் மணமகன், மணமகள் பெயர் எழுதப்படும் அல்லது இரு நாட்டு அரசு முத்திரை வரையப்படும்.
இந்த பகுதியை தொகுத்து சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ' திருதராஷ்டிரன் பாண்டு வளர்ந்து விட்டார்கள். திருதராஷ்டிரனுக்கு பெண் தேடும் போது பல சத்ரிய தேசம் விழியிழந்தவன் என்பதால் பெண் கொடுக்க மறுக்கிறது, மதத்திற்கு தூது சொன்ற போது மகதம் அரசர் மறுப்பு சொல்ல ஆனால் இளவரசர் அஸ்தினபுரத்தின் உறவை விரும்புகிறார் ஆனால் காலம் கடந்து விட்டது, காந்தார நாட்டிற்கு பிதாமகர் பீஷ்மர் தூது சென்றுவிட்டார். பீஷ்மரை காந்தாரம் வரவேற்கிறது ஆனால் காந்தார குலமூதாதைகள் விழியாற்றவனுக்கு பெண் கொடுக்க மறுக்க திருதராஷ்டிரன் காந்தாரியை கவர்ந்து வருகிறான். கணவன் காணாத புவியை தானும் காண்பதில்லை என்று விழியை திரையிட்டுகொண்டு காந்தாரி அஸ்தினபுரம் வரும் போது மழை கொட்டி புவி குளிர்கிறது, குருதி மழையு‌ம் பொழிகிறது இது எதிர்காலத்தை உணர்த்தும் குறிப்பு. அஸ்தினபுரியின் மக்கள் காந்தாரியை வியப்போடு போற்றுகிறது.
யது வம்சதார்கள் யமுனை கரையில் வாழ்ந்து வந்தனர் அவர்கள் யாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர். யாதவர் பசுக்களை வளர்ப்பது தொழில். லவணர்கள் மொழியற்றவர்களாகவும் கருமைநிறம் கொண்டவர்களாகவும் வேட்டைதொழிலை செய்துவந்தனர். காட்டுக்குள் மேய்ச்சலுக்குச் செல்லும் கன்றுகளை லவணர் கவர்ந்துசெல்வதும் அதைத்தடுக்கமுயலும் யாதவர்களைக் கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது.

குடிமூதாதையர் கூடிய சபையில் அடுத்ததாக சூரசேனர் (யாதவர்) லவணகுலத்தைச்சேர்ந்த பெண்ணை மணந்துகொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டது. லவணர்களை பிற யாதவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு அது இன்றியமையாதது என்றனர் குடிமூத்தார்.அவ்வாறாக சூரசேனர் லவணகுலத்தைச்சேர்ந்த மரீஷையை மணந்தார்.  அவர்களுக்கு பிறந்த குழந்தை அனைத்தும் கரியவையாக இருந்தது 13 வதாக வசுதேவன் பிறந்தான் குழந்தை செந்நிறம் அப்போதே இன்னொரு குழந்தை பிறந்தது செந்நிறமான பெண்குழந்தை பிருதை. அவள் அரண்மனைக்கு வந்த மாக முனிவர் துர்வாசர் க்கு பணிவிடை செய்கிறாள் அதன்பொருட்டு அவளுக்கு விண்ணகத்தார் உடன் உரையாடும் ஒரு மந்திரத்தை சொல்லி இதை உன் கனவன் உடன் கூடும் போது மட்டும் பயன்படுத்து என்கிறார், ஆனால் பிருதை பொறுமையிழந்து அதை முன்கூட்டியே பயன்படுத்திவிடுவதால் சூரியன் போன்ற ஒலிகொண்ட விண்ணவர் பிருதைக்கு கரு கொடுக்கிறார் திருமணமாகமலே கருத்தரிக்கிறாள். அந்தக் கருவை கலைக்க நினைக்கிறாள் ஆனாலும் நாகங்கள்  கருவிற்கு துணை இருக்கிறது. 12 மாதங்கள் கழித்து சூரியப் புதல்வன் பிறக்கிறான்(கர்ணன்) . அரண்மனைக்கு அக்குழந்தையை எடுத்துச் செல்ல இயலாத குந்தி சிறுபடகில் அந்தக் குழந்தையை வைத்து நதியில் விடுகிறாள். அக்குழந்தை அதிரதன் என்பவரால் கண்டெடுக்கப்பட்டார் இவர் அரசர் திரிதராஷ்டிராவின் சாரதி ஆவார். அவரும் அவரது மனைவி ராதாவும்  குழந்தையை சொந்த மகனாகவே வளர்த்தனர். 
திருதராஷ்டிரன் அறியனை அமரும் நிகழ்வு தயார் செய்யப்படுறது பெரும் செல்வமும் படையும் கொண்டு சகுனி அஸ்தினபுரி வருந்தடைகிறான். அம்பாலிகா தன் மகன் பாண்டு அறியனை ஏறவேண்டும் என்பதால் எதிர்ப்பு கிளம்புகிறது. நில அதிர்வு வந்ததால் நாட்டிற்கு அழிவு ஏற்படும் என்று அறியனை ஏறுதல் தடை செய்யப்படுகிறது. பிறந்தது முதல் இந்த தருணத்திற்காகக் காத்திருந்தான்   திருதராஷ்டிரன் அவனிடம் யார் என்ற செய்தியை சொல்வது? பீஷ்மரை சத்தியவதி தெரிவிக்கும்படி சொல்கிறாள் அவர் கடுமையாக எதிர்ப்பு தெரிக்கிறார். சத்தியவதி தேவவிருதன் இடையே முதல் பூசல் ஏற்றப்படுகிறது. என் தமக்கை அறியனை அமர்வாள் என்ற பிதாமகர் வாக்கை நம்பி தான் நான் அஸ்தினபுரி வந்தேன் இதை ஏற்க முடியாது என்று சகுனி சொல்கிறார். நீங்கள் 18 ஆண்டுகள்  பெறுங்கள் உங்கள் தமக்கையின் மகன் அறியனை ஏறுவான் இது என் வாக்கு அதுவரை நீங்கள் இங்கேயே தங்கலாம் உங்கள் தமக்கையின் மைந்தனை உங்கள் விருப்பப்படி வளர்தெடுங்கள் என்கிறார் பீஷ்மர் சகுனி 18 ஆண்டு அஸ்தினபுரியில் தங்குகிறார்.
பீஷ்மர் பயந்த அளவுக்குள் திருதராஷ்டிரன் அதை எதிர்கொள்ளவில்லை மாறாக “விதுரா, மூடா, என் இளவல் நாடாள விழைந்தான் என்றால் அவன் மண்ணைப் பிடுங்கி ஆளும் வீணனென்றா என்னை நினைத்தாய்? உடல், உயிர், நாடு, புகழ் என எனக்குரியதனைத்தும் இவனுக்குரியதேயாகும்” என்றான். ஆனால் காந்தாரியிடம் இச்செய்தியை சொல்லும்பொழுது இவையனைத்தும் குந்தியாள் நடந்தவை என்ன அவள் மீது தீச்சொல் இடுகிறாள் உன்னை பழிதீர்பேன் என்கிறாள். பாண்டு அறியனை ஏறினால் யாதவ பெண் குந்தி சத்ரியார்கள் அறியாணை அமர குலமூதாதைகள் எதிர்ப்பு தெரிவிக்க ஆனால் எந்த சத்ரிய மன்னனும் மணகொடையாளிக்க மறுக்க மாத்ரநாட்டு இளவரசர் சல்லியர் அவரது தங்கை மாத்ரியை பாண்டுவுக்கு மணமுடிப்பதாக வாக்களித்தார். பாண்டு மாத்தியை மணநிகழ்வு முடிந்தது. பாண்டு வேட்டைக்கு கானகம் சென்றபோது அவ்வனத்தில் காமத்தில் திளைத்திருந்த இரு மான்களை அப்பெய்தி கொன்றான் மான் உருவில் இருந்த சுகுணன் அவன் துனை கௌசிகையும் தீச்சொல் இட்டனர் இன்று முதல் உன் வாழ்நாள் முழுவதும் காமம் என்பது கிடையாது மனம் துடிக்க உடல் தாளாமல் உன்னை கொல்லும் ஆயுதமாக காமம் ஆகுக என்று. இதன்பொருட்டு பாண்டு தனது இருதுணைவியுடன் வனம்புக விழைகிறான். விதுரன் தாயார் சிவை ஒரு சூத பெண் என்பதால் அவள் மற்ற அரசிகளுக்கு நிகராக நடத்தப்படவில்லை ஒதுக்கி வைக்கம்படுகிறாள், அவளுக்கும் தன் மகன் தான் அஸ்தினபுரியின் அரசன் என்று கனவுகான்கிறாள். உத்தரமதுராபுரியின் தேவகன் மகள் சுருதைக்கும் விதுரனுக்கும் திருமணம் நடக்கிறது. பாண்டு வனம்புகுந்து குடில் அமைத்து வாழ்கிறான், காந்தாரி தூது கிருஷ்ணாபருந்து மூலம் அஸ்தினபுரியின் செய்திகளை அறிந்து கொள்கிறாள். காந்தாரி கருவுற்று இருந்தால் சில தீய அறிகுறிகள் அஸ்தியில் நடக்கிறது. பாண்டுவிடம் குந்தி தனக்கு பிறந்த குழந்தை பற்றி சொல்கிறாள் அவன் இந்த பாரதவர்ஷத்தை ஆளபிறந்த சூரிய புதல்வன் என்கிறாள், பாண்டு அக்குழந்தையை ஏற்று அவனுக்கு துனையாக ஒரு தருமனை பெற்று கொடுக்குப்படி பாண்டு கேட்க்க, அவள் மந்திரத்தை பயன்படுத்தி எமதர்மனை வரவைத்து அவர் உடன் இனைந்து ஒரு குழந்தை பெற்றாள். அக்குழந்தை தருமன், விதிஷ்டிரன், பரதன் என்ற பெயர்களை பெற்றான். காந்தாரிக்கு 12 மாதங்கள் கடந்தும் குழந்தை பெறவில்லை அது மதங்க கர்ப்பம் என்று முனிவர் சொன்னார். அதாவது இருபது மாத கர்பம் குழந்தை நூறு ஆள் பலம் கொண்டு பிறக்கும். அக்குழந்தை தீய குணங்கள் கொண்டது அதனால் இந்த நகர் அழியும் என்று மக்கள் பேச தொடங்கிவிட்டார்கள், இதனால் அக்குழந்தையை வேறு எங்காவது அனுப்பி விட சொல்கிறார்கள். அக்குழந்தை அப்படி பிறக்க யார் காரணம்? இந்த இடத்தில் திருதராஷ்டிரன் சொல் நம்மை கலங்கடிகிறது..
“அழியட்டும். இந்நகரும் இந்நாடும் அழியட்டும். இவ்வுலகே அழியட்டும். நான் அந்தப்பழியை ஏற்றுக்கொள்கிறேன். என்னை அதற்காக மூதாதையர் பழிக்கட்டும். தெய்வங்கள் என்னை தண்டிக்கட்டும். என் மைந்தனை மார்போடணைத்துக்கொண்டு விண்ணிலிருக்கும் தெய்வங்களிடம் சொல்கிறேன். ஆம், நாங்கள் பழிகொண்டவர்கள். நாங்கள்
வெறுக்கப்பட்டவர்கள். ஆகவே தன்னந்தனிமையில் நிற்பவர்கள். எங்களுக்கு வேறு எவரும் இல்லை. தெய்வங்கள்கூட இல்லை” என்றான் திருதராஷ்டிரன். அவன் உதடுகள் துடித்தன. சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. “அவனுக்கு இவ்வுலகில் நானன்றி வேறு எவருமில்லை. அவனை என்னால் வெறுக்கமுடியாது. அவனை என்னால் ஒரு கணம்கூட விலக்கமுடியாது.”

காந்தாரியை முதுநாகினி வந்து சந்தித்தாள் இவன் நாகர்குலதை காக்கும் அரசன் இவன் அழிவற்றவன், நீ இந்த பாரததின் கற்புக்கரசி நீ ஆடையின்றி உன் மைந்தனை பார் அவன் வெல்வரற்றவன் அவன் அழிவற்றவன் என்றால் காந்தாரி அட்டைகளை கலந்து தன் கண்கட்டை அவிழ்த்து பார்த்தாள் காற்றில் பட்டாடை வந்து அவன் தொடையில் விழுந்தது அவள் அவன் தொடையை காணவில்லை உடனே அஞ்சி பயந்து அவனை காக்க நூறு தமயன் வேண்டும் என்று நினைக்கிறாள், இவன் வெல்வரற்றவன் ஆகையால் இவன் சுயோதனன் அல்ல, துரியோதனன் என்றாள்..
குந்திக்கு ஆறு மாதத்தில் மீண்டும் ஒரு குழந்தை பிறக்கிறது அதற்கு பீமசேனன் என்று பெயர் சூட்டப்பட்டது. பாறைகளை கூட கையால் உடைக்கும் அளவுக்கு பலம் கொண்டு இருந்தான். மீண்டும் ஒரு குழந்தை பெற்றாள், அவனுக்கு அர்ஜுனன் என்று நாமம் சூட்டப்பட்டது இந்திரனே ஐராவதத்தில் தோன்றி இவன் நானென்றாறிக என்று ஆசி கூறி அருள்புறிந்தார். இவன் வில் வித்தையில் சிறந்தது விளங்கினான். மாத்ரி  துர்வாசர் அளித்த மத்திரத்தை பண்படுத்தி இரண்டு குழந்தைகள் பெற்றாள். காந்தாரி இரண்டாவது குழந்தை பிறந்தது துச்சானன் என்று பெயர். அவள் பத்து தமக்கைகள் இரண்டு இரண்டு குழந்தைகள் பெற்றனர். பாண்டவர்கள் ஒரளவு வளர்ந்து விட்டார்கள். பாண்டு மாத்ரி உடன் காமம் கொண்டு திளைக்க முயலும் போது அந்த அதிர்வை அவன் உடல் தாங்காமல் இறந்துவிடுகிறான். அவன் சிதையில் மாத்ரி சதி ஏறுகிறாள், செய்தி அஸ்தினபுரியை உலுக்கியது. அம்பிகா, அம்பாலிகா இருவரும் வனம்புக விழைந்து வனம் புகுகிறார்கள். தவளைகள் விண்ணவர் உடன் வேண்டுகிறது மழை! மழை! மழை! ஓம்! ஓம்! ஓம்! , வருடங்கள் சுழன்று காலம் விரைகிறது. 

Sunday, August 27, 2017

வாழ்வது எப்படி - சாரு நிவேதிதா

வகை              : கட்டுரைகள்
எழுத்தாளர்    : சாரு நிவேதிதா
பதிப்பகம்       : உயிர்மை
முதல் பதிப்பு : டிசம்பர் 2009




மிக எளிய வாழ்க்கை அனுபவங்களை அதே நேரத்தில் மிக சுவாரசியமாகவும், நகைச்சுவை உடனும் சொல்லும் கட்டுரை, ரஜினி பற்றி, கமல் பற்றி, மைக்கேல் ஜாக்சன் பற்றி, வேலிமுட்டி சாராயம் பற்றி . அப்புறம் வழக்கம் போல எழுத்தாளர்களை தமிழகத்தில் மதிப்பதில்லை என்று புலம்பல். தழிழ் எழுத தெரியலை, கல்வி சரியில்லை என்று புலம்பல் எத்தனை முறை சங்கு ஊதினாலும் அரசின் செவிட்டு காதில் தான் விழப்போவதே இல்லையே.
கனிமொழிக்கு எழுதிய கடிதம் அருமையான ஒரு, ஏழைகள் தானே அரசியல் காய்கள் இதில் கனிமொழி அநாதை குழந்தைகள் உடன் திரைபடம் பார்ப்பதில் என்ன வியப்பு. அரசியல் என்று வந்த பிறகு உலக அறிவு இருந்தால் என்ன இல்லாட்டி என்ன, அரசியல் ஆட்டம் ஒன்று தானே.!

மைக்கேல் ஜாக்சன் கட்டுரை முக்கியமான ஒன்று. உலக புகழ் கொண்ட ஒருவர் உடன் மிக நெருக்கமாக உணர்வை ஏற்படுத்தியது. மைக்கேல் ஜாக்சன் உரை அவர் பாடல் வரி அவரின் குழந்தை பருவத்தை தொலைத்த வலி வெளிப்படுகிறது, ஆனாலும் அவர் மீது மோசமான விமர்சனம் வைக்கப்பட்டது பெரும் கசப்பு.
பீர்பால் கதைகள், பிளேபாய் கதை நன்று.
வாழ்வது எப்படி என்ற கட்டுரை இந்திய கல்வி முறை என்பது வெறும் கூலி தொழிலாளர்களை மட்டுமே உருவாக்கும் தோல்வி அடைந்த கல்வி முறை தான் அதில் மாற்று கருத்து இல்லை, வாழ்கை கல்வி மட்டும் போதுமா வாழ்கைக்கு? எனக்கு சமைக்க தெரியும், நீச்சல் தெரியும், சாலையில் சரியாக நடக்க தெரியும், குப்பையை சரியாக குப்பை தொட்டியில் போட தெரியும், மற்றவர்கள் உடன் அனுசரித்து வாழதெரியும் சாதாரண விவசாயி. எல்லாம் வைத்து கொண்டு என்ன செய்வது பணம் காய்க்கும் மரத்தில் இருந்து பணம் பரிக்கதெரியாமல்? ஜானி வாக்கர், பிலாக் லேபில், ஐந்து நட்சத்திர பார் என்று உங்கள் எழுத்தில் மட்டும் படித்துவிட்டு சாக வேண்டுமா சாரு?. உங்கள் வீட்டு பப்பு, ஸோரோ, வாழும் வாழ்கை கூட இந்த தேசத்தில் பாதி மக்கள் வாழவில்லை என்பதை தாங்கள் அறியாததா? இதில் பணகாய்ச்சி மரத்தில் பணம் பறிக்க சொல்லிகொடுத்தால் என்ன வானம் ஏறி வைகுண்டம் போக சொல்லிகொடுத்தால் என்ன.

இப்போது உங்கள் கடவுள் நித்யானந்தா பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நினைத்தால் ஹா ஹா ஹா... 

Wednesday, August 16, 2017

உடையார் - பாலகுமாரன்







பொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் இராசராசனை துரத்த வேண்டும் என்று நினைத்து புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்த விடை
' உடையார்' 
ஆறு பாகங்கள் கொண்ட நாவல். சுமார் மூவாயிரம் பக்கங்கள். உங்களுக்கு சோழ தேசம் கான வேண்டுமா?  இராசராசனோடு வாழ வேண்டுமா?  அவனோடு சேர்ந்து பெரிய கோவில் கட்ட வேண்டுமா?  வா என்று கை பிடித்து அழைத்து போகிறார் ஆசிரியர், ஒரு அரசன் எப்படி இருப்பான் எப்படி பேசுவான் எப்படி நடப்பான் எப்படி உத்தரவு போடுவான் இத்தனையும் அவ்வளவு அழகாக சிறிதும் பிசகாமல் கம்பீரமான இராசராசனை நீங்கள் பார்க்கலாம்.
சுந்தர சோழனுக்கு பிறகு இராசராசன் அரசர் ஆகவில்லை என்றால் இன்று தமிழ் இல்லை,
தமிழ் சுத்தமாக அழிந்து இருக்கும்,
இராசராசன் இல்லை என்றால் தமிழ்க்கு 'தேவாரம்' இல்லை, 'திருவாசகம் ' இல்லை. பன்னிரு திருமுறைகளில் பாதி இல்லை, தில்லியில் தமிழ் வேதம் ஓதமாட்டோம் என்று அந்தனர்கள் தேவாரம் திருவாசகத்தை ஒரு அறையில் போட்டு பூட்டி செல் அரித்த தமிழ்யை அந்த மாகன் மீட்டு கொடுத்து தான் அத்தனையும்,
இது வெறும் வாசிப்பு இல்லை அந்த சிவபதகேசரியோடு வாழும் வாழ்க்கை, அவனோடு வாழ்ந்து அவனோடு இறப்பிற்கள், நான் அவனோடு வாழ்ந்து இருக்கிறேன் இறந்து இருக்கிறேன்.
என் அருகில் இருந்தவர் இறந்தது போலவும் அப்போது தான் எனக்கு அது தெரிந்தது போலவும் அழுதேன், கடைசி அத்யாயம் அந்த 20 நிமிடம் வரை அழுதேன், நான் முழுமையாக ஒரு சோழ தேசத்து மறவனாக மாறி இருந்தேன் என் அரசன் இறந்து போல் அழுதேன், என் அரசே இராசராச, எம் பெருமானே, ஈசனே, நீ மனிதனா இல்லை ஈசன், கடவுள் நீ எங்கே?  இப்போது எங்கே இருக்கிறாய்?  நான் இனி உன்னை எப்படி பார்ப்பேன்?  இது தான் நான் புத்தகத்தை முடித்து விட்டு கேட்ட கேள்வி.
நான் நான் என்று அகந்தையில் திரியும் மனிதர்கள் மத்தியில் இவ்வளவு பிரமாண்ட கோவிலை கட்டிவிட்டு இதை நான் கட்டவில்லை எம் மக்கள் கட்டியது என்று ,
"நாம் கொடுத்தனவும்
நம் அக்கன் கொடுத்தனவும்
நம் பெண்டுகள் கொடுத்தனவும்
கொடுப்பார் கொடுத்தனவும் "
என கல்வெட்டில் எழுத சொன்னானே இவன் அரசனா, வெறும் மனிதனா இல்லை அவன் ஈசனின் குழந்தை.
கோவிலுக்கு நிவத்தம் கொடுத்த ஒருவர் பெயரும் விடாமல் கோவில் சுற்றி கல் வெட்டாக பதிய பட்டு உள்ளது.
இதில் வரும் கதை 95% உண்மை  சிறிது கற்பனை, இதில் வரும் பெயர்கள் 98%  உண்மை.
நான் என் பதினோராம் வயதில் பெரிய கோவில் பார்த்து இருக்கிறேன், ஆனால் அது வெறும் வேடிக்கை வெறும் கல் என்று விவரம் அறியாத வயதில் பார்த்து.
ஆனால் உடையார் படித்த பிறகு
நான் தஞ்சை போனால்.
அந்த பிரமாண்ட கோவில் முன் நின்று கொண்டு
" திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி.....
என்று அவன் மொய் கீர்த்தியை உரக்க கடத்துவேன்... அந்த சிவபதசேகரன் பெயர் பதித்த கல்லை தொட்டு தடவி அவன் நின்ன இடம் தொட்டு கண்ணில் ஒற்றுவேன்,
இங்கு தானே இராசராசன் நின்று இருப்பான், இங்கு நின்று தானே இந்த கல்லை தடவி இருப்பான், இங்கு அமர்ந்து தானே நிவத்தங்கள் கொடுத்து இருப்பான், இங்கு நின்று தானே ஈசனை வணங்கி இருப்பான் என்று ஒவ்வொன்றாக தொட்டு தடவி மொய் சிலித்து போவேன்.
அவன் பாதம் தொட்ட இடம் தொட்டு வாங்குவேன்.
அவர்கள் வாழ்ந்த கோட்டை இன்று இல்லை, அவர்களின் மாட மாளிகைகள் இல்லை எல்லாம் பினால் நடந்த படையெடுப்பில் அழிக்க பட்டது,
ஆனால் அந்த கோவில் அத்தனையும் கடந்து அவர் நினைத்தது போல் இன்றும் கம்பீரமாக நிற்கிறது..
"சந்திரர் சூரியன் இருக்கும் வரை இந்த கோவில் நிலைத்து நிற்கும் "
வாழ்க சோழ தேசம்
வளர்க தமிழ்
வாழ்க இராசராசன்
வளர்க சைவம்.
** உங்கள் வாழ் நாளில் நீங்கள் இறப்பதற்குள் கட்டாயம் 'உடையார்'  படியுங்கள் ***
உடையார் படித்து விட்டு தஞ்சை போங்கள், அந்த பிரமாண்ட கோவில் முன் நின்று,
கண்ணில் ஜலம் வழிய கத்துவீர்கள், வாழ்க இராசராசன் என்று வாழ்த்துவிர்கள்.
இப்படி ஒரு படைப்பை தந்த எழுத்தாளர் 'எழுத்து சித்தர் திரு பாலகுமாரன்'  அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்... 

ஸ்சின்லர் லிஸ்ட் - திரைப்படம்

ஆஸ்கர் ஸ்சின்லர்

oskar Schindler ஒரு தொழில் அதிபர் போலந்தில் நாசிக் படைகள் முன்னேறிய போது அங்கு கிடைத்த யூத அடிமைகளை தனது தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தி பணம் சம்பாதிப்பவர்,
ஒரு முறை ஒரு யூதர் Schindler ஐ பார்த்து நீங்கள் எங்கள் வாழ்கையை காப்பாற்றி எங்களுக்கு உயிர் கொடுத்து உள்ளீர் உங்களுக்கு எங்கள் நன்றி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்பார், அப்போது தான் Schindler க்கு  அவருக்கு ஒரு கை தான் இருப்பது தெரிகிறது, இந்த ஒரு கை நபரால் என்ன பயன் என்று பொறுபப்பாளரை திட்டுகிறார் அவர் பயனுள்ள வேலையாள் தான் என்று பல முறை சொல்லியும் கேட்காமல் அந்த நபர் அடுத்த நாள் கொலை செய்யப்படுவார். உடல் தேர்வில் நிர்வாணமாக ஆண் பெண் ஓட செய்யும் போது ஒரு பெண் தன் மார்பை கையால் மறைத்ததால் அவள் கொல்ல படுகிறாள். மேல் அதிகாரிக்கு போர் அடித்தால் அங்கு வேலை செய்யும் நபர்களை சுட்டு தள்ளுகிறார். குழந்தைகள் அந்த தொழிர்சாலை அதிகாரிகள் இடம் இருந்து தப்பிக்க கழுத்து வரை மலம் தேங்கி நிற்கும் கழிவறை பள்ளத்தில் இறங்கி மறைந்து கொள்வது கொடுரத்தின் உச்சம்.
இவ்வளவு சுயநலமாக இருந்த Schindler அங்கு நடக்கும் யூத இனப் படுகொலைகளை பார்த்து வருந்துகிறார். ஒரு முறை 10000 யூதர்களை கொன்று ஒரே இடத்தில் ஏறிக்கும் போது அந்த சாம்பல் சின்லர் தொழிர்சாலை எங்கும் பார்கிறது இதை பார்த்த சின்லர் மனம் வருந்தி கண்ணீர் விடுகிறார். தான் வாழ் நாள் எல்லாம் சம்பாதித்த பணத்தை வைத்து பாலருக்கு இலஞ்சம் கொடுத்து அந்த தொழிற்சாலையில் இருக்கும் 1200 யூத அடிமைகளை விலைக்கு வாங்கி தானக்கு இவர்கள் தேவை என் புதிய தொழிர்சாலைக்கு இவர்கள் வேலைக்கு தேவை என்று வாங்கி கொண்டு வந்து அவர் இடத்தில் எந்த வேலையும் இல்லாமல் தங்க வைக்கிரார். இறுதியில் நான் என் காரை விட்டு இருந்தால் இன்னும் பத்து பேரை காப்பாற்றி இருக்கலாம், என் பேனா தங்கத்தால் ஆனது இதை கொடுத்து இருந்தால் இன்னும் இரண்டு பேரை குறைந்தது ஒருவரை காப்பாற்றி இருக்களாம் என்று கண்ணீர் விட்டு அழுகிறார்.
சோவியத் படைகள் நான் உங்களை அடிமைகளாக வேலை வாங்கியதர்க்கு என்னை தூக்கி
இடும் என்று ஆப்ரிக்கா தப்பி சென்று விவசாயம் பார்த்து பிறகு இறந்து போகிறார், பிறகு அனைத்து அடிமைகளையும் சோவியத் படைகள் விடுதலை செய்கிறது, Schindler காப்பாற்றிய அந்த 1200 யூதர்கள் இன்று 10000 க்கு மேல் போலந்திலும் சொக்காவோஸ்கிவோ லும் இருக்கிறார்கள் அவர்கள் தங்களை "Schindler யூதர்கள்" என்று தான் இன்றும் சொல்கிறார்கள்.
இந்த உண்மை கதை Schindler's list என்று கருப்பு வெள்ளை படமாக Steven Spielberg இயக்கினார். தான் ஒரு யூதர் என்பதால் தான் இந்த படத்தை மிகைப்படுத்தி எடுக்கலாம் என்று பலரை இந்த படத்தை இயக்க சொன்னார் Steven Spielberg ஆனால் யாரும் முன் வராததால் அவரே இயக்கினார். 1994 ம் ஆண்டு அந்த படம் 6 ஆஸ்கர் விருதுகள் பெற்றது, மேலும் பல பிற விருதுகளை பெற்றது.. முடிந்தால் இந்த படம் பார்க்கவும் 3:10 மணி நேரம் நீண்ட படம்.

தோட்டியின் மகன்

தோட்டியின் மகன்

தோட்டியின் மகன்
ஆசிரியர் - தகழி சிவசங்கரன் பிள்ளை
தமிழில் - சுந்தர ராமசாமி
ஒரு தோட்டியின் மகன் வீடு வீடாக போய் மலத்தை மண்வெட்டியில் அள்ளி வளியில் போட்டு அதை பீப்பாய் வண்டியில் நிரப்பி அதை மலகிடங்கில் வந்து கொட்ட வேண்டும் இது தோட்டிகள் வேலை. ஏதோ மேல் எல்லாம் பீ நாற்றம் அடிப்பது போல புத்தகம் முழுவதும் நம்மையே அறியாமல் முகம் கோணிகொள்கிறது, மனது தீயில் நிற்பது போல இருக்கிறது.
எழுத்தாளர் இடம் ஒரு நீண்ட சாட்டை இருக்கிறது இது புத்தகம் முழுவதும் உங்களை தாக்கி காய படுத்தி கொண்டே வரும்.
"என்னப்பா இன்னைக்கு பாதிதான் இருக்கு எல்லா வீட்டுக்கும் போனயா?
எல்லா வீட்டுக்கும் போனேன் நேத்து எல்லாதுக்கும் தீனி  கொறவுபோல "
" என் வார்டுல நூத்துக்கு ஏழுவத்தஞ்சி அசீரணம் "
" மலத்தின் அளவு வைத்து சதி கூட பிரித்தார்கள் "
அவர்கள் மலத்தை வைத்து மனிதர்களை தெரிந்து கொண்டார்கள்.
மனிதர்கள் அன்றாடம் செய்யும் செயலுக்கு கூட அவர்கள் மிகவும் சிரமப்பட்டு செய்ய வேண்டும், நல்ல உணவு, உடை, நல்ல இருப்பிடம், குடிக்காமல் இருப்பது, பணம் சேமிப்பது, பிள்ளைகளுக்கு நல்ல பெயர் வைப்பது, வீடு கட்டுவது இப்படி எதுவுமே ஒரு தோட்டி செய்ய முடியாது.
எத்தனையோ இலட்சம் மக்கள் அந்த நகரத்தில் மூச்சு திணறி இறந்து இருக்கிறார்கள். சுவடே இல்லாமல் போன அந்த எண்ணற்ற ஆத்மாக்களின் சுவடு இந்த புத்தகம். அவர்கள் எல்லாம் திருநெல்வேலியில் இருந்து அழைத்து செல்லபட்டவர்கள்.
உங்கள் கண்ணில் இந்த புத்தகம் பட்டால் கட்டாயம் வாசித்து பாருங்கள்.

2016 நான் வாசித்த புத்தகங்கள்

2016 நான் வாசித்த புத்தகங்கள்

2016 -ஆம் ஆண்டு நான் வாசித்து முடித்த புத்தகங்கள் :
1).உடையார் - பாலகுமாரன் (6 பாகங்கள்)
2).என் அன்பு காதலா - பாலகுமாரன்
3).குரு - பாலகுமாரன்
4).இனிய யட்சினி - பாலகுமாரன்
5).கவிழ்ந்த காணிக்கை - பாலகுமாரன்
6).குன்றிமணி- பாலகுமாரன்
7).சக்ரவஹகம்- பாலகுமாரன்
8).தேடி கண்டுகொண்டேன்-பாலகுமாரன்
9).நந்தா விளக்கு - பாலகுமாரன்
10).முதல் யுத்தம் - பாலகுமாரன்
11).முதிர் கன்னி - பாலகுமாரன்
12).மெர்குரி பூக்கள் - பாலகுமாரன்
13).ஆதி ஆயுதம் - வேல ராமமூர்த்தி
14).சோழ நிலா - மூ. மேதா
15).எனதருமை டால்ஸ்டாய் - எஸ். ராமகிருஷ்ணன்
16).குமரி கண்டமா சுமேரியமா? - பா. பிரபாகர்
17).தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை
18).வீர மங்கை வேலுநாச்சியார்-குன்றில் குமார்
19).உப்பு வேலி - ராய் மாக்ஸம்
20).உலோகம் - ஜெயமோகன்
21).ஊமை சென்நாய் - ஜெயமோகன்
22).அறம் - ஜெயமோகன்
23).உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
24).கூடுகள் சிதைந்த போது - அகில்
25).கோபல்ல கிராமத்து மக்கள் - கி. ராஜநாராயணன்
26).கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்
27).சங்கதாரா - 'கலாச்சாரம்' நரசிம்மா
28).சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி
29).விசாரணை கமிஷன் - சா. கந்தசாமி
30).சொல்லப்படாத நிஜங்கள்-சா. கந்தசாமி
31).திராவிடத்தால் விழ்தோம் - குணா
32).பட்டாம் பூச்சி - ரா. கி ரங்கராஜன்
33).பாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்
34). பொன்னியின் செல்வன் - கல்கி
35).யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை - செர்கி நிலஸ்
36).வனவாசம் - கண்ணதாசன்
37).விடுதலை - அன்ரன் பாலசிங்கம்
38).வேங்கையின் மைந்தன் - அகிலன்
39).அசுரன் - ஆனந்த் நீலகண்டன்
40).வீரபாண்டியன் மனைவி - அரு. ராமநாதன் (3 பகுதிகள்) 

ஏழாம் உலகம் - ஜெயமோகன்



வணக்கம் ஜெ.

உங்கள்ஏ ழாம் உலகம் புத்தகம் படித்தேன், எப்படி உங்களால் அவர்கள் வாழ்கையை ஊடுருவி கண்டு எழுதினிர்கள் என்று வியப்பாக உள்ளது, எத்தனை குறையிருந்தாதுல் எப்படி அவர்களால் அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கையை வாழ முடிகிறது, நமக்கு எல்லாம் இருந்தும் எதோ ஒரு குறை சொல்லி வருத்தப்பட்டு கொண்டே இருக்கிறோம். குறிப்பாக குய்யன். அவர்களுக்கு ஒரு காதல் இருக்கிறது, அவர்களுக்குள்ளும் ஒரு தாய் இருக்கிறாள், இதை நாம் எப்போதாவது உணர்ந்து இருக்கிறோமா இல்லை, உங்கள் புத்தகம் எனக்கு அந்த உலகத்தை காட்டியது, எங்கள் பகுதியில் ஒரு பிச்சைக்காரன் இல்லை ஒரு உருபடி இருகிறார் அவர் எப்போதும் அம்மா, சித்தப்பா, பெரியப்பா, 2000 நோட்டு போடுங்க என்று நக்கல் அடிபார், நான் தினமும் அந்த வழியாக தான் போகிறேன் ஆனால் ஏழாம் உலகம் படித்த பிறகு தான் அவரின் கிண்டல் என் காதிற்கு எட்டியது. நாம்ம யாருக்கு என்ன பாவம் செஞ்சோம் என்று வெகுளியாக பண்டாரத்தின் மனைவியை சொல்வது எதிலும் நிறுத்தி எடை போடுவது என்றே தெரியவில்லை. எருக்குவை காவல்துறையே கற்பழித்தால் வேறு எங்கும் போய் முறையிடுவது? எருக்கு அதுக்கு காலு இல்ல, அதுக்கு எதுக்குடா காலு தூக்கி கேரியரில் வை என்று சொல்லும் காவல்துறை அதிகாரி என்றைக்கும் இருக்க தானே செய்கிறார்கள். (அதுவும் இடுப்பு ஒடையும் அளவுக்கு). இடையே வரும் பாடல்கள் அற்புதம். அதில் இந்த வரியை எனக்காக எடுத்து கொண்டேன்.

" சித்தம் உலையல்லோ
சீவன் தீயல்லோ
நித்தம் எரியுதடி-என் கண்ணம்மா
நின்று கொதிக்குதடீ. ""

மாங்காண்டி சாமியாரை கார்ப்பரேட் சாமியராக மாற்ற எவ்வளவு முயற்சிகள், எல்லாவற்றையும் மௌனம் என்னும் ஆயுதத்தால் முறியடித்து வெற்றுவிட்டாரே அகிம்சை எத்தனை உறுதியானது.

முத்தம்மை பீ காட்டில் கற்பழிக்கபடுகிறாளே, மனிதன் மகளிருக்கு என்று கண்டு பிடித்த மகத்தான ஒன்று அவளுக்கும் தானே இருக்கிறது, அது கற்பழிப்பு தானே? பதினெட்டு ஈனி இருக்காளே எத்தனை கற்பழிப்பு நடந்து இருக்கிறது, இந்த சமுகத்திற்காக எருக்கு, முத்தம்மை இருவரின் வாழ்க்கை என்ன செய்தி சொல்கிறார்கள் என்று நினைத்தால் சிந்தனை எங்கேங்கோ முட்டி மோதி உடைபட்டு போகிறது. உயிர் வாழ்வதின் மகத்துவத்தை இந்த ஏழாம் உலகத்து மனிதர்கள் இடம் கற்று கொள்ள வேண்டும். இப்போது எல்லாம் சாலை ஓரம் இருக்கும் அந்த ஏழாம் உலகத்து மனிதர்களை பார்க்காமல் கடந்து போக முடியவில்லை. வட்டார வழக்கு சொல்லுக்கு அகராதி கொடுத்தது சிறப்பு... எழுத்து பிழை மன்னிக்கவும். நன்றி.

அறம் சிறுகதைகள் - ஜெயமோகன்


அறம் சிறுகதைகள் - ஜெயமோகன்

ஒவ்வொரு கதையிலும் முக்கியமான பல வரிகள் தினம் தினம் மனதில் வந்து கொண்டே இருக்கிறது, ஒரு மந்திரம் போல .

ஓலைச்சிலுவை:
சாலையில் நடக்கும் போது திடீரென " நான் வேதகாரன் ஆயிடுதேன் சாயிபே, எனக்கு ரொட்டி கொடுங்க சாயிபே, ரொட்டி போதுமா? இன்னும் நிறைய ரொட்டி வேனும், என் வீட்டுக்கு கொடுக்கனும் என் தங்கச்சிக்கு கொடுக்கனும்"
என்று வாய் புலம்புகிறது. யாரோ ஒரு தந்தை தன் குழந்தைக்கு உணவு ஊட்டுவதை பார்த்தால் " ஜீவிச்ச நாள் முழுக்க கிடைத்தது எல்லாம் பிள்ளைக்கு பிள்ளைக்கு என்று கொண்டாந்து கொடுத்த மனுஷன், மனசறிஞ்சு ஒரு வாய் கஞ்சி குடிச்சது இல்லை, வல்ல இடம் பார்த்து பொதைங்க வாழைக்கோ தொன்னைகோ உரமாகட்டும்" என்று மனம் குழைகிறது. மானுட படைப்பில் வெள்ளைக்காரன் தான் உயர் படைப்பு என்று இருந்த காலத்தில் ஒரு வெள்ளைகார தொரை " அய்யா மாரே அம்மா மாரே வெள்ளகார தொர கையெடுத்துக் கும்பிடுரேன் கிலாத்தி சாபிடாதிங்கோ" என்று வீடு வீடாக சென்று சொல்ல அவரை தூண்டியது எது? அவர் அறிந்த ஏசு கிருஸ்துவா?. ஏசுவே என் மீப்பரே. ஒரு பேப்பர் பேனா கிடைத்தால் " குண்டி காஞ்சவனுக்கு எல்லாம் சாமியும் கல்லாக்கும்" என்று எழுதுகிறேன்.

யானை டாக்டர் :
என் வீடு காடு அருகில் இருக்கிறது நான் சிறு வயது முதல் ஆடு மேய்த்து கொண்டு அந்த காடு அருகில் இருக்கும் மலை முழுக்க சுற்றி உள்ளேன், ஆனால் எங்கும் பாலிதீன் பைகளோ மது புட்டிகளோ பார்த்ததும் கிடையாது. இப்போது காட்டு உள் சென்றால் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பைகள், மது பாட்டில்கள் கிடக்கிறது. எத்தனை யானை டாக்டர் வந்தாலும் மனிதனின் மது மோகத்திற்கு முன் நிற்கமுடியாது என்று தோன்றுகின்து. என் நண்பரின் அண்ணனை யானை அடித்து கொன்று விட்டது எனக்கு யார் மீது தவறு என்று தெரியவில்லை, யானை டாக்டர் படித்த பிறகு யானை மீது தவறு இல்லை என்று தோன்றுகின்து. மனிதர்களின் பெருக்கம் அதானல் புதிய கிராமங்கள், புதிய குடியிருப்புகள் தோன்றிவிட்டது, ஒரு வேளை நாங்கள் வசிக்கும் இடம் ஒரு காலத்தில் யானையின் இடமாக இருந்து இருக்க கூடும். ஏனோ யானை எங்கள் பகுதிக்கு வந்தது இதுவே கடைசியும் முதலும். ஒவ்வொரு முறையும் யானை இறந்த செய்தி கேட்டால் " ஒரு நாள் தமிழகத்தில் யானைகளே இல்லை என்று வரும் அப்போது மொத்த சங்க இலக்கியமும் போட்டு கொலுத்த வேண்டியது தான்" என்று மனம் உங்கள் வரியை சொல்கிறது. " இந்த தலைமுறை போல சபிக்கப்பட்ட தலைமுறை கிடையாது டாக்டர் எங்கள் முன் நிற்பது எல்லாம் வெறும் கட்டாவுட் மனிதர்கள் போலியான பின்பங்கள்" ஆமாம் உண்மைதான். "அதிகாரத்தை ரெண்டு வழியிலே மனுஷன் ருசிக்கலாம். கீழெ உள்ளவங்க கிட்ட அதை செலுத்திப்பாக்கலாம். மேலே பாத்து கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிண்டே இருக்கலாம். ரெண்டுமே பெரிய. திரில் உள்ள ஆட்டங்கள்".  அதிகாரம் செலுத்தும் வெத்து அதிகாரிகளை ஆடு மேய்க்கும் போது பல முறை பார்த்து இருக்கிறேன், பயங்கரமான மிரட்டல் அதிராக தோனி இன்றும் கூட இப்படியே தான் வருகிறார்கள், ஆடு மேய்பதற்கு அபராதம் என்று காசு வாங்குகிறார்கள், அவர்களுக்கு காசு தான் தேவை உண்மையில் காடு மீது அவர்களுக்கு எந்த அக்கறையும் கிடையாது, சொல்ல போனால் காட்டை காசுக்கு விற்பனை செய்கிறார்கள். வண்டு பெரிய ஆள் புழு குழந்தை, குழந்தையை யாராவது வெறுப்பாங்களா? இப்போது புழு குழந்தையை பார்த்தால் நசுக்குவது இல்லை. நாய் பற்றி பைரன் கவிதை அற்புதம்.
(என்ன இருந்தாலும் யானையாள் என் நண்பர் குடும்பம் பாதிக்கப்பட்டதால் இந்த கதையை அவனுக்கு பரிந்துரை செய்ய மனத்துனிவு இன்னும் வரவில்லை).

நூறு நாற்காலிகள் :
"அம்மா மரணப்படுக்கையில் இருக்கும் தகவலை குஞ்சன்நாயர்தான் வந்து சொன்னான்" கதையின் முதல் இந்த வரி ஏனோ மனதில் தங்கி விட்டது. நூறு நாற்காலிகள் என்ன? ஆயிரம் நாற்காலிகள் இருந்தாலும் அத்தனையும் சுரண்டல் பேர்வழி அரசியல் வாதிகள் கையில் தான் இருக்கிறது, அவர்கள் ஆட்டுவிக்கும் விதம் தானே ஆடமுடியும். சாதாரண நாயாடி பெண்ணுக்கும் ஒரே தாவலில் மாவட்ட ஆட்சியர் ஆகிய அவள் பையனுக்கு இடையே நடக்கும் உறவு போராட்டத்தை நுணுக்கமாக சித்தரிக்கிறது.

பெருவலி :
என்ன தான் முற்போக்கு பேசினாலும், கடைசியில் மானிட மனம் இந்த அற்ப மனித பின்டங்களை நம்பாமல் கடவுளை தேட தொடங்கி விடுகிறது என்று மீண்டும் இந்த கதை சொல்கிறது. கோமலின் வலி நம் முதுகு தண்டையும் கூச செய்கிறது.

சோறு கணக்கு :
உண்மையான மனித அறம் பற்றி பேசுகிறது, எத்தனை வருடம் காசு இல்லாமல் சாப்பிட்டு வந்தாலும் ஒரு நிலையில் அத்தனையும் திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்ற அறம் இருக்கிற வரை கெத்தேல் சாகிப் போல பாலர் அறம் ஆற்றி வாழலாம். இந்த கதை சொல்லியும் ஒரு வகையில் கெத்தேல் சாகிப் தான்.
அறம் :
எங்கோ நாம் ஏமாற்ற படும்போது ' என்னை எமாத்தி நீயும் உன் புள்ள குட்டியும் பொழச்சிடுவிங்கேளா? அப்படி பொழச்ச சரஸ்வதி தேவிடியானு அர்தம்' என்று மனம் சொல்கிறது. ஆமாம் அறம் தான் அது அவகிட்ட இல்ல இருந்தது.
வணங்கான் :
தலைப்பே கதை சொல்கிறது, அடக்குமுறையை சாட்டை கொண்டு ஒடுக்குகிறது.
கோட்டி:
நீதியும், நேர்மையும் அடுத்த தலைமுறை இடமே அல்லல் பட்டு அடிபட்டு சாகிறது. அறமும் ஓழுக்கமும் இல்லாத அடுத்த தலைமுறை அவரை படுத்தி எடுக்கிறது.
தாயார் பாதம் :
ஏனோ தாயார் பாதத்தின் அடிநாதம் எதுவென்று பிடிபடவில்லை.

மையில் கழுத்து, மத்துறு தயிர் இரண்டு மனித மனதின் நுன் உணர்வுகளை ஆழமாக அழகிய நடையில் சொல்கிறது. மத்துறு தயிர் என்ற கம்ப ராமாயணம் பாடல் விளக்கம் அருமை. தந்தை மகனுக்கும் உள்ள உணர்வு.

ஏன் வாசிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்பவர்களுக்கு அறம், ஓலைச்சிலுவை இரண்டு கதையை வைத்து  சுக்கமாக விளக்கி இருக்கிறேன். இதில் வரும் அறமும், உண்மை, நேர்மை எல்லாம் வாசிப்பு தான் கற்று தரும் என்று சொல்வேன் பல இடங்களை மேற்கோள் காட்டுவேன்.

நான் முதலில் வாசித்த உங்கள் படைப்பு அறம் தான். அதனால் தான் என்னவோ மனதில் ஆழமாக தங்கிவிட்டது.
நன்றி... 

தண்ணீர் - அசோகமித்திரன்




அசோகமித்திரன் - தண்ணீர்



எத்தனை எளிமையான எழுத்து நான் உங்களை விட அதி மேதாவி நான் எழுத்தாளன் என்று ஒரு இடத்தில் கூட குழப்பமான அறிவாளி தனமான வரி என்று நாவல் முழுக்க ஒரு இடத்தில் கூட கான இயலவில்லை. அதே அளவுக்கு சற்று குறையாத அளவுக்கு மனித மனதின் ஆழத்தை ஊடருத்து கண் முன் வைக்கிறார், வாழ்க்கை இத்தனை கொடுமையானதாக இருந்தாலும் ஏன் வாழ வேண்டும் என்று எளிமையாக சிந்திக்க வைக்கிறார். சென்னையில் தனியாக வசிக்கும் ஜமுனா, சாயா என்ற இரு பெண்களின்  வாழ்க்கை வழியாக நாவலில் பயணம் தொடர்கிறது. தொடர்வண்டி போல மெதுவாக தொடங்கி பின் வேகம் கூடிகொண்டே போகிறது அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து பயணிக்க வேண்டியது வாசகனின் கடமை. சென்னையில் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் தண்ணீர் கிடைப்பது என்பது எவ்வளவு கடினமான ஒரு என்று சொல்கிறது நாவல், கதை கலம் 1980 என்று வைத்து கொள்ளலாம் குழந்தைகள் கழிவறையில் மலம் கழித்தால் தண்ணீர் வேண்டும் என்று தெருவில் குழந்தைகள் மலம் கழிக்கிறார்கள் அதை பல்லம் தோண்ட வரும் கார்ப்பரேஷன் கார்கள் தெருவில் குழி தோண்டி போட்டு விடுவதால் அந்த பகுதியில் எந்த வாகனமும் சரியா போக முடியாது, அவர்கள் தோண்டும் குழியால் சாக்கடை தண்ணீர், குடி தண்ணீர் ஒன்றாகிவிடுவது சென்னையில் சாதாரண ஒன்றாக இன்று இருக்கிறது. பின்பு டான்க் வைத்து லாரி மூலம் தண்ணீர் விடுவார்கள் லாரிக்கு 300 என்று அந்த லாரி டிரைவர் அந்த எளிய மக்களிடம் சுடண்டுகிறான். அந்த காலத்தில் 300 ரூ என்றால் எவ்வளவு பெரிய தொகை அதே தான் இன்று பெரிய தொழிலாக வளர்ந்து நிற்கிறது.
ஜமுனாவை பாஸ்கர ராவ் என்பவன் சினிமாவில் நடிக்க வைப்பதாக சொல்லி கூட்டி போய் ஆந்திர மாநில தடியர்கள் முன் நிர்வாணமாக ஓட வைக்கிறான் பிறகு ஒரு பிள்ளையும் கொடுத்து விடுகிறான் இந்த உறவு பிடிக்காத சாயா ஹாஸ்டலில் தங்க போய்விடுகிறாள் ஜமுனாவை தனிமை வாட்ட தற்கொலைக்கு முடிவு செய்கிறாள் இதை வீட்டு ஓனர் பார்த்து விட்டு வீட்டை காலி செய்யசொல்லி தொல்லை. சாதாரண பெண்ணக வந்து போகும் டீச்சரம்ம ஒரு இடத்தில் வெடிக்கிறாள் அந்த வெடிப்பில் வாழ்கையை எதிர்கொள்ளும் சக்தியை ஜமுனா பெறுகிறாள் இது நாவளின் முக்கியமான இடம். பெண்ணா பொறந்துட்டு அழலாமோடி? என்று கேட்கும் டீச்சரம்மவின் கேள்வில் எத்தனை துயரங்கள் மறைத்து கிடக்கிறது. இலாதவனின் காமம் எத்தனை வெறி கொண்டு வெளிப்பட்டு வலிப்பாக டீச்சரம்மவின் கணவனுக்கு வருகிறது என்பதை சொல்லும் இடம் அற்புதம். அதோ இரண்டு குழந்தைகள் தூக்க முடியாமல் தண்ணீர் குடத்தை தூக்கி கொண்டு போகிறதே அந்த தண்ணீர் அந்த குழந்தைக்க? இல்லை யாரோ அவர்களை செய்ய வைத்து இருக்கிறார்கள் வாழ்கையில் யாருக்கு தான் கஷ்டம் இல்லை? அதற்காக அந்த குழந்தைகள் என்ன சாகிறேன் என்றா போகிறது?. டீச்சரம்மா விடம் இருந்து வாழ்தலுக்கான உந்துதல் ஜமுனாவிற்கு கிடைக்கிறது, வாசகனுக்கும் தான். ஜமுனா உன் குழந்தைக்கு அப்பா வேண்டாமா, நாளை ஊரார்க்கு எப்படி பதில் சொல்வது என்று சாயா கேட்கிறாள், ஜமுனா எதற்கு அப்பா நமக்கு எல்லாம் அப்பா இருந்தாரா என்ன? என்று சர்வசாதாரணமாக கேட்கிறாள்,நாளை தானே உலகம் கேள்வி கேட்கும் நாளை பதில் சொல்லிகிறேன் இன்று ஏன் கவலை பட வேண்டும்? என்று சொல்கிறாள். ஆமாம் அந்த இரண்டு பெண்களுக்கு என்ன ஆயிற்று ஏன் தன்னம்தனியாக இருகிறார்கள், ஏன் என்ற கேள்விக்கு எல்லாம் வாசகர்கள் விடை கண்டுகொள்க வேண்டும். இருவரும் சமைக்காமல் வெளியே கிளம்பும் போது 'பாவம் புது குக்கர்' ஏமாந்து போகும் என்று சொல்கிறாள். அவளை நினைத்து நாம் எல்லோரும் வருத்த படுகிறற்கள் ஆனால் அவள் உயிரற்ற குக்கருக்கு கவலை படுகிறாள். இப்படி பட்ட பெண்களை தான் இந்த சமுகம் வாழ்நாள் முழுவதும் ஏமாற்றி வருகிறார்கள், மென்மையான பெண்களை சமுகம் வெறும் காமப் பொருளாக மட்டுமே நடத்துகிறது. எதன் பொருட்டு ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு உதவி செய்ய முன் வருகிரான்? என்ற கேள்வியை எழுத்தாளர் நம் முன் வைக்கிறார், ஆமாம் அதன் அடி ஆழத்தில் இருப்பது காமம் தான் அது தான் அவனை தூண்டுகிறது.
சில இடங்களில் பிராமணர்கள் மீதான ஒடுக்கு முறையை தொட்டு செல்கிறது.
 பாஸ்கர் ராவ் கார் சேற்றில் மாட்டி கொள்கிறது
"இடது பக்க இரண்டு சக்கரம் சேற்றில் சிக்கியது, சாயா ஜமுனாவின் கையை பிடித்தாள் ''

என்று கதை முடிகிறது இந்த குறியீடு எதை குறிக்கிறது என்று சிந்தித்தால் வாசகனின் வாசிப்பு பூர்த்தி அடையும். அசோகமித்ரன் படைப்பில் தண்ணீர் குறிப்பிடத்தக்கது.

Sunday, August 13, 2017

ஆறுமுகன் அவதாரம்

‘சான்றோர்களே கேளுங்கள்! மலையிலிருந்து வெண்மேகமும் நீரோடைகளும் கற்பாறைகளும் எரிமலைக்குழம்பும் பிறக்கின்றன. அழிவற்றவரான காசியப பிரஜாபதியின் கனிவும் கடுமையும் முனிவும் சோர்வும் கொண்ட கணங்கள் எழுந்து மைந்தர்களாயின. அவர் உளம் கடுத்த கணத்தில் உருவான வஜ்ராங்கன் என்னும் மைந்தன் இறுகிய உடலும் அதனுள் இறுகியமனமும் கொண்டவனாக இருந்தான். தன் அகமும்புறமும் இறுகியிருப்பதைக் கண்டு அவன் வெட்கினான். தன்னை நெகிழ்த்து நீராக்கி மேகமாக்கி வானாக விரிய அவன் விழைந்தான்.
பிரம்மனை எண்ணி தவம்செய்ய முற்பட்ட வஜ்ராங்கன் வராங்கி என்னும் பெண்ணை மணந்தான். கடம்பவனத்துக்குள் ஒரு மரத்தடியில் அமர்ந்த அவன் தன் முன் சிற்றகல் ஒன்றை ஏற்றி வைத்தான். அச்சுடரை அணையாமல் பார்த்துக்கொள்ளும்படி வராங்கியிடம் சொல்லிவிட்டு ஊழ்கத்திலாழ்ந்தான். முதலில் கண்ணிலும் பின் கண்ணகத்திலும் அதன்பின் அகத்திலும் அதன்பின் அகத்தகத்திலும் அச்சுடரை நிறுத்தி தன்னை விலக்கி தானதுவாக ஆனான். அவன் அகம் தழலென நெகிழ்ந்து நெகிழ்ந்து சென்றது.


தவம் முதிர்ந்தபோது அந்த அகல்சுடர் மேலும் ஒளிகொண்டது. அந்த வெண்ணொளி வளர்ந்து ஒரு வானளாவிய மரமாக ஆனது. அந்தமரத்தின் கிளைகளில் தழலிலைகள் துளிர்த்தன. தழல்மலர்கள் இதழிட்டன. அச்சுடரின் ஒளியில் பிரம்மன் தோன்றும் கணம் மென்மழை ஒன்று பெய்து சுடர் அணைந்தது. சினந்து கண்விழித்த வஜ்ராங்கன் வராங்கியைத் தேடினான். அவள் ஒரு மரத்தடியில் நின்று கண்ணீர்விடுவதைக் கண்டான்.
“என் விழிநீரே அச்சுடரை அணைத்தது” என்றாள் வராங்கி. வஜ்ராங்கன் தவம் செய்துகொண்டிருந்தபோது இந்திரன் வந்து அவள் கற்பை கவர்ந்ததைப்பற்றிச் சொன்னாள். யானையாக வந்து அவளை அச்சுறுத்தினான். பாம்பாக வந்து அவளைத் தீண்டினான். அவள் மயங்கியபோது மன்மதனாக வந்து அவளைப் புணர்ந்தான். “உங்கள் தவம் பொய்க்க என் நிறையை அவன் வென்றான்” என்றாள் வராங்கி.
கடும்சினம்கொண்ட வஜ்ராங்கன் தன் முன் ஒரு கற்பாறையை நட்டு அதை தன் கண்ணிலும் கண்ணுள்ளிலும் உள்ளிலும் உள்ளுள்ளும் நிறைத்து மீண்டும் தவத்திலாழ்ந்தான். அவன் அகம் இறுகி இறுகி எடைமுதிர்ந்தபோது அந்தப்பாறை ஒரு கரிய வைரமாகியது. அதன் ஆடிப்பரப்பில் பிரம்மன் தோன்றினான். “என் தவத்தை அவமதித்த தேவர்களைக் கருவறுக்கும் மைந்தன் ஒருவன் எனக்குத்தேவை” என்றான் வஜ்ராங்கன். “என் தவத்தின் மேல் ஆணை. இதை தேவபிதாவான நீங்களும் கேட்டாகவேண்டும்” என்றான். சான்றோரே தவத்தின் விளைவுக்கு தெய்வங்கள் அடிமை. தன் மைந்தரை அழிக்கும் வரத்தை அளித்து பிரம்மன் கண்ணீருடன் மீண்டான்.
வராங்கி வயிறுகனத்து ஈன்றமகவின் உடல் நூறுகோடி யுகங்கள் விண்நெருப்பில் வெந்து திசையாமைகளின் எடையில் அழுந்தி உருவான கரியவைரத்தால் ஆனதாக இருந்தது. அவன் கற்பாறைகளை தன் கைகளால் சந்தனக்குழம்பென அள்ளி எடுக்கக்கூடியவனாக இருந்தான். ஆயிரம் மடங்கு எடையுடன் அவன் விண்வெளியில் சுழன்று ஒரு வான்மீனானான். ஆகவே அவன் தாரகாசுரன் என்று அழைக்கப்பட்டான்.


தாரகன் ஐந்துநெருப்புகளை வளர்த்து அதன்நடுவே நின்று பிரம்மனை நோக்கி தவம்செய்தான். பாறைகள் உருகியோடும் வெம்மை அவனை அழிக்கவில்லை. வெம்மை அவன் அகத்தை மேலும் மேலும் இறுக்கியது. அவ்வெம்மையின் உச்சத்தில் பிரம்மன் தோன்றினான். “இறப்பின்மை வேண்டும் எனக்கு” என்றான் தாரகன். “அவ்விதியை அளிக்க மும்மூர்த்திகளுக்கும் உரிமை இல்லை” என்றான் பிரம்மன். “அப்படியென்றால் என் இறப்பு ஏழுவயதான குழந்தையின் கையால் மட்டுமே நிகழவேண்டும்” என்றான் தாரகன். அவ்வரமளித்து பிரம்மன் புன்னகையுடன் சென்றான்.
சாகாவரம் பெற்றவன் என்று எண்ணிய தாரகன் மண்ணை அடக்கினான். பின் ஏழு விண்ணகங்களையும் வென்றான். தேவர்களை தன் ஏவலராக்கினான். இந்திரனை தன் தேர்க்காலில் கட்டி இழுத்து கொண்டுசென்று தன் மாளிகைப்பந்தல்காலில் கட்டிப்போட்டான். பிழையுணர்ந்து கண்ணீர் விட்ட தேவர்கள்  தாரகனை வெல்லும் வழி தேடினர். முக்கண் முதல்வனே காக்கமுடியுமென்று தெளிந்தனர்.
அவர்களின் கண்ணீரைக் கண்டு முக்கண்ணன் கனிந்தான். அவனுடைய படைப்புசக்தி கங்கையில் ஓர் வெண்ணிற ஒளியாக விழுந்தது. கங்கை அதை சரவணப்பொய்கையில் ஒரு தாமரை மலரில் அழகிய சிறு மகவாக பிறப்பித்தது. சரவணப்பொய்கையில் நீராடவந்த கார்த்திகைப்பெண்கள் அறுவர் அக்குழந்தையைக் கண்டனர். அறுவரும் அதற்கு அன்னையராக விரும்பி அதை ஆறுதிசையிலிருந்தும் அள்ளத்துணிந்தனர். அவர்களின் அன்பைக்கண்டு அக்குழந்தை ஆறுமுகம் கொண்டு புன்னகைசெய்தது. ஆறுமுகனாகிய கார்த்திகேயனை வணங்குக! அவன் கருணையால் வாழ்கின்றன மண்ணும் விண்ணும்.
ஏழு பெருங்கடல்களின் நீரால் திருமுழுக்காட்டி ஏழுவயதான குமரனை தேவர்களுக்கு சேனாபதியாக அமர்த்தினர் முதல்மூவரும். கண்டாகர்ணன், லோகிதாக்‌ஷன், நந்திஷேணன், குமுதமாலி என்னும் நான்கு படைத்துணைவர்களைத் தன் மைந்தனுக்களித்தார் முக்கண்ணன். பிரம்மன் ஸ்தாணு என்னும் படைச்சேவகனை அளித்தார். விஷ்ணு ஸம்க்ரமன், விக்ரமன், பராக்ரமன் என்னும் மூன்று கொடித்துணைவர்களை அளித்தார். வல்லமை வாய்ந்த விண்ணக நாகங்கள் ஜயன், பராஜயன் என்னும் இரு தேர்த்துணைவர்களை அளித்தன.
ஊழித்தீயின் வெம்மை எரியும் வைரமேனி கொண்ட தாரகனை வெல்ல தேவர்களால் இயலாது, அன்னையரின் படையாலேயே இயலுமென்றனர் விண்ணோர்குலத்து நிமித்திகர்கள். ஏழுவயதான கந்தன் சென்று தன் மெல்லிய விரல்களால் தொட்டதும் மண்ணிலுள்ள புனிதநீர்க்குளங்களெல்லாம் கனிந்து அன்னையராக மாறி எழுந்தன. சோமதீர்த்தம் வசுதாமை என்னும் அன்னையாகியது. பிரபாச தீர்த்தம் நந்தினி என்னும் தாயாகியது. இந்திர தீர்த்தம் விசோகையையும் உதபான தீர்த்தம் கனஸ்வானையையும் அளித்தன.
சப்தசாரஸ்வதம் கீதப்பிரியை, மாதவி, தீர்த்தநேமி, ஸ்மிதானனை என்னும் மாதாக்களாகியது. நாததீர்த்தம் ஏகசூடையையும், திரிவிஷ்டபம் பத்ரகாளியையும், த்விருபாவனம் மகிமோபலியையும், மானசதீர்த்தம் சாலிகையையும் பிறப்பித்தன. பதரிதீர்த்தம் சதகண்டையையும், சதானந்தையையும், பத்மாவதியையும், மாதவியையும் பிறப்பித்தது. மண்ணிலுள்ள அனைத்து குளிர்நிலைகளும் அன்னையராகி எழ அவர்களின் தண்மொழிகளாலும் மழைவிழிகளாலும் விண்ணகமே குளிர்ந்து மெய்சிலிர்த்தது. அவர்களின் படை விண்ணில் ஒரு நீலப்பேராறாகப் பாய்ந்தது.
சான்றோரே, அன்று மண்ணில் குளிர்ந்த விழியென கருணைகொண்டு விண்ணைநோக்கியிருந்த ஸித்ததீர்த்தம் என்னும் நீலக்குளம் ஸித்தி என்னும் அன்னையாகி தன் நீலக்குளிரலைகளை ஆடையாக்கி தன்னுள் விழுந்த மின்னலை புன்னகையாக்கி அலைநாதத்தை நூபுரத்தொனியாக்கி கார்த்திகேயனை அடைந்தாள். அவன் பின்னால் அணிவகுத்த அன்னையரின் பெரும்படையில் தானும் இணைந்துகொண்டாள்.
கருடன் தன் மைந்தனான மயிலை சுப்ரமணியனுக்கு அளித்தான். அருணன் தன் மகவாகிய பொற்சேவலை அளித்தான். அக்னி ஒளிவிடும் வடிவேலை அளித்தான். அத்ரி சிறுமைந்தனுக்கு செம்பட்டாடை அளித்தார். பிரகஸ்பதி யோகதண்டமும் கமண்டலமும் அளித்தார். விஷ்ணுவின் மணிமாலையும் சிவனின் பதக்கமும் இந்திரனின் முத்தாரமும் அவனை அணிசெய்தன.
தாரகாசுரன் தன் படைத்துணைவனான மகிஷனுடன் போருக்கெழுந்தான். மாபலி பெற்ற மைந்தனான பாணாசுரன் அவனுக்கு ரதமோட்டினான். தாரகாசுரனின் மைந்தர்களான தாரகாக்‌ஷன், கமலாக்‌ஷன், வித்யுமாலி ஆகியோரும் பெருவலிகொண்டவர்களான அண்டகாசுரன் ஹ்ருதோதரன் திரிபாதன் ஆகியோரும் அவனுக்காக படைநடத்தினர். ஏழு மன்வந்தரங்கள் அகாலப்பெருவெளியில் நடந்தது அந்தப்பெரும்போர்.
தாரகனின் எல்லையற்ற பெருவெம்மையை அன்னையரின் குளிர் அணைத்தது. அவனுடைய வைரநெஞ்சம் அவர்களின் கருணைகண்டு இளகியது. வல்லமை இழந்து அடர்களத்தில் நின்ற அவனை பன்னிருகைகளிலும் படைக்கலம் கொண்டு வந்த பேரழகுக்குழந்தை எதிர்கொண்டது. அதன் அழகில் மயங்கி மெய்மறந்த விழிகளுடன் நின்ற அவனை அக்குழந்தை வென்றது. தன் காலடியில் ஒரு கருநாகமாக என்றுமிருக்க அருள்செய்தது. தேவசேனாதிபதியின் ஒளிர்கழல்களை நெஞ்சிலணிக! அவன் பெயரை நாவிலணிக! அவன் அழியாப்பெருங்கருணையை சிந்தையில் அணிக!
போர் முடிந்ததும் ஒவ்வொரு அன்னையையும் பேரெழில்குமரன் கட்டித்தழுவி முத்தமிட்டனுப்பினான். ஸித்தி அவனுடைய ஆறு செங்கனிவாய் முத்தங்களைப் பெற்று மண்ணுக்கு மீண்டாள். பிற அன்னையரைப்போல அவள் அகம் அடங்கவில்லை. மீண்டும் அந்த முத்தங்களைப்பெற அவள் விழைந்தாள். அவள் திரும்பிப்பார்த்தபோது அறுமுகத்து அண்ணலிருந்த இடத்தில் இருப்பும் இன்மையும் அற்ற பெரும்பாழே திகழக்கண்டாள்.
அவளுடைய விருப்பு அவளை மீண்டும் பிறக்கச்செய்தது. ஏழு பிறவிகளில் ஆறு மைந்தர்களுடன் அவள் மண்ணில் பிறந்துகொண்டே இருக்கிறாள். ஆறுமுகம் கொண்ட மைந்தர்களால் அணிசெய்யப்பட்டவள் ஸித்தி. ஆறுமுறை விண்ணால் அருள்புரியப்படுபவள். ஆறுமுறை மண்ணால் வாழ்த்தப்படுபவள். அவள் வாழ்க!’

நன்றி ஜெயமோகன். 

Monday, August 7, 2017

கொலைஞன் - தஞ்சை பிரகாஷ்



இருபத்து ஐந்து பக்கங்கள் கொண்ட மிகச்சிறந்த சிறுகதை,
25 நாள் ஒரு குடும்பம் பட்டினி கிடக்கிறது, எட்டு பேர் வீடு முழுவதும் செத்து நுரைத்து கிடக்கிறார்கள்  அம்மா, தம்பி, தங்கச்சி உடல்கள். வேறு எதால் செத்தாலும் அது வெறும் சாவு, ஆனால் பசியால் செத்த அது கொலை பச்சை கொலை. இந்த கொலைக்கு யார் காரணம்? பார் இந்த கொலைக்கு பொறுப்பு? உங்கள் சட்டம் அவர்களை தண்டிக்குமா?. இந்தியாவில் குறிப்பிட்ட அளவு குழந்தை உணவுயின்றி மடிகிறது, இறப்கதற்காகவே பிறப்பெடுக்கிறது ?!. பரலோகத்தில் பசியின்றி இருக்கும் கடவுளுக்குற பசியின் கொடுமையை எப்படி புறிய வைப்பது?. கில்லர் ரெங்கராஜன் ஒரு கொலைகாரன், அப்போது இந்த சமுகம்? குற்றவாளிகள் எப்படி உருவாகிறாற்கள் கொலைகாரனாக மாற்றுகிறது. அரசியல் வாதிகள் தங்கள்சுகதள்திற்காக பதினாறு வயது உள்ள பெண்ணை ஏமாற்றுகிறார்கள் பிறகு அமிலம் கொண்டு அவளை உருக்கி கறைத்து சாக்கடையில் கலக்கிறார்கள் அவர்களுக்கு கில்லர் ரெங்கராஜன் தேவை, அரசியல் வாதிகளுக்கு கில்லர் ரெங்கராஜன் தேவை. அவனை உருவாக்கி விட்டனர் அவன் இல்லை என்றால் வேறுயாரையோ அவர்கள் தயார் செய்வார்கள். மரணமும் பசியும் அவனை துரத்துகிறது. கொலைகாரனின் மனம், வாழ்க்கையை இரத்தமும் சதையுமாக கண்முன் நிறுத்துகிறார் எழுத்தாளர், கில்லர் ரெங்கராஜன் அவன் உணர்வை புரிந்து கொள்ள உலகில் யாரும் இல்லை, இறுதியில் அவன் மனைவி சகுந்தலா அவனை முழுமையாக புரிந்து கொள்கிறாள், எவ்வளவு சிக்கலான ஒரு கொலைகாரனை அவள் சரியாக ஆழமாக புரிந்து கொள்கிறாள் என்ற போது நமக்கே ஏதோ சிலிர்ப்பாக இருக்கிறது.

"உலகத்தில் எந்த இலக்கியத்திலும் இப்படி ஒரு கதை இல்லை என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா சொல்கிறார்".


வாசிக்க இங்கே சொடுக்கவும்.

கொலைஞன் 

வந்தேறிகளா??





தமிழை வளர்ப்பது என்பது, அல்லது தமிழை அடுத்த தலைமுறைக்கு கையளிப்பது, தமிழை அழியாமல் பாதுகாதது நிட்சயமாக எழுத்தாளர்கள் தான். அவர்கள் ஏட்டில் எழுதி எழுதி தான் இன்றைய தமிழ் வடிவம் நமது கைக்கு வந்து சேர்ந்து உள்ளது. வாய் மொழியில் பல ஆயிரம் ஆண்டுகளாக கடத்தப்பட்ட தமிழ் மொழி, கடந்த ஐம்பது ஆண்டில் மிக மோசமான அறிவையும், மாற்றத்தையும் அடைத்து முகம் சிதைந்து தமிங்கலமாக இருக்கிறது இன்றைய பேச்சு மொழி தமிழ். ஆனால் எழுந்து வடிவில் பார்த்தால் தமிழ் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்க வேவையான இலக்கிய படைப்புகள் இருக்கிறது, என்று ஓரளவு பெருமை பட்டு கொள்ளலாம்.

" தமிழை வளப்பது என்பது தமிழ்கா உயிரை கொடுப்பது அல்ல,
தமிழை உலக அரங்கில் ஒரு படி மேலே உயர்த்துவது தான் "

அப்படி தமிழை உலக அரங்கில் ஒரு படி உயத்தியவர்கள் தமிழை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் பலர் தமிழ் மீது கொண்ட ஈர்பால் தமிழுக்கு பெரும் தொண்டு செய்து உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. 'ஜி யு போப்' தொடங்கி இன்று 'ஜெயமோகன்' வரை பலர் தமிழுக்காக அறும்பாடு பட்டு இருக்கிறார்கள். நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளான குறிப்பிடத்தக்கவர்கள் என்றால் குறைந்தது ந.பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் (கு.ப.ரா), திருலோக சீத்தாராமன் என்று சொல்லலாம். இவர்கள் மூவரும் தெலுங்கு தாய் மொழியாக கொண்டார்கள். அப்படி தமிழ்க்காக தங்களை அற்பனித்து கொண்டவர்களை அவர்கள் காலத்தில் வந்தவர் அடையாளம் கண்டு கொண்டாடினார்களா? அவர்கள் வாழ்க்கை தரம் எப்படி இருந்தது என்றால் அய்யோ பரிதாபம் தான். பாரதியை பட்டினி போட்டு முப்பது எட்டு வயதிலே கொன்ற தமிழ் சமுகத்திற்கு அவரின் அருமை பெருமை எல்லாம் அவர் காலத்திற்கு பிறகே தெரிந்தது.

இன்று இளைஞர்களின் கதாநாயகனாக, அவரை தலைமேல் வைத்து கொண்டாடும் இளைஞர்கள் பாரதியார் வாழ்ந்த காலத்தில் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் உண்மை. பாரதியார் பாடல்களை அவரது தம்பி விஸ்வனாத ஐய்யர் இடம் இருந்து ஒரு குஜராத் சேட்டு வாங்கிவிட்டார், பிறகு அந்த சேட்டு விடம் இருந்து எ. வி மொய்யபன் செட்டியார் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து வாங்கினார், இதனால் பாரதியார் கவிதைகளை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதை அறிந்த அப்போதைய முதல்வர் ஓமந்தூரார் எனப்படும் ஓமத்தூர் செட்டியார் (கன்னடர்) உடனடியாக இதில் தலையிட்டு எ வி மொய்யபன் செட்டியார் இடம் இருந்து பாரதியார் கவிதைகளை வாங்கி அனைவரும் பயன்படுத்தும் வகையில் வழி செய்தார். ஓமந்தூர் செட்டியாரை பார்க்க வேண்டும் என்றால் அவர் விவசாயம் செய்யும் அவரது வயலுக்கு தான் செல்ல வேண்டும். தமிழகத்தின் முதல்வர் ஒரு இத்தனை எளிமையாக வாழ்ந்தார் என்று இந்த கால இளைஞர்களுக்கு தெரியவில்லை. ஆனால் கருணாநிதியை தெரியும் கருணாநிதியை உதாரணம் காட்டி ஒட்டு மொத்த கன்னடர்களை ஈழிப்பது உதாசீனம் செய்வது தற்போதைய தமிழ் சுழலில் உச்சத்தை தொட்டு உள்ளது என்பது தான் உண்மை. எடுத்த எடுப்பிலேயே இவர் தமிழரா வேற்று மொழி காரரா என்ற ஆராய்ச்சி தொடங்கி விடுகிறது, அவர் வேறு மொழி காரர் என்று தெரிந்த உடனே வாய்க்கு வந்த வசை எல்லாம் அவர் மீது கொட்டுவது, அவர் எழுத்தில் ஒரு வரி கூட வாசிக்காமல் அவர்மீது வசை படுவது. இதற்கு தற்போதைய உதாரணம் ஜெயமோகன், அவர் மலையாள நாயாடி குடும்பத்தில் பிறந்தவர், பொதுவாக போரை வெறுப்பவர் அதனால் ஈழத்தில் நடந்த போரை இரண்டு தரப்பிலும் எதிர்த்தவர், இந்த இரண்டு காரணங்கள் தான் அவரை வசை பாடுபவர்களுக்கு தெரியும், அவர் எழுத்தை ஒரு வரி கூட வாசித்து இருக்கமாட்டார்கள் இனியும் வாசிக்க மாட்டார்கள். அவர் எழுதிய "மாடன் மோட்சம்" ஒரே ஒரு சிறு கதை போதும் அவர் யார் என்று சொல்ல. கி. ராஜநாராயணன் கூட கன்னட மக்களை பற்றி எழுதியிருக்கிறார் அவர் கனடன் என்ற குற்றச்சாட்டு கண்மூடித்தனமாக வைக்கிறார்கள், ஆனால் அவரின் எழுத்து தான் தமிழை இந்திய அளவில் கொண்டு சென்றது தமிழுக்கு ஒரு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது, அதனால் அவர் படைப்புகள் பிற மொழியில் மொழி பெயர்க்கபட்டது உலகத்திற்கு தமிழ் படைப்பு சிறிதளவேனும் சென்றடைந்தது. தமிழை நேசித்து தமிழ்கு தங்களை அற்பனித்த மனிதர்களை கண்மூடித்தனமாக எதிர்ப்பது சரியா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுகொள்வோம். 

மலைவாசல்- சாண்டில்யன்




மலைவாசல் - சாண்டில்யன் 
பக்கங்கள்     : 486
கதை களம்   : கைபர் கனவாய் மலை பிரதேசம் 
பதிப்பகம்      : வானதி பதிப்பகம் 
கதை காலம் : கி. பி 460-470

இந்தியாவை நடுநடுங்க வைத்த படையெடுப்புகளில் ஒன்று ஹீணர்கள் என்னும் நாடோடிகள் படையெடுப்பு, ஹீணர்கள் அரக்கர்கள் கருணை என்பதை அறியாத காட்டு மிராண்டிகள் கூட்டம். இந்தியாவின் செல்வ வளத்தை கொள்ளையடிக்க கைபர் கனவாய் வழியாக இந்தியாவில் நுழைந்து நாசம் செய்தார்கள். அப்போது குப்தபேரரசு காலம் பாடலிபுத்திரம் தலை நகராக கொண்டு ஆட்சி செய்தார்கள். நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக ஆனது தங்கத்தின் மதிப்பு 103ல் இருந்து 73 ஆக சரிந்தது. ஸ்கந்தகுப்தர் உடல் நிலை இல்லாமல் படுக்கையில் படுத்தார் ஹீணர்கள் இந்தியாவில் கால் வைத்துவிட்டார்கள், இந்த படையெடுப்பை ஸ்கந்தகுப்தன் தனது படை தளபதியான ஆஜித் சந்ரனை வைத்து எப்படி முறியடித்தார் என்பது தான் கதை.
பல்வேறு திருப்பங்கள் உடன் கதை சலிப்பில்லாமல் விறு விறு என நகர்கிறது, திடீர் திடீர் என்று பல திருப்பங்கள் வாசிப்பை தடையில்லாமல் நகர செய்கிறது.
ஹீணர்கள் தலைவன் அடிலன் இடம் உபத்தியான் (அஜித் சந்திரன்) சிக்கி கொள்கிறான், அடிலன் இடம் அடிமையாக இருந்து கொண்டே ஒரு உளவாளியாக எப்படி குப்தபேரரசுசை ஹீணர்கள் இடம் இருந்து காக்கிறான் என்பது தான் கதை, இது ஒரு புறம் நடக்க ஸ்கந்தகுப்தன் தம்பி பூரகுப்தன் தன் தாய் ஆனந்தா தேவி உடன் சேர்த்து ஆட்சி பிடிக்க சதி செய்கிறான், எல்லாவற்றையும் எப்படி முறியடித்து ஸ்கந்தகுப்தன் வெற்றி வாகை சூடுகிறான் என்பது தான் கதையின் இறுதி பகுதி.... இது வரலாறு உண்மை சம்பவம், கதைக்காக சில கற்பனை பாத்திரங்கள் உருவாக்க பட்டு உள்ளது.

கதை மாந்தர்கள் :
அடிலன்(ஹீணர்கள் தலைவன்), சித்ரா தேவி (அடிலன் மகள்), தோரமான (அடிலன் படை தலைவன்), காமினி (மலைவாசல் பெண்), பல்தேவ் (காமினி கணவன்), அஜீத் சந்திரன் (சித்ரா தேவி காதலன், குப்த ராஜிய சேனாதிபதி), ராகுலன்(சித்ராவிற்கு நிச்சயிக்கப்பட்டவன்), ஸ்கந்தகுப்தன் (குப்த பேரரசு அரசர்), பூரகுப்தன் (ஸ்கந்தகுப்தன் தம்பி), ஆனந்தா தேவி (பூரகுப்தன் தாய்).