இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, July 31, 2017

எக்ஸைல் - சாரு நிவேதிதா

எக்ஸைல் - விமர்சனம்


இது ஒரு பின்நவினதுவ நாவல் என்பதால், நானும் பின்நவினதுவ முறையில் விமர்சனம் செய்து இருக்கிறேன்.

மொத்தத்தில் இந்த எக்ஸைல் புத்தகத்தில் சிறுகதை, கவிதை, சமையல் குறிப்பு, இயற்கை மருத்துவம், செக்ஸ் பிரச்சினை அதற்கு தீர்வுகள், Love Story, கல்ல காதல், உதையவின் சொந்த கதை, சோக கதை, பாலியல் கொடுமைகள், வரலாறு, ஆன்மிகம், நாத்திகம், அந்தரங்கம், சரக்கு பட்டியல்,வாசிய மருத்துவ தயாரிப்பு முறை, chiled abuse, கயல்லாஞ்சி கொடுரத்தின் உச்சம் எப்படி மனிதனுக்கு தன் சக மனிதன் மீது இத்தனை வன்மமும் வெறியும் வருகிறது?. (இவர்கள் இடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் கோக்கரகோ)  இப்படி எதோதோ இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு இருக்கு... இது ஒரு தகவல் பொக்கிஷம் என்று சொல்லலாம், சந்தேகமே இல்லாமல் கொண்டாட பட வேண்டிய நபர்  சாரு.
*இது இந்த புத்தகத்தின் இரண்டாவது கிளைமேக்ஸ்.
                 ~~~~
நீங்கள் சொல்லும் குஷால்தாஸ் எனது ஊகம் படி அது அந்த டுபாக்கூர் சாமியார் யோகி.பக்கி வாசுதேவ் என்று நினைக்கிறேன். அவர் ஆன்மிக கார்ப்பரேட் நிறுவனம் தான் தமிழகத்தில் பிரபலம். நித்தியானந்தா விடம் வேறு அனுபவம் இருந்து இருக்கிறது.
                    ~~~
எங்க ஊர்ல ஒரு எழுத்தாளர் இருக்கார், அவர் இப்படி சொல்வார். ட்ராபிக் போலிஸ் சொல்வதையே, ஒரு எழுத்தாளனும் சொன்னால், பிறகு அவன் என்ன எழுத்தாளர்???. இப்படி தான் உதையா* எழுதிய எக்ஸைல் இருக்கு. ஒரு வருடம் உங்கள் வாழ்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகள், கொஞ்சம் அந்தரங்கம், நீங்கள் படிக்கும் முக்கியமானவை. இதை எல்லாம் ஒரு கோர்வைய எழுதினா நீங்களும் எக்ஸைல் புத்தகம் எழுதலாம். உதையா சொல்லும் தத்துவம் எல்லாம்  கோக்கரகோ* விற்கே  தோன்றி இருக்கிறது.
இதில் இதை ஐந்து லட்சம் செலவு செய்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்கிறார் உதையா . ஆங்கிலத்தில் ஒரு வேளை ஹிட் அடிக்கலாம் ஏன் என்றால் இதில் சொல்லப்படும் விஷயங்கள் கோக்கரகோ விற்கு ஏற்கனவே தெரியுமே ஒழிய ஆங்கில வாசகர்களுக்கு தெரியாது இல்லையா? அதனால் அங்கு இது கொண்டாட படலாம்.

*கோக்கரகோ என்பது வாசகன்(me).*சாரு நிவேதிதா தமிழக எழுத்தாளர், அப்புறம் உலகத்திலே மூனோ நாலோ பேரு தான் அவர் போல எழுதுராங்களாம்.


                     ~~~~
இப்படி தான் கோக்கரகோ விற்கு ஒரு அனுபவம். சரி உலக இலக்கியம் படிக்கலாம் தமிழில் தான் மொழி பெயர்ப்பு கொட்டி கிடக்கிறதே என்று ஃபியோடார் டோஸ்டோவ்ஸ்க இன் வெண்ணிற இரவுகள் வாங்கிவிட்டான். ஆச்சரியம் பாருங்க பத்து பக்கங்களுக்கு மேல் படிக்க முடியவில்லை அவ்வளவு மோசமான மொழிபெயர்ப்பு. அப்புறம் என்ன இன்னும் அந்த புத்தகம் தூங்குகிறது பணம் தான் வேஸ்ட்.
உதையாவிற்கு எப்படி பிற மொழியில் எழுத தெரியாதோ அதே போல கோக்கரகோ விற்கு ஆங்கிலம் படிக்க வராது. பிறகு எப்படி கோக்கரகோ Pablo neruda வையோ Fyodor Dostoevsky யோ Tolstoy யோ படிப்பான். டால்டாய் புத்தகங்கள் ஒரளவு நல்ல மொழிபெயர்ப்பு இருப்பதாக கேள்வி. தமிழ் சூழலில் எழுத்தாளர் படும் படு, அதை நாவல் முழுக்க புலம்பி தள்ளுகிறார் சாரு பாவம்.                  
                       ~~~~~
Kokkarako body temperature 103° degrees today, medically it's called fever, so...... Dr billed 500rs, tupied Dr not told him after injection injected you may get Allure, so Kokkarako allured in street, then one old grandma helped him, like this today  indian Dr. Kokarakko also same as udhaya how can explain loneliness he spends 27 yr lonely still continuing, Kokkarako hearing hmm kulthum elf leila we leila. Kokkarako watching Ray (Jamie boxx).
                       ~~~~
சரி இனி விஷயத்திற்கு வருவோம், பல இடங்களில் சாட்டையடியாக சமுகத்தை கேள்வி கேட்கிறார் உதையா. நூறு பேர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததை உதையா கற்பழிப்பு என்று எழுதுகிறார் கோக்கரகோ விற்கு தூக்கி வாரி போட்டுவிட்டது. மனித மனதின் கீழ்மையை வெட்டி வெட்டி வைக்கிறார் உதையா, கலாச்சாரம் இனம் மொழி என்று எப்படி உழன்று கொண்டு இருக்கிறான் என்று தெளிவாக விளக்குகிறார். இதற்காகவே உதையாவை கொண்டாட தான் வேண்டும். குமுதம், ராணி, குங்குமம் படித்துவிட்டு சாண்டில்யன் தடி தடியான நாவல் கொஞ்சம், பாலகுமாரன் நாவல் கொஞ்சம் இதை படிச்சிட்டு நான் பெரிய இலக்கிய புடுங்கி என்று பலர் தமிழகத்தில் இருக்கிறார்கள். இவர்கள் எங்கு உதையாவை வாசிக்க போறாங்க, நீ ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்வதே சால சிறந்தது உதையா.
*இது கிளைமேக்ஸ்.
                     ~~~~
கிட்டத்தட்ட இந்த உலகில் அணைத்து பெண்களும் child abuse க்கு ஆளாகதவர்களே இல்லை என்று சொல்லலாம். காமம் மனிதனை எந்த கீழ்மையை நோக்கியும் தள்ளுகிறது, கமத்திற்காக தனது சக மனிதனை சக உயிரை எத்தனை கொடுமையும் செய்கிறான் ச்சே .பெண் என்னும் உயிரை எப்படி எல்லாம் வதைகிறான் oh என் சிவனே திவாகர் போன்ற அற்ப்ப மானிட பதர்களை நசுக்கி இல்லாமல் செய்ய மாட்டாயா? உமையெரு பங்கம் கொடுத்தாயே, ஏன் என்று இந்த ஆன்மா அற்ற மனித புழுக்களுக்கு சொல்லமாட்டாயா. கோக்கரகோ also have (had) one girls friend like அஞ்சலி you remember me everything, ho man I can't control my self. Those days feeling killing me, killing every minute , killing every second. I can't read anjali childwood abuse. Plz stop anjali stop. Ho no what happened to me?............................
                      ~~~~~
இன்று கோக்கரகோ அலுவலகத்தில் எக்ஸைல் படித்தான், அவன் அலுவலகத்திற்கு வந்து போகும் ஒருவர் அப்போது வந்தார் அதனால் கோக்கரகோ புத்தகத்தை மூடிவிட்டான் அவர் என்ன புத்தகம் என்று கேட்க கோ சாரு நிவேதிதா என்று சொல்ல, ஏண்டா டேய் செக்ஸ் கதை படிக்ர இடமா இது? நீ எப்படி அலுவலகத்தில் இதை படிக்கலாம்? இதில் எந்த செக்ஸ்யும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை, அவர் செக்ஸ் மூலமாக நடக்கும் மனித கீழ்மைகளை தான் சொல்கிறார். அது எல்லாம் ஒன்னும் இல்லை எல்லாம் செக்ஸ் கதை தான், நீங்கள் சாரு வை படித்து இருக்கீங்களா? என்றான் கோ, நான் பக்கம் பக்கமாக அவர் புத்தகத்தை அவர் இடமே விவாதிப்பேன், அவர் வீடு இங்க தான் வரியா போலாம், அவர் உடன் பழகி இருக்கேன் புகைப்படம் எடுத்து இருக்கேன் அவர் பத்தி எனக்கு தெரியாதா? அவரை பற்றி சொல்ல ஒரு பக்கம் படித்தால் போதாத? எல்லாம் ஆபாச கதைகள் என்றார் அந்த ஆசாமி. நீங்கள் ஒரு பக்கம் படித்து விட்டு சாரு ஒரு செக்ஸ் பைத்தியக்காரன் என்று சொல்ரீங்க, நான் 441 பக்கமும் படித்து விட்டு சாரு is great என்று சொல்கிறேன், பெண் குழந்தையை யாரோ ஒருவனை நம்பி வீட்டில் விட்டு போனா இதான் நடக்கும் என்று செருப்பால் அத்தது போல பச்சையாக சாரு சொல்கிறார்,அதில் எனக்கு எந்த ஆபாசமும் தெரியவில்லை, இதில் உங்களுக்கு ஆபாசம் தான் தெரிகிறது அதன் கருத்து தெரியவில்லை என்றால் நீங்கள் இலக்கியம் வாசிக்கவே இலாய்க்கு இல்லை என்றான் கோக்கரகோ. வேறு எதுவும் பேசாமல் ஜெயவேல் சென்றுவிட்டார். அடுத்த நாள் அலுவலகம் வந்த கோக்கரகோ விற்கு பெரும் அதிர்ச்சி, அவன் பாஸ் அவனை அழைத்து நீ இங்க ஒழுங்கா வேலை செய்வது இல்லை, நீ சரி இல்லை, உனக்கு பதில் வேறு ஆளை போட்டு இருக்கலாம் என்று அவன் தலையில் கல்லை போட்டார்கள். ( நான் அப்படி என்ன செய்து விட்டேன் சாரு? இவர்களும் உதையவின் எஸ்யும் ஒன்று தான்).

உதையா தன் எக்ஸ் இன் கெட்டு போன முலை பாலை இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை எடுத்து அவள் வலியை நீக்குகிறான், இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை மலம் சாப்பிடுவது போல இருந்து என்று உதையா சொல்கிறான். அவள் தூரத் துணிகளை துவைக்கிறான்,இன்னும் எதோதோ செய்கிறான், ஆனால் அவள் உதையவின் வீட்டை எடுத்து கொண்டு இவரை நடு தெருவில் விடுகிறாள், உதையவின் வாழ்க்கையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது கோக்கரகோ. (இங்கு தான் பெண்களை அடிமையாகவே வைத்து இருப்பது தான் சிறந்தது என்று தோன்றுகிறது, நம் முன்னோர்கள் என்ன முட்டாளா? கோ).
                          ~~~~~
ஆற்று நீர் போல் சட சட சட சட சட சட என்று எளிமையாக ஓட்டமும் நடையுமாக போகிறது, ஆனால் transgressive, auto fiction நாவலை வாசிக்க நுண்ணுணர்வு தேவை, தமிழ் சூழலில் அறவே அது இல்லை எனலாம். அதனால் தான் சாரு எல்லோர் இடமும் திட்டு வாங்கிகொண்டு இருக்கிறார். அவரை வாசிப்பவர் எல்லோருக்கும் அவர் செக்ஸ் தான் தெரிகிறது அதன் கருத்து சரடு தெரிவதில்லை அது நுண்ணுணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே கைகூடும். 

வில்லோடு வா நிலவே-வைரமுத்து

வில்லோடு வா நிலவே - வைரமுத்து

நாவல்              :வில்லோடு வா நிலவே
எழுத்தாளர்     : வைரமுத்து
நாவல் வகை  : வரலாறு புதினம்
பதிப்பகம்        : சூர்யா லிட்ரேசர் (பி) லிமிடெட்
பக்கங்கள்       : 305




கதைகளம் சுமார் கி. பி 40 முதல் 60 வரையான காலகட்டம்.
எதுகை மோனையில் அடுக்கு மொழி பேசி கவிதை உரைத்து கட கட என்று ஒட்டம் எடுக்கிறது கதை. சிலப்பதிகாரம், அகநானூறு என்று மேற்கோள் காட்டிகொண்டு அதன் ஊடே கதை பயணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் வரும் மடல் ஏறுதல் வைத்து கொண்டு 50 பக்க கதையை தள்ளிகொண்டு ஓடுகிறார் வைரமுத்து. மடலேறுதல் பற்றி விரிவாக சொல்லி இருப்பது சிறப்பு . பிறகு அதே சங்க இலக்கியத்தில் வரும் தமிழர் போர்முறையை வைத்து கொண்டு ஒரு 30 பக்கங்களை ஓட்டுகிறார். பேரில் யாரை எல்லாம் கொல்ல கூடாது எப்போது போர் செய்ய வேண்டும் என்று தெளிவாக ஆசான் சொல்லுகிறார் எவ்வளவு உன்னதமான போர்முறையை தமிழர்கள் கடைபிடித்து இருக்கிறார்கள் என்று நினைக்க வியப்பாக இருக்கிறது.
" ஒரு அரசன் கடைசியாக மூச்சு விடவேண்டியது போர்களம் தான் என்று தமிழர்கள் உறுதியாக நம்புவார்கள் " அகநானூறு 61,புறநானூறு 93 என்று மேற்கோள் காட்டிவிட்டு முன்னுரையில் இதை திராவிட நாகரிகம் என்று சொல்கிறார் வைரமுத்து ம் கலைஞர் இன் நண்பர் அல்லவா கல்லதனம் இல்லாமல் இருக்குமா?. மடல் ஏறிய பிறகும் தன் காதலை ஏற்க்காததால் மனம் உடைந்த காதலன் செத்தான்பாறையில் ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகிறான் அதை பார்க்க ஊர் மக்கள் கூறுகிறார்கள் இதை வைரமுத்து இப்படி எழுதுகிறார்.
"எல்லோரும் செத்தான்பாறை நோக்கி சிறகடித்துகொண்டு இருந்தார்கள் "
மரண வீட்டிற்கு அலறலோடு ஓடும் ஒருவன் எப்படி சிட்டுக்குருவின் சிறகடிப்போடு போக முடியும்?. வைரமுத்து இலக்கியம் எழுத லாயக்கு அற்றவர் அவர் சிறந்த பாடலாசிரியர் அவ்வளவு தான் என்ற குற்றசாட்டை அவரே இதில் நிருபிக்கிறார். இப்படி தொடர்பு இல்லாத பல செய்திகளை தனக்கு தெரியும் என்பதற்காக சேர்த்து இருக்கிறார்.



வில்லவன்கோதை குடித்து விட்டு களங்காய்கண்ணி கொலை பற்றி புலவர் இடம் சொல்கிறார், பிறகு அதே கொலை பற்றி புலவர் சேரலாதன் இடம் சொல்கிறார் ஒரு முறை சொன்ன செய்தியை இரண்டாவது முறை சுருக்கி சொல்வது தான் சிறந்தது ஆனால் இரண்டாவது முறையும் நீட்டி முழங்கி பூடாகரத்தோடு சொல்கிறார் வைரமுத்து இது வாசகனுக்கும் சலிப்பை ஏற்படுத்துவது. இப்படி தான் இரண்டு வரி செய்தியை வெட்டி வர்ணனையோடு 300 பக்கம் எழுதி இருக்கிறார். நச்செள்ளையின் புலவர் மாறு வேடம் மிகப்பெரிய நகைச்சுவை 1996 இல் எழுதப்பட்ட நாவல் என்பதால் இது எல்லாம் அப்போது கொண்டாடபட்டு இருக்கலாம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாதாரண பெண்ணை அரசன் பட்டது அரசியாக்கி இருக்கிறார் என்றால் தமிழர் உம உரிமை எவ்வளவு வலிமையானது என்று புரிகிறது. அப்போதே பெண் விடுதலை சம உரிமை எல்லாம் சகஜமாக தமிழர் இடம் இருந்து உள்ளது. பிற்பாடு தொழில் பிரிக்க வந்த வர்ண பாகுபாடு தோல் பிரித்தது இந்து மத கலாச்சாரம் அத்தனையும் கலந்து தமிழ் பண்பாடு குலைந்தது. இப்போது பெண் சம உரிமை, பெண் விடுதலை என்று போராடிகொண்டு இருக்கிறோம்.
நல்ல தேர்த இலக்கிய வாசகனுக்கும் வில்லோடு வா நிலவே ஏமாற்றமே அளிக்கும், ஆனால் தொடங்க நிலை வாசகனுக்கும் இது நல்ல தேர்வாக இருக்கும் உங்கள் வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவலாம். 

ஒரு நாள்- கா நா சு

ஒரு நாள் - கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்.



நாவல்              :ஒரு நாள்
எழுத்தாளர்     : கா நா சுப்ரமணியம்
வகை                : இலக்கியம்
பதிப்பகம்        : ஷாண்வி புக்ஸ்
பக்கங்கள்       : 176

ஹிட்லர் படையில் ஒரு போர் வீரனாக இருந்து பிறகு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அழைப்பின் பேரில் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய மேஜர் கிருஷ்ணா மூர்த்தி, உறவினர் யாரும் இல்லாததால் தன் மாமா வீட்டிற்கு அறை குறை மனத்தோடு சாத்தனூர் சர்வமானிய அங்கரஹாரத்தற்கு வருகிறார். பல ஆண்டுகளாக எந்த மாற்றமும் தனக்குள் அனுமதிக்காத அங்கரஹாரம் அது. ஜெர்மன், பர்மா இந்திய தேசிய ராணுவம் என்று பல போர் களங்களில் மனித வேட்டைகளை பார்த்து வாழ்ந்த மூர்த்தி ஒரு நாள் சாத்தநூர் அக்ரஹாரம் வந்து அங்கு இருக்கும் சாதாரண மனிதர்களின் வாழ்கையை பால கூறுகளாக விரிவாக மூர்த்தி அவர் மாமாவின் உரையாடல் மூலம் விரிகிறது நாவல். மனித வாழ்வின் பல்வேறு சிக்கல்களை தீர்த்துவிட முடியுமா என்று விவாதித்து பார்க்கிறார்கள். மனிதன் பொருப்புக்கள் இல்லாமல் தனியாக இருக்கவே விரும்புகிறான் ஆனால் அனைவர் வாழ்விலும் அவர்கள் சுமந்தே தீரவேண்டிய கடமைகள் உள்ளது என்பதை குறிப்பாக உணர்த்துகிறது நாவல். மனிதனின் வாழ்வில் ஆதார பிடிப்பு குடும்பம் என்னும் அமைப்பு, அதில் இருந்து எந்த சுதந்திர மனிதனும் விலகி விட முடியாது என்று மூர்த்தி மூலம் உணர்த்துகிறார் கா. நா சு. 

Sunday, July 30, 2017

பசித்த மானிடம் - கரிசான் குஞ்சு

நாவல்            : பசித்த மானிடம் 
எழுத்தாளர்    : கரிச்சான் குஞ்சு(நாராயணசாமி) 
நாவல் வகை  : இலக்கிய புதினம் 
நாவல் அளவு  : 267 பக்கங்கள் 
பதிப்பகம்         : காலச்சுவடு


மனிதனுக்கு வயிறு பசியை விட பெரிய பசி உடல் பசி, உடல் பசியை மையமாக கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டு உள்ளது.
வாழ்வின் இருவேறு துருவங்கள், கணேசன் வாழ்வில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் போன போக்கில் வாழ்கிறான். கிட்டா கடினமாக உழைத்து பணம் காசு அந்தஸ்து என்று உயர்ந்து திருமணம் செய்து பிள்ளை குட்டி என்று வாழ்கிறான். 1946 காலகட்டத்தில் கணேசன் ஒருவர் உடல் பசிக்கு வைப்பாட்டியாக செல்கிறான் என்பது தமிழ் சூழலில் வியப்பாக உள்ளது. சுமார் பத்து வருடங்கள் ராவுத்துர் இடம் இருக்கிறான் பிறகு ஒரு ஜவுளி தொழிலாளர் உடன் பிறகு அவனுக்கே உடல் பசிக்கிறது தேடி கொண்டு போய்விடுகிறான். ஒரு டீச்சர் உடன் சிலகாலம், பிறகு ஒரு லேடி டாக்டர் அவனை வைத்து அவள் உடல் பசி தீர்த்து கொள்கிறாள், விளைவு கணேசனுக்கு தொழு நோய் வந்துவிடுகிறது. பிறகும் ஒரு பிச்சைகார குருடியோடு வாழ்கிறான். அன்பு தான் இந்த உலகில் அடிப்படை ஆதாரம் என்று நாம் நினைக்கையில் கணேசன் அப்படி ஒரு இடத்திற்கு போகிறான் முதலில் அவனும் அப்படி தான் நினைத்தான் நாள் ஓட ஓட அவன் உள் இருக்கும் அந்த காமம் உடைத்து கொண்டு வழிகிறது, தங்கள் வாழ்வை அன்பு கொண்டு நிறைத்து கொண்ட அந்த கன்னியாஸ்திரிகள் இடம் காமம் பிறக்க அங்கு இருந்து கிளம்பி விடுகிறான். புறக்கணிப்பு பசி என்று முழு பிச்சைகாரனாக தெரு தெருவாக சுற்றி கொண்டு கணேசன் வாழ்க்கை வாழ்கிறான் ஆனால் எந்த நிலையிலும் அவனுக்கு தற்கொலை எண்ணம் வந்ததே இல்லை . கிட்டா கார் ஓட்ட கற்று கொண்டு, பிறகு மெடிக்கல் கடையில் வேலை பார்த்து பிறகு மெடிக்கல் வைத்து உயர்கிறான் ஆனால் வாழ்வில் எந்த திருப்தியும் இல்லை,தன்னையே வெறுக்கும் நிலை. கணேசன் தன் வாழ்க்கை குறித்து பரம திருப்தி இறுதியில் ஞானியாக வேறு ஆகிவிடுகிறான். உனக்கு என்ன தேவையோ எதன் பொருட்டு நீ அவர்கள் மேல் எல்லாம் பிரியமாக இருந்தாயோ அதே போல் தானே அவர்கள் தேவைக்கு உன்னிடம் அவர்கள் பிரியமாக இருந்தார்கள், இங்கு அவர்களை விட வேறு யார் மீதும் பிரியமாக இருக்க முடியாது. ஆனால் நீ உன்னையும் இழந்து விட்டு உன்னையே உனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லும் நிலைக்கு வந்துடயே கிட்டா, தற்கொலை விட மோசமானது தன்னை வெறுப்பது தான், உயிரை அழிக்ரேனு உடலை அழித்து கொள்ளும் பைத்தியக்கார தனம் தான் தற்கொலை கிட்டா என்று கணேசன் கிட்டாவிற்கு உபதேசிக்கிறான்.

வாழ்க்கையில் நாம் எதையெதையோ  சாப்பிடுகிறோம், நம்மையும் எதெல்லாமோ சாப்பிட்டு ஏப்பம் விடுகிறது.

வெண்முரசு-ஜெயமோகன் நூல் ஒன்று முதற்கனல்

வெண்முரசு - ஜெயமோகன் 
 நவீன மஹாபாரதம் நாவல்.




உலகின் மிக நீண்ட நாவல் வெண்முரசு என்ற இடத்தை இது முழுவுறும் போது அடையும். கிட்டத்தட்ட இருபத்து ஐந்து ஆயிரம் பக்கங்கள் என்று இலக்கு கொண்டு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் 2014 முதல் வெளிவந்துகொண்டு இருக்கிறது. ஆஸ்கர் விருது பெற்ற எந்த சமகால உலக எழுத்தாளர் உடன் ஜெயமோகன் படைப்புகளை எந்த ஐய்யமும் இல்லாமல் ஒப்பிடலாம். இது ஒரு நவீன மஹாபாரதம் நாவல், அப்படி என்றால் மஹாபாரதத்தை அப்படியே திருப்பி எழுதுவது அல்ல.  எழுத்தாளர் மிக மிக சுதந்திரமா அதைவிட ஆழமான இலக்கிய நடை கொண்டு மிக விரிவாக புதுதாக எழுதப்படும் காவியம். மிக தீவிர இலக்கிய வாசகர்கள் கூட சற்று தினறும் அளவுக்கு இதன் நடை இருக்கிறது, சிலவற்றை என்னதான் கற்பனை மனம் கொண்டு சிந்தித்தாலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மொழிநடை நம்மை தினற செய்கிறது. உதாரணமாக

"ஆயிரம் காலம் மைந்தரில்லாதிருந்த அவுணர்களான ரம்பனும் கரம்பனும் கங்கை நதிக்கரையில் தவம் செய்தனர். தானறிந்த அனைத்தையும் தன் கனவுக்குள் செலுத்தி கனவுகளை மந்திரத்துள் அடக்கி மந்திரத்தை மௌனத்தில் புதைத்து அந்த மௌனத்தை பெருவெளியில் வீசி ரம்பன் அமர்ந்திருந்தான். அருகிருந்த கரம்பனை முதலை விழுங்கியபோதும் ரம்பனின் தவம் கலையவில்லை."

சாதாரண வாசிப்பு நேரத்தை விட இது இரண்டு மடங்கு நேரத்தை எடுத்து கொள்கிறது, காரணம் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக வாசித்தல் மட்டுமே இதை உள்வாங்கி சற்றேனும் ருசிக்க முடியும், ஒரு வார்த்தை தவறினாலும் பொருள் சிக்காது. மிக ஆழமாக வாசிக்க வேண்டிய நாவல். இந்த முதற்கனல் நாவல் இந்த மாபெரும் காவியத்தின் வாசல். ஆயிரம் ஆயிரம் யோசனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவி எங்கும் இருள் சூழ்ந்து ஒளியற்று கிடந்தது, நாகங்களின் ஆதி அன்னை தோன்றிற்று அதன் வால் பாதால அறையிலும் தலை மேலோகத்திலும் கிடந்தது என்று நாவல் பிரஞ்ச தோற்றம் குறித்து சொல்லி கதைக்குள் நம்மை கால் வைக்க அழைக்கிறது. பல கிளைக்கதைகள் பல இடங்களில் சூதர்களாள் பாடபடுகிறது ஆனால் எல்லா கதைகளும் மையத்தோடு இணைகிறது. கங்கையின் மைந்தர் பீஷ்மரால் கவரப்பட்டு ஆன்மா அழிக்கப்பட்டு கொற்றவை கோலம் கொண்டு அழிந்த காசி நாட்டு இளவரசி அம்பையின் அல்லால் படும் கண்ணீர் எப்படி பீஷ்மரை பழி வாங்கும் என்னும் முதற்கண்ணீர் கனல் இதில் தொடங்குகிறது.
ஜனமேஜயன் ஈரேழு உலகத்தில் உள்ள நாங்கள் அனைத்தும் அழிக்க வேள்வி நடத்துவதில் தொடங்கி, தட்சன் பற்றி வரும் அத்தியாயம் மிக அற்புதமானது. இதில் நெகிழ்ச்சியும் அச்சமும் அளிக்கும் இருவர் அம்பை, சிகண்டினி.

காடுகளில் கைவிடப்பட்ட பெண் குழந்தை கரிய பன்றின் முலையில் பால் குடித்து வளர்கிறது பிறகு அம்பையிடம் வந்தடைகிறது, தான் என்ற உணர்வை இழந்து திரிந்த அம்பை மெல்ல மெல்ல அந்த குழந்தையை ஏற்கிறாள், பிறகு குழந்தை வளர்ந்த பின் அழைத்து
 நீ என் மகன் சிகண்டி

“இனித்தாளமுடியாது. ஒவ்வொரு கணமும் என்மேல் மலையெனக்குவிகிறது. இந்த வதையை முடிக்கவிழைகிறேன்.”

“நீ பீஷ்மரை போர்க்களத்தில் கொல்லவேண்டும். அவர் நெஞ்சை என் பெயர்சொல்லி விடும் உன் வாளி துளைத்தேறவேண்டும்” என்றாள்.  பிறகு சிதை ஏறினால் ஆயிரம் ஆயிரம் கைகள் வான் நோக்கி துழாவி அலையும் தீச்சுவாலைகள் அவளை அள்ளி அனைத்து தன்னுள் கரைத்து புகுத்திகொள்கிறது. கடும் தவம் கொண்டு ஆணாக மாறி சிகண்டினி பீஷ்மரை பழி வாங்க ஆஸ்தானாபுரம் நோக்கி வருகிறான். ஒரு மகத்தான படைப்பு தமிழில் வெளியாகிறபோது தமிழ் சூழல் அதை எப்படி அணுகுகிறது என்று பார்த்தால் நெருடல் தான். இந்த காவிய கடலில் ஒரு துளி பருகி இருக்கிறேன். இரண்டாம் நாவல் மழைப்பாடல் தொடங்குகிறேன்....