இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, August 7, 2017

மலைவாசல்- சாண்டில்யன்




மலைவாசல் - சாண்டில்யன் 
பக்கங்கள்     : 486
கதை களம்   : கைபர் கனவாய் மலை பிரதேசம் 
பதிப்பகம்      : வானதி பதிப்பகம் 
கதை காலம் : கி. பி 460-470

இந்தியாவை நடுநடுங்க வைத்த படையெடுப்புகளில் ஒன்று ஹீணர்கள் என்னும் நாடோடிகள் படையெடுப்பு, ஹீணர்கள் அரக்கர்கள் கருணை என்பதை அறியாத காட்டு மிராண்டிகள் கூட்டம். இந்தியாவின் செல்வ வளத்தை கொள்ளையடிக்க கைபர் கனவாய் வழியாக இந்தியாவில் நுழைந்து நாசம் செய்தார்கள். அப்போது குப்தபேரரசு காலம் பாடலிபுத்திரம் தலை நகராக கொண்டு ஆட்சி செய்தார்கள். நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக ஆனது தங்கத்தின் மதிப்பு 103ல் இருந்து 73 ஆக சரிந்தது. ஸ்கந்தகுப்தர் உடல் நிலை இல்லாமல் படுக்கையில் படுத்தார் ஹீணர்கள் இந்தியாவில் கால் வைத்துவிட்டார்கள், இந்த படையெடுப்பை ஸ்கந்தகுப்தன் தனது படை தளபதியான ஆஜித் சந்ரனை வைத்து எப்படி முறியடித்தார் என்பது தான் கதை.
பல்வேறு திருப்பங்கள் உடன் கதை சலிப்பில்லாமல் விறு விறு என நகர்கிறது, திடீர் திடீர் என்று பல திருப்பங்கள் வாசிப்பை தடையில்லாமல் நகர செய்கிறது.
ஹீணர்கள் தலைவன் அடிலன் இடம் உபத்தியான் (அஜித் சந்திரன்) சிக்கி கொள்கிறான், அடிலன் இடம் அடிமையாக இருந்து கொண்டே ஒரு உளவாளியாக எப்படி குப்தபேரரசுசை ஹீணர்கள் இடம் இருந்து காக்கிறான் என்பது தான் கதை, இது ஒரு புறம் நடக்க ஸ்கந்தகுப்தன் தம்பி பூரகுப்தன் தன் தாய் ஆனந்தா தேவி உடன் சேர்த்து ஆட்சி பிடிக்க சதி செய்கிறான், எல்லாவற்றையும் எப்படி முறியடித்து ஸ்கந்தகுப்தன் வெற்றி வாகை சூடுகிறான் என்பது தான் கதையின் இறுதி பகுதி.... இது வரலாறு உண்மை சம்பவம், கதைக்காக சில கற்பனை பாத்திரங்கள் உருவாக்க பட்டு உள்ளது.

கதை மாந்தர்கள் :
அடிலன்(ஹீணர்கள் தலைவன்), சித்ரா தேவி (அடிலன் மகள்), தோரமான (அடிலன் படை தலைவன்), காமினி (மலைவாசல் பெண்), பல்தேவ் (காமினி கணவன்), அஜீத் சந்திரன் (சித்ரா தேவி காதலன், குப்த ராஜிய சேனாதிபதி), ராகுலன்(சித்ராவிற்கு நிச்சயிக்கப்பட்டவன்), ஸ்கந்தகுப்தன் (குப்த பேரரசு அரசர்), பூரகுப்தன் (ஸ்கந்தகுப்தன் தம்பி), ஆனந்தா தேவி (பூரகுப்தன் தாய்).

No comments:

Post a Comment