இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, August 7, 2017

வந்தேறிகளா??





தமிழை வளர்ப்பது என்பது, அல்லது தமிழை அடுத்த தலைமுறைக்கு கையளிப்பது, தமிழை அழியாமல் பாதுகாதது நிட்சயமாக எழுத்தாளர்கள் தான். அவர்கள் ஏட்டில் எழுதி எழுதி தான் இன்றைய தமிழ் வடிவம் நமது கைக்கு வந்து சேர்ந்து உள்ளது. வாய் மொழியில் பல ஆயிரம் ஆண்டுகளாக கடத்தப்பட்ட தமிழ் மொழி, கடந்த ஐம்பது ஆண்டில் மிக மோசமான அறிவையும், மாற்றத்தையும் அடைத்து முகம் சிதைந்து தமிங்கலமாக இருக்கிறது இன்றைய பேச்சு மொழி தமிழ். ஆனால் எழுந்து வடிவில் பார்த்தால் தமிழ் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்க வேவையான இலக்கிய படைப்புகள் இருக்கிறது, என்று ஓரளவு பெருமை பட்டு கொள்ளலாம்.

" தமிழை வளப்பது என்பது தமிழ்கா உயிரை கொடுப்பது அல்ல,
தமிழை உலக அரங்கில் ஒரு படி மேலே உயர்த்துவது தான் "

அப்படி தமிழை உலக அரங்கில் ஒரு படி உயத்தியவர்கள் தமிழை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் பலர் தமிழ் மீது கொண்ட ஈர்பால் தமிழுக்கு பெரும் தொண்டு செய்து உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. 'ஜி யு போப்' தொடங்கி இன்று 'ஜெயமோகன்' வரை பலர் தமிழுக்காக அறும்பாடு பட்டு இருக்கிறார்கள். நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளான குறிப்பிடத்தக்கவர்கள் என்றால் குறைந்தது ந.பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் (கு.ப.ரா), திருலோக சீத்தாராமன் என்று சொல்லலாம். இவர்கள் மூவரும் தெலுங்கு தாய் மொழியாக கொண்டார்கள். அப்படி தமிழ்க்காக தங்களை அற்பனித்து கொண்டவர்களை அவர்கள் காலத்தில் வந்தவர் அடையாளம் கண்டு கொண்டாடினார்களா? அவர்கள் வாழ்க்கை தரம் எப்படி இருந்தது என்றால் அய்யோ பரிதாபம் தான். பாரதியை பட்டினி போட்டு முப்பது எட்டு வயதிலே கொன்ற தமிழ் சமுகத்திற்கு அவரின் அருமை பெருமை எல்லாம் அவர் காலத்திற்கு பிறகே தெரிந்தது.

இன்று இளைஞர்களின் கதாநாயகனாக, அவரை தலைமேல் வைத்து கொண்டாடும் இளைஞர்கள் பாரதியார் வாழ்ந்த காலத்தில் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் உண்மை. பாரதியார் பாடல்களை அவரது தம்பி விஸ்வனாத ஐய்யர் இடம் இருந்து ஒரு குஜராத் சேட்டு வாங்கிவிட்டார், பிறகு அந்த சேட்டு விடம் இருந்து எ. வி மொய்யபன் செட்டியார் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து வாங்கினார், இதனால் பாரதியார் கவிதைகளை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதை அறிந்த அப்போதைய முதல்வர் ஓமந்தூரார் எனப்படும் ஓமத்தூர் செட்டியார் (கன்னடர்) உடனடியாக இதில் தலையிட்டு எ வி மொய்யபன் செட்டியார் இடம் இருந்து பாரதியார் கவிதைகளை வாங்கி அனைவரும் பயன்படுத்தும் வகையில் வழி செய்தார். ஓமந்தூர் செட்டியாரை பார்க்க வேண்டும் என்றால் அவர் விவசாயம் செய்யும் அவரது வயலுக்கு தான் செல்ல வேண்டும். தமிழகத்தின் முதல்வர் ஒரு இத்தனை எளிமையாக வாழ்ந்தார் என்று இந்த கால இளைஞர்களுக்கு தெரியவில்லை. ஆனால் கருணாநிதியை தெரியும் கருணாநிதியை உதாரணம் காட்டி ஒட்டு மொத்த கன்னடர்களை ஈழிப்பது உதாசீனம் செய்வது தற்போதைய தமிழ் சுழலில் உச்சத்தை தொட்டு உள்ளது என்பது தான் உண்மை. எடுத்த எடுப்பிலேயே இவர் தமிழரா வேற்று மொழி காரரா என்ற ஆராய்ச்சி தொடங்கி விடுகிறது, அவர் வேறு மொழி காரர் என்று தெரிந்த உடனே வாய்க்கு வந்த வசை எல்லாம் அவர் மீது கொட்டுவது, அவர் எழுத்தில் ஒரு வரி கூட வாசிக்காமல் அவர்மீது வசை படுவது. இதற்கு தற்போதைய உதாரணம் ஜெயமோகன், அவர் மலையாள நாயாடி குடும்பத்தில் பிறந்தவர், பொதுவாக போரை வெறுப்பவர் அதனால் ஈழத்தில் நடந்த போரை இரண்டு தரப்பிலும் எதிர்த்தவர், இந்த இரண்டு காரணங்கள் தான் அவரை வசை பாடுபவர்களுக்கு தெரியும், அவர் எழுத்தை ஒரு வரி கூட வாசித்து இருக்கமாட்டார்கள் இனியும் வாசிக்க மாட்டார்கள். அவர் எழுதிய "மாடன் மோட்சம்" ஒரே ஒரு சிறு கதை போதும் அவர் யார் என்று சொல்ல. கி. ராஜநாராயணன் கூட கன்னட மக்களை பற்றி எழுதியிருக்கிறார் அவர் கனடன் என்ற குற்றச்சாட்டு கண்மூடித்தனமாக வைக்கிறார்கள், ஆனால் அவரின் எழுத்து தான் தமிழை இந்திய அளவில் கொண்டு சென்றது தமிழுக்கு ஒரு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது, அதனால் அவர் படைப்புகள் பிற மொழியில் மொழி பெயர்க்கபட்டது உலகத்திற்கு தமிழ் படைப்பு சிறிதளவேனும் சென்றடைந்தது. தமிழை நேசித்து தமிழ்கு தங்களை அற்பனித்த மனிதர்களை கண்மூடித்தனமாக எதிர்ப்பது சரியா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுகொள்வோம். 

No comments:

Post a Comment