இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, August 28, 2017

வெண்முரசு : மழைப்பாடல் - ஜெயமோகன்



மழைப்பாடல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எத்தனை எத்தனை வர்ணனை எங்கு இருந்து கொட்டுகிறது ஜெயமோகனுக்கு வியப்பு வியப்பு. ஓரே ஒரு உவமையை தவிர வேறு எந்த உவமை திரும்ப வரவில்லை ' விழி மூடி இமையுள் அசையும் குருதியை பார்த்து கொண்டு இருந்தான்' இது மட்டும் இரண்டு இடத்தில் வருகிறது. அனேகமாக அனைத்து அத்தியாயத்திலும் துனை கதை வருகிறது, ஆறுமுகன் அவதாரம் மிக முக்கியமான ஒன்று. பீஷ்மர் காந்தாரம் செல்லும் போது மோகஞ்சந்தாரோ (இறந்தவர்களின் மேடு) போய் பார்க்கிறார்
“சூதர்களின் கதைகளில் கிருதயுகத்துக்கு முன்பு சத்யயுகத்தில் மூதாதையர் இறப்பதேயில்லை என்றும் அவர்கள் முதுமையால் குருதியிழந்து உலர்ந்துச் சுருங்கியதும் பெரியதாழிகளில் வைத்து மண்ணுக்குள் இறக்கிவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.” இப்பொழுது இது திராவிடதேசத்திலும் தமிழ் மக்கள் இடத்திலும் இது வழக்கில் உள்ளது என்றும்
பிரம்மாவின் சந்ததியில்
“காந்தாரருக்கு ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். மூத்தகுலம் காந்தாரகுலமாக ஆகி இந்த மண்ணை ஆள்கிறது. பிறநால்வர் சேரர் சோழர் பாண்டியர் கோலர் என்று சொல்லப்பட்டார்கள். அவர்கள் இங்கிருந்து கிளம்பி தட்சிணத்தை அடைந்து அங்கே எங்கேயோ நாடாள்கிறார்கள்” என்றும்
இது அக்னிபுராணத்தில் உள்ளது என்று பீஷ்மர் சொல்லும் செய்தி வியப்பாக உள்ளது.
மேலும் மஹாபாரதம் காலத்தில் திராவிடம், தமிழகம் தனி தனி பகுதிகள் என்று தெரிகிறது. மஹாபாரதம் காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் இருந்தனவா என்று தெரியவில்லை.
மஹாபாரதம் முழுவதும் நடைபெற்றபோகும் அனைத்திற்கும் பெண்களே அடித்தளம் அமைக்கிறார்கள், அம்பிகை கரம் பிடித்து அன்னை என்று அஸ்தினபுரியில் கால்வைத்த அம்பாலிகை இருவர் இடத்திலும் எப்படி இந்தனை குரோதம் விரிசல் வந்தது என்று நினைத்தால், அறியனை என்று தோன்றுகிறது. எப்போதும் அம்பிகை வயிற்றில் இன்னோர் உயிர் வளந்ததோ அப்போதே அவள் என் அன்னையல்லை என்றும் இனி இவள் உண்பதும் உயிர்ப்பதும் அந்த உயிருக்கு தான் என்று அம்பாலிகா நினைக்கிறாள், அதன்பொருட்டு அவள் எந்த எல்லையையும் தொடுவாள் என்று உணர்கிறாள். அப்போது உறவுகள் என்பது மேலும் மேலும் உறவுகளை வளர்க்கவா அல்லது உறவுகள் இடையே பிரிவுகளை பகைமையை ஏற்படுத்த மட்டும் தானா?. இன்றும் கூட திருமணம் முடிந்தால் தன் குடும்பத்தை பார்க்க தான் சொல்லிதருகிறது சமுகம் அப்போது அன்று முதல் இன்றுவரை மனித அகம் மாறவே இல்லையா,? அப்போது நாம் மாற்றம் என்று சொல்லிக்கொள்வது எல்லாம் வெறும் புறமாற்றாம் தானா? மானிட மனித அகம் அன்று இன்றும் எப்போதும் அப்படியேதான் இருக்கபோகிறது அதில் எந்த மாற்றமும் அற்ப மானிட்டர்கள் நம்மால் ஏற்படுத்தவே முடியாது என்ற உண்மையை இந்த மழைப்பாடல் உணர்த்துகிறது.
திருதராஷ்டிரன் மகன்கள் தியவர்களக பிறப்பதற்கும், தாமதமாக பிறப்பதற்கும், அவன் விழியற்றவனாக பிறந்தற்கும் யார் காரணம் எவர் பிழை? ஏன் திருதராஷ்டிரன் அறம் கொண்டவனாகவே இருந்தாலும் அவனுக்கு நடப்பவை எல்லாம் தியவையாகவே அமைகிறது? பாரதம் முழுக்க இரத்தாறு ஓட ஏற்கனவே முடிவு செய்யபட்டுவிட்டது இறை இவர்களை அரசியல் காய்களாக வைத்து தாயத்தை உருட்டி விலையாட தொடங்கி விட்டான் நடப்பவைகளை யாராலும் தடுக்க முடியாது அல்லவா.


சிறு பிழையால் காந்தாரம் மகதம் இடையேயான மண உறவு தடைபட்டு போகிறது இந்த சிரிய இடைவெளி பீஷ்மர் பயன்படுத்திகொல்கிறார் வரலாறு மாறிவிடுகிறது. சுகோணன் என்னும் தூது பருந்து இறப்பதும் அதை ஓனாய் உண்ணும் போது சகுனி பார்ப்பது இந்த இடத்தில் இரு கதை இனைகிறது மிகச் சிறந்த இடம் இது. பழங்காலத்தில் தாலி பனையேலையில் கட்டப்பட்டது என்று தெரியும் ஆனால் அந்த பனையேலை எப்படி எடுக்கப்படுகிறது என்று தெரியாது, வசுமதி திருதராஷ்டிரன் திருமண சடங்கில் இது வருகிறது, ஏறத்தாழ அன்று முதல் இன்று வரை திருமண சடங்கு ஒன்றாக இருப்பது பெரும் வியப்பாக உள்ளது. பனை பல ஆண்டுகள் வளர்ந்தபின் ஒரு கட்டத்தில் பூக்கிறது அப்படி பூக்கும் பனை தாலிபனை எனப்படும், அந்த பனையை வணங்கி அதில் இருந்து ஓலை மற்றும் பூவை வெட்டி வந்து அதற்கு சடங்குகள் செய்து தாலி செய்யப்படுகிறது. அந்த பனையோலையில் மணமகன், மணமகள் பெயர் எழுதப்படும் அல்லது இரு நாட்டு அரசு முத்திரை வரையப்படும்.
இந்த பகுதியை தொகுத்து சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ' திருதராஷ்டிரன் பாண்டு வளர்ந்து விட்டார்கள். திருதராஷ்டிரனுக்கு பெண் தேடும் போது பல சத்ரிய தேசம் விழியிழந்தவன் என்பதால் பெண் கொடுக்க மறுக்கிறது, மதத்திற்கு தூது சொன்ற போது மகதம் அரசர் மறுப்பு சொல்ல ஆனால் இளவரசர் அஸ்தினபுரத்தின் உறவை விரும்புகிறார் ஆனால் காலம் கடந்து விட்டது, காந்தார நாட்டிற்கு பிதாமகர் பீஷ்மர் தூது சென்றுவிட்டார். பீஷ்மரை காந்தாரம் வரவேற்கிறது ஆனால் காந்தார குலமூதாதைகள் விழியாற்றவனுக்கு பெண் கொடுக்க மறுக்க திருதராஷ்டிரன் காந்தாரியை கவர்ந்து வருகிறான். கணவன் காணாத புவியை தானும் காண்பதில்லை என்று விழியை திரையிட்டுகொண்டு காந்தாரி அஸ்தினபுரம் வரும் போது மழை கொட்டி புவி குளிர்கிறது, குருதி மழையு‌ம் பொழிகிறது இது எதிர்காலத்தை உணர்த்தும் குறிப்பு. அஸ்தினபுரியின் மக்கள் காந்தாரியை வியப்போடு போற்றுகிறது.
யது வம்சதார்கள் யமுனை கரையில் வாழ்ந்து வந்தனர் அவர்கள் யாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர். யாதவர் பசுக்களை வளர்ப்பது தொழில். லவணர்கள் மொழியற்றவர்களாகவும் கருமைநிறம் கொண்டவர்களாகவும் வேட்டைதொழிலை செய்துவந்தனர். காட்டுக்குள் மேய்ச்சலுக்குச் செல்லும் கன்றுகளை லவணர் கவர்ந்துசெல்வதும் அதைத்தடுக்கமுயலும் யாதவர்களைக் கொல்வதும் அன்றாட நிகழ்ச்சியாக இருந்தது.

குடிமூதாதையர் கூடிய சபையில் அடுத்ததாக சூரசேனர் (யாதவர்) லவணகுலத்தைச்சேர்ந்த பெண்ணை மணந்துகொள்ளவேண்டும் என்று சொல்லப்பட்டது. லவணர்களை பிற யாதவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு அது இன்றியமையாதது என்றனர் குடிமூத்தார்.அவ்வாறாக சூரசேனர் லவணகுலத்தைச்சேர்ந்த மரீஷையை மணந்தார்.  அவர்களுக்கு பிறந்த குழந்தை அனைத்தும் கரியவையாக இருந்தது 13 வதாக வசுதேவன் பிறந்தான் குழந்தை செந்நிறம் அப்போதே இன்னொரு குழந்தை பிறந்தது செந்நிறமான பெண்குழந்தை பிருதை. அவள் அரண்மனைக்கு வந்த மாக முனிவர் துர்வாசர் க்கு பணிவிடை செய்கிறாள் அதன்பொருட்டு அவளுக்கு விண்ணகத்தார் உடன் உரையாடும் ஒரு மந்திரத்தை சொல்லி இதை உன் கனவன் உடன் கூடும் போது மட்டும் பயன்படுத்து என்கிறார், ஆனால் பிருதை பொறுமையிழந்து அதை முன்கூட்டியே பயன்படுத்திவிடுவதால் சூரியன் போன்ற ஒலிகொண்ட விண்ணவர் பிருதைக்கு கரு கொடுக்கிறார் திருமணமாகமலே கருத்தரிக்கிறாள். அந்தக் கருவை கலைக்க நினைக்கிறாள் ஆனாலும் நாகங்கள்  கருவிற்கு துணை இருக்கிறது. 12 மாதங்கள் கழித்து சூரியப் புதல்வன் பிறக்கிறான்(கர்ணன்) . அரண்மனைக்கு அக்குழந்தையை எடுத்துச் செல்ல இயலாத குந்தி சிறுபடகில் அந்தக் குழந்தையை வைத்து நதியில் விடுகிறாள். அக்குழந்தை அதிரதன் என்பவரால் கண்டெடுக்கப்பட்டார் இவர் அரசர் திரிதராஷ்டிராவின் சாரதி ஆவார். அவரும் அவரது மனைவி ராதாவும்  குழந்தையை சொந்த மகனாகவே வளர்த்தனர். 
திருதராஷ்டிரன் அறியனை அமரும் நிகழ்வு தயார் செய்யப்படுறது பெரும் செல்வமும் படையும் கொண்டு சகுனி அஸ்தினபுரி வருந்தடைகிறான். அம்பாலிகா தன் மகன் பாண்டு அறியனை ஏறவேண்டும் என்பதால் எதிர்ப்பு கிளம்புகிறது. நில அதிர்வு வந்ததால் நாட்டிற்கு அழிவு ஏற்படும் என்று அறியனை ஏறுதல் தடை செய்யப்படுகிறது. பிறந்தது முதல் இந்த தருணத்திற்காகக் காத்திருந்தான்   திருதராஷ்டிரன் அவனிடம் யார் என்ற செய்தியை சொல்வது? பீஷ்மரை சத்தியவதி தெரிவிக்கும்படி சொல்கிறாள் அவர் கடுமையாக எதிர்ப்பு தெரிக்கிறார். சத்தியவதி தேவவிருதன் இடையே முதல் பூசல் ஏற்றப்படுகிறது. என் தமக்கை அறியனை அமர்வாள் என்ற பிதாமகர் வாக்கை நம்பி தான் நான் அஸ்தினபுரி வந்தேன் இதை ஏற்க முடியாது என்று சகுனி சொல்கிறார். நீங்கள் 18 ஆண்டுகள்  பெறுங்கள் உங்கள் தமக்கையின் மகன் அறியனை ஏறுவான் இது என் வாக்கு அதுவரை நீங்கள் இங்கேயே தங்கலாம் உங்கள் தமக்கையின் மைந்தனை உங்கள் விருப்பப்படி வளர்தெடுங்கள் என்கிறார் பீஷ்மர் சகுனி 18 ஆண்டு அஸ்தினபுரியில் தங்குகிறார்.
பீஷ்மர் பயந்த அளவுக்குள் திருதராஷ்டிரன் அதை எதிர்கொள்ளவில்லை மாறாக “விதுரா, மூடா, என் இளவல் நாடாள விழைந்தான் என்றால் அவன் மண்ணைப் பிடுங்கி ஆளும் வீணனென்றா என்னை நினைத்தாய்? உடல், உயிர், நாடு, புகழ் என எனக்குரியதனைத்தும் இவனுக்குரியதேயாகும்” என்றான். ஆனால் காந்தாரியிடம் இச்செய்தியை சொல்லும்பொழுது இவையனைத்தும் குந்தியாள் நடந்தவை என்ன அவள் மீது தீச்சொல் இடுகிறாள் உன்னை பழிதீர்பேன் என்கிறாள். பாண்டு அறியனை ஏறினால் யாதவ பெண் குந்தி சத்ரியார்கள் அறியாணை அமர குலமூதாதைகள் எதிர்ப்பு தெரிவிக்க ஆனால் எந்த சத்ரிய மன்னனும் மணகொடையாளிக்க மறுக்க மாத்ரநாட்டு இளவரசர் சல்லியர் அவரது தங்கை மாத்ரியை பாண்டுவுக்கு மணமுடிப்பதாக வாக்களித்தார். பாண்டு மாத்தியை மணநிகழ்வு முடிந்தது. பாண்டு வேட்டைக்கு கானகம் சென்றபோது அவ்வனத்தில் காமத்தில் திளைத்திருந்த இரு மான்களை அப்பெய்தி கொன்றான் மான் உருவில் இருந்த சுகுணன் அவன் துனை கௌசிகையும் தீச்சொல் இட்டனர் இன்று முதல் உன் வாழ்நாள் முழுவதும் காமம் என்பது கிடையாது மனம் துடிக்க உடல் தாளாமல் உன்னை கொல்லும் ஆயுதமாக காமம் ஆகுக என்று. இதன்பொருட்டு பாண்டு தனது இருதுணைவியுடன் வனம்புக விழைகிறான். விதுரன் தாயார் சிவை ஒரு சூத பெண் என்பதால் அவள் மற்ற அரசிகளுக்கு நிகராக நடத்தப்படவில்லை ஒதுக்கி வைக்கம்படுகிறாள், அவளுக்கும் தன் மகன் தான் அஸ்தினபுரியின் அரசன் என்று கனவுகான்கிறாள். உத்தரமதுராபுரியின் தேவகன் மகள் சுருதைக்கும் விதுரனுக்கும் திருமணம் நடக்கிறது. பாண்டு வனம்புகுந்து குடில் அமைத்து வாழ்கிறான், காந்தாரி தூது கிருஷ்ணாபருந்து மூலம் அஸ்தினபுரியின் செய்திகளை அறிந்து கொள்கிறாள். காந்தாரி கருவுற்று இருந்தால் சில தீய அறிகுறிகள் அஸ்தியில் நடக்கிறது. பாண்டுவிடம் குந்தி தனக்கு பிறந்த குழந்தை பற்றி சொல்கிறாள் அவன் இந்த பாரதவர்ஷத்தை ஆளபிறந்த சூரிய புதல்வன் என்கிறாள், பாண்டு அக்குழந்தையை ஏற்று அவனுக்கு துனையாக ஒரு தருமனை பெற்று கொடுக்குப்படி பாண்டு கேட்க்க, அவள் மந்திரத்தை பயன்படுத்தி எமதர்மனை வரவைத்து அவர் உடன் இனைந்து ஒரு குழந்தை பெற்றாள். அக்குழந்தை தருமன், விதிஷ்டிரன், பரதன் என்ற பெயர்களை பெற்றான். காந்தாரிக்கு 12 மாதங்கள் கடந்தும் குழந்தை பெறவில்லை அது மதங்க கர்ப்பம் என்று முனிவர் சொன்னார். அதாவது இருபது மாத கர்பம் குழந்தை நூறு ஆள் பலம் கொண்டு பிறக்கும். அக்குழந்தை தீய குணங்கள் கொண்டது அதனால் இந்த நகர் அழியும் என்று மக்கள் பேச தொடங்கிவிட்டார்கள், இதனால் அக்குழந்தையை வேறு எங்காவது அனுப்பி விட சொல்கிறார்கள். அக்குழந்தை அப்படி பிறக்க யார் காரணம்? இந்த இடத்தில் திருதராஷ்டிரன் சொல் நம்மை கலங்கடிகிறது..
“அழியட்டும். இந்நகரும் இந்நாடும் அழியட்டும். இவ்வுலகே அழியட்டும். நான் அந்தப்பழியை ஏற்றுக்கொள்கிறேன். என்னை அதற்காக மூதாதையர் பழிக்கட்டும். தெய்வங்கள் என்னை தண்டிக்கட்டும். என் மைந்தனை மார்போடணைத்துக்கொண்டு விண்ணிலிருக்கும் தெய்வங்களிடம் சொல்கிறேன். ஆம், நாங்கள் பழிகொண்டவர்கள். நாங்கள்
வெறுக்கப்பட்டவர்கள். ஆகவே தன்னந்தனிமையில் நிற்பவர்கள். எங்களுக்கு வேறு எவரும் இல்லை. தெய்வங்கள்கூட இல்லை” என்றான் திருதராஷ்டிரன். அவன் உதடுகள் துடித்தன. சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. “அவனுக்கு இவ்வுலகில் நானன்றி வேறு எவருமில்லை. அவனை என்னால் வெறுக்கமுடியாது. அவனை என்னால் ஒரு கணம்கூட விலக்கமுடியாது.”

காந்தாரியை முதுநாகினி வந்து சந்தித்தாள் இவன் நாகர்குலதை காக்கும் அரசன் இவன் அழிவற்றவன், நீ இந்த பாரததின் கற்புக்கரசி நீ ஆடையின்றி உன் மைந்தனை பார் அவன் வெல்வரற்றவன் அவன் அழிவற்றவன் என்றால் காந்தாரி அட்டைகளை கலந்து தன் கண்கட்டை அவிழ்த்து பார்த்தாள் காற்றில் பட்டாடை வந்து அவன் தொடையில் விழுந்தது அவள் அவன் தொடையை காணவில்லை உடனே அஞ்சி பயந்து அவனை காக்க நூறு தமயன் வேண்டும் என்று நினைக்கிறாள், இவன் வெல்வரற்றவன் ஆகையால் இவன் சுயோதனன் அல்ல, துரியோதனன் என்றாள்..
குந்திக்கு ஆறு மாதத்தில் மீண்டும் ஒரு குழந்தை பிறக்கிறது அதற்கு பீமசேனன் என்று பெயர் சூட்டப்பட்டது. பாறைகளை கூட கையால் உடைக்கும் அளவுக்கு பலம் கொண்டு இருந்தான். மீண்டும் ஒரு குழந்தை பெற்றாள், அவனுக்கு அர்ஜுனன் என்று நாமம் சூட்டப்பட்டது இந்திரனே ஐராவதத்தில் தோன்றி இவன் நானென்றாறிக என்று ஆசி கூறி அருள்புறிந்தார். இவன் வில் வித்தையில் சிறந்தது விளங்கினான். மாத்ரி  துர்வாசர் அளித்த மத்திரத்தை பண்படுத்தி இரண்டு குழந்தைகள் பெற்றாள். காந்தாரி இரண்டாவது குழந்தை பிறந்தது துச்சானன் என்று பெயர். அவள் பத்து தமக்கைகள் இரண்டு இரண்டு குழந்தைகள் பெற்றனர். பாண்டவர்கள் ஒரளவு வளர்ந்து விட்டார்கள். பாண்டு மாத்ரி உடன் காமம் கொண்டு திளைக்க முயலும் போது அந்த அதிர்வை அவன் உடல் தாங்காமல் இறந்துவிடுகிறான். அவன் சிதையில் மாத்ரி சதி ஏறுகிறாள், செய்தி அஸ்தினபுரியை உலுக்கியது. அம்பிகா, அம்பாலிகா இருவரும் வனம்புக விழைந்து வனம் புகுகிறார்கள். தவளைகள் விண்ணவர் உடன் வேண்டுகிறது மழை! மழை! மழை! ஓம்! ஓம்! ஓம்! , வருடங்கள் சுழன்று காலம் விரைகிறது. 

No comments:

Post a Comment