இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, July 31, 2017

வில்லோடு வா நிலவே-வைரமுத்து

வில்லோடு வா நிலவே - வைரமுத்து

நாவல்              :வில்லோடு வா நிலவே
எழுத்தாளர்     : வைரமுத்து
நாவல் வகை  : வரலாறு புதினம்
பதிப்பகம்        : சூர்யா லிட்ரேசர் (பி) லிமிடெட்
பக்கங்கள்       : 305




கதைகளம் சுமார் கி. பி 40 முதல் 60 வரையான காலகட்டம்.
எதுகை மோனையில் அடுக்கு மொழி பேசி கவிதை உரைத்து கட கட என்று ஒட்டம் எடுக்கிறது கதை. சிலப்பதிகாரம், அகநானூறு என்று மேற்கோள் காட்டிகொண்டு அதன் ஊடே கதை பயணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் வரும் மடல் ஏறுதல் வைத்து கொண்டு 50 பக்க கதையை தள்ளிகொண்டு ஓடுகிறார் வைரமுத்து. மடலேறுதல் பற்றி விரிவாக சொல்லி இருப்பது சிறப்பு . பிறகு அதே சங்க இலக்கியத்தில் வரும் தமிழர் போர்முறையை வைத்து கொண்டு ஒரு 30 பக்கங்களை ஓட்டுகிறார். பேரில் யாரை எல்லாம் கொல்ல கூடாது எப்போது போர் செய்ய வேண்டும் என்று தெளிவாக ஆசான் சொல்லுகிறார் எவ்வளவு உன்னதமான போர்முறையை தமிழர்கள் கடைபிடித்து இருக்கிறார்கள் என்று நினைக்க வியப்பாக இருக்கிறது.
" ஒரு அரசன் கடைசியாக மூச்சு விடவேண்டியது போர்களம் தான் என்று தமிழர்கள் உறுதியாக நம்புவார்கள் " அகநானூறு 61,புறநானூறு 93 என்று மேற்கோள் காட்டிவிட்டு முன்னுரையில் இதை திராவிட நாகரிகம் என்று சொல்கிறார் வைரமுத்து ம் கலைஞர் இன் நண்பர் அல்லவா கல்லதனம் இல்லாமல் இருக்குமா?. மடல் ஏறிய பிறகும் தன் காதலை ஏற்க்காததால் மனம் உடைந்த காதலன் செத்தான்பாறையில் ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகிறான் அதை பார்க்க ஊர் மக்கள் கூறுகிறார்கள் இதை வைரமுத்து இப்படி எழுதுகிறார்.
"எல்லோரும் செத்தான்பாறை நோக்கி சிறகடித்துகொண்டு இருந்தார்கள் "
மரண வீட்டிற்கு அலறலோடு ஓடும் ஒருவன் எப்படி சிட்டுக்குருவின் சிறகடிப்போடு போக முடியும்?. வைரமுத்து இலக்கியம் எழுத லாயக்கு அற்றவர் அவர் சிறந்த பாடலாசிரியர் அவ்வளவு தான் என்ற குற்றசாட்டை அவரே இதில் நிருபிக்கிறார். இப்படி தொடர்பு இல்லாத பல செய்திகளை தனக்கு தெரியும் என்பதற்காக சேர்த்து இருக்கிறார்.



வில்லவன்கோதை குடித்து விட்டு களங்காய்கண்ணி கொலை பற்றி புலவர் இடம் சொல்கிறார், பிறகு அதே கொலை பற்றி புலவர் சேரலாதன் இடம் சொல்கிறார் ஒரு முறை சொன்ன செய்தியை இரண்டாவது முறை சுருக்கி சொல்வது தான் சிறந்தது ஆனால் இரண்டாவது முறையும் நீட்டி முழங்கி பூடாகரத்தோடு சொல்கிறார் வைரமுத்து இது வாசகனுக்கும் சலிப்பை ஏற்படுத்துவது. இப்படி தான் இரண்டு வரி செய்தியை வெட்டி வர்ணனையோடு 300 பக்கம் எழுதி இருக்கிறார். நச்செள்ளையின் புலவர் மாறு வேடம் மிகப்பெரிய நகைச்சுவை 1996 இல் எழுதப்பட்ட நாவல் என்பதால் இது எல்லாம் அப்போது கொண்டாடபட்டு இருக்கலாம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாதாரண பெண்ணை அரசன் பட்டது அரசியாக்கி இருக்கிறார் என்றால் தமிழர் உம உரிமை எவ்வளவு வலிமையானது என்று புரிகிறது. அப்போதே பெண் விடுதலை சம உரிமை எல்லாம் சகஜமாக தமிழர் இடம் இருந்து உள்ளது. பிற்பாடு தொழில் பிரிக்க வந்த வர்ண பாகுபாடு தோல் பிரித்தது இந்து மத கலாச்சாரம் அத்தனையும் கலந்து தமிழ் பண்பாடு குலைந்தது. இப்போது பெண் சம உரிமை, பெண் விடுதலை என்று போராடிகொண்டு இருக்கிறோம்.
நல்ல தேர்த இலக்கிய வாசகனுக்கும் வில்லோடு வா நிலவே ஏமாற்றமே அளிக்கும், ஆனால் தொடங்க நிலை வாசகனுக்கும் இது நல்ல தேர்வாக இருக்கும் உங்கள் வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவலாம். 

No comments:

Post a Comment