இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Sunday, July 30, 2017

வெண்முரசு-ஜெயமோகன் நூல் ஒன்று முதற்கனல்

வெண்முரசு - ஜெயமோகன் 
 நவீன மஹாபாரதம் நாவல்.




உலகின் மிக நீண்ட நாவல் வெண்முரசு என்ற இடத்தை இது முழுவுறும் போது அடையும். கிட்டத்தட்ட இருபத்து ஐந்து ஆயிரம் பக்கங்கள் என்று இலக்கு கொண்டு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் 2014 முதல் வெளிவந்துகொண்டு இருக்கிறது. ஆஸ்கர் விருது பெற்ற எந்த சமகால உலக எழுத்தாளர் உடன் ஜெயமோகன் படைப்புகளை எந்த ஐய்யமும் இல்லாமல் ஒப்பிடலாம். இது ஒரு நவீன மஹாபாரதம் நாவல், அப்படி என்றால் மஹாபாரதத்தை அப்படியே திருப்பி எழுதுவது அல்ல.  எழுத்தாளர் மிக மிக சுதந்திரமா அதைவிட ஆழமான இலக்கிய நடை கொண்டு மிக விரிவாக புதுதாக எழுதப்படும் காவியம். மிக தீவிர இலக்கிய வாசகர்கள் கூட சற்று தினறும் அளவுக்கு இதன் நடை இருக்கிறது, சிலவற்றை என்னதான் கற்பனை மனம் கொண்டு சிந்தித்தாலும் கற்பனைக்கு அப்பாற்பட்ட மொழிநடை நம்மை தினற செய்கிறது. உதாரணமாக

"ஆயிரம் காலம் மைந்தரில்லாதிருந்த அவுணர்களான ரம்பனும் கரம்பனும் கங்கை நதிக்கரையில் தவம் செய்தனர். தானறிந்த அனைத்தையும் தன் கனவுக்குள் செலுத்தி கனவுகளை மந்திரத்துள் அடக்கி மந்திரத்தை மௌனத்தில் புதைத்து அந்த மௌனத்தை பெருவெளியில் வீசி ரம்பன் அமர்ந்திருந்தான். அருகிருந்த கரம்பனை முதலை விழுங்கியபோதும் ரம்பனின் தவம் கலையவில்லை."

சாதாரண வாசிப்பு நேரத்தை விட இது இரண்டு மடங்கு நேரத்தை எடுத்து கொள்கிறது, காரணம் ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக வாசித்தல் மட்டுமே இதை உள்வாங்கி சற்றேனும் ருசிக்க முடியும், ஒரு வார்த்தை தவறினாலும் பொருள் சிக்காது. மிக ஆழமாக வாசிக்க வேண்டிய நாவல். இந்த முதற்கனல் நாவல் இந்த மாபெரும் காவியத்தின் வாசல். ஆயிரம் ஆயிரம் யோசனை கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவி எங்கும் இருள் சூழ்ந்து ஒளியற்று கிடந்தது, நாகங்களின் ஆதி அன்னை தோன்றிற்று அதன் வால் பாதால அறையிலும் தலை மேலோகத்திலும் கிடந்தது என்று நாவல் பிரஞ்ச தோற்றம் குறித்து சொல்லி கதைக்குள் நம்மை கால் வைக்க அழைக்கிறது. பல கிளைக்கதைகள் பல இடங்களில் சூதர்களாள் பாடபடுகிறது ஆனால் எல்லா கதைகளும் மையத்தோடு இணைகிறது. கங்கையின் மைந்தர் பீஷ்மரால் கவரப்பட்டு ஆன்மா அழிக்கப்பட்டு கொற்றவை கோலம் கொண்டு அழிந்த காசி நாட்டு இளவரசி அம்பையின் அல்லால் படும் கண்ணீர் எப்படி பீஷ்மரை பழி வாங்கும் என்னும் முதற்கண்ணீர் கனல் இதில் தொடங்குகிறது.
ஜனமேஜயன் ஈரேழு உலகத்தில் உள்ள நாங்கள் அனைத்தும் அழிக்க வேள்வி நடத்துவதில் தொடங்கி, தட்சன் பற்றி வரும் அத்தியாயம் மிக அற்புதமானது. இதில் நெகிழ்ச்சியும் அச்சமும் அளிக்கும் இருவர் அம்பை, சிகண்டினி.

காடுகளில் கைவிடப்பட்ட பெண் குழந்தை கரிய பன்றின் முலையில் பால் குடித்து வளர்கிறது பிறகு அம்பையிடம் வந்தடைகிறது, தான் என்ற உணர்வை இழந்து திரிந்த அம்பை மெல்ல மெல்ல அந்த குழந்தையை ஏற்கிறாள், பிறகு குழந்தை வளர்ந்த பின் அழைத்து
 நீ என் மகன் சிகண்டி

“இனித்தாளமுடியாது. ஒவ்வொரு கணமும் என்மேல் மலையெனக்குவிகிறது. இந்த வதையை முடிக்கவிழைகிறேன்.”

“நீ பீஷ்மரை போர்க்களத்தில் கொல்லவேண்டும். அவர் நெஞ்சை என் பெயர்சொல்லி விடும் உன் வாளி துளைத்தேறவேண்டும்” என்றாள்.  பிறகு சிதை ஏறினால் ஆயிரம் ஆயிரம் கைகள் வான் நோக்கி துழாவி அலையும் தீச்சுவாலைகள் அவளை அள்ளி அனைத்து தன்னுள் கரைத்து புகுத்திகொள்கிறது. கடும் தவம் கொண்டு ஆணாக மாறி சிகண்டினி பீஷ்மரை பழி வாங்க ஆஸ்தானாபுரம் நோக்கி வருகிறான். ஒரு மகத்தான படைப்பு தமிழில் வெளியாகிறபோது தமிழ் சூழல் அதை எப்படி அணுகுகிறது என்று பார்த்தால் நெருடல் தான். இந்த காவிய கடலில் ஒரு துளி பருகி இருக்கிறேன். இரண்டாம் நாவல் மழைப்பாடல் தொடங்குகிறேன்....

No comments:

Post a Comment