இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Showing posts with label வரலாற்று புதினம். Show all posts
Showing posts with label வரலாற்று புதினம். Show all posts

Sunday, August 12, 2018

மூங்கில் கோட்டை - சாண்டில்யன்



நீண்ட நாட்களாக எந்த புத்தகத்தையும் முழுமையாக வாசித்து முடிக்காததால் இந்த புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தேன்.  பொதுவாக வரலாற்று நாவல்கள் ஒன்று இரண்டு குறிப்புகளை வைத்துக் கொண்டு மொத்த நாவலையும் கற்பனையாக புனையும் வகையை கொண்டது ஒரு தீவிர இலக்கிய வாசகனுக்கு அதனால் வரலாற்று நாவல்கள் சற்று சலிப்பூட்டுவதாகவே அமையும். இளம் வயதில் அரியணை ஏறிய பாண்டிய நெடுஞ்செழியனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது இந்த நாவல், சேரர் சோழர் படைகளை வெற்றிக் கொண்டு சேரமானை சிறை எடுத்து ஒரு மூங்கில் கோட்டை அமைத்து அதைச் சுற்றி அகழிகள் அமைத்து மறைத்து வைக்கப்பட்டார். சேரனை விடுவிக்க வந்த அவனது யானைப் படைகள் அருவியில் விழுந்து பாண்டியனின் உத்தியால் தோல்வியுற்றதாக வரலாறு கூறுகிறது. இந்த வரலாற்றை வைத்துக்கொண்டு மொத்த நாவலும் புனையப்பட்டிருக்கிறது இதில் வரும் கதாநாயகன் இளமாறனுக்கு எடுத்துச் சொல்லி விளக்கம் கொடுப்பதாக நாவல் முழுக்க அமைந்துள்ளது பொதுவாக சாண்டில்யன் நாவல்களில் கதாநாயகியை வர்ணிக்கவே ஐம்பது பக்கங்கள் எடுத்துக்கொள்வார் இது எனக்கு மிக மிக சலிப்பூட்டுவதாக இருப்பதால் நாம் சாண்டில்யன் புத்தகங்களை தொடுவதே இல்லை ஆனால் விரைந்து வாசிக்க வேண்டும் என்பவர்கள் சாண்டில்யன் போன்ற வரலாற்று நாவல்கள் தான் மிகச்சிறந்த தேர்வு . தமிழகத்தில் இது போன்ற நாவல்கள்தான் அதிகமாக வாசிக்கப் படுகிறது அதனால் இந்த நாவல் இருபத்தி ஐந்து பதிப்புகளை தொட்டிருக்கிறது. 

Wednesday, August 16, 2017

உடையார் - பாலகுமாரன்







பொன்னியின் செல்வன் முடித்த கையோடு நான் இராசராசனை துரத்த வேண்டும் என்று நினைத்து புத்தகங்கள் தேடிய போது எனக்கு கிடைத்த விடை
' உடையார்' 
ஆறு பாகங்கள் கொண்ட நாவல். சுமார் மூவாயிரம் பக்கங்கள். உங்களுக்கு சோழ தேசம் கான வேண்டுமா?  இராசராசனோடு வாழ வேண்டுமா?  அவனோடு சேர்ந்து பெரிய கோவில் கட்ட வேண்டுமா?  வா என்று கை பிடித்து அழைத்து போகிறார் ஆசிரியர், ஒரு அரசன் எப்படி இருப்பான் எப்படி பேசுவான் எப்படி நடப்பான் எப்படி உத்தரவு போடுவான் இத்தனையும் அவ்வளவு அழகாக சிறிதும் பிசகாமல் கம்பீரமான இராசராசனை நீங்கள் பார்க்கலாம்.
சுந்தர சோழனுக்கு பிறகு இராசராசன் அரசர் ஆகவில்லை என்றால் இன்று தமிழ் இல்லை,
தமிழ் சுத்தமாக அழிந்து இருக்கும்,
இராசராசன் இல்லை என்றால் தமிழ்க்கு 'தேவாரம்' இல்லை, 'திருவாசகம் ' இல்லை. பன்னிரு திருமுறைகளில் பாதி இல்லை, தில்லியில் தமிழ் வேதம் ஓதமாட்டோம் என்று அந்தனர்கள் தேவாரம் திருவாசகத்தை ஒரு அறையில் போட்டு பூட்டி செல் அரித்த தமிழ்யை அந்த மாகன் மீட்டு கொடுத்து தான் அத்தனையும்,
இது வெறும் வாசிப்பு இல்லை அந்த சிவபதகேசரியோடு வாழும் வாழ்க்கை, அவனோடு வாழ்ந்து அவனோடு இறப்பிற்கள், நான் அவனோடு வாழ்ந்து இருக்கிறேன் இறந்து இருக்கிறேன்.
என் அருகில் இருந்தவர் இறந்தது போலவும் அப்போது தான் எனக்கு அது தெரிந்தது போலவும் அழுதேன், கடைசி அத்யாயம் அந்த 20 நிமிடம் வரை அழுதேன், நான் முழுமையாக ஒரு சோழ தேசத்து மறவனாக மாறி இருந்தேன் என் அரசன் இறந்து போல் அழுதேன், என் அரசே இராசராச, எம் பெருமானே, ஈசனே, நீ மனிதனா இல்லை ஈசன், கடவுள் நீ எங்கே?  இப்போது எங்கே இருக்கிறாய்?  நான் இனி உன்னை எப்படி பார்ப்பேன்?  இது தான் நான் புத்தகத்தை முடித்து விட்டு கேட்ட கேள்வி.
நான் நான் என்று அகந்தையில் திரியும் மனிதர்கள் மத்தியில் இவ்வளவு பிரமாண்ட கோவிலை கட்டிவிட்டு இதை நான் கட்டவில்லை எம் மக்கள் கட்டியது என்று ,
"நாம் கொடுத்தனவும்
நம் அக்கன் கொடுத்தனவும்
நம் பெண்டுகள் கொடுத்தனவும்
கொடுப்பார் கொடுத்தனவும் "
என கல்வெட்டில் எழுத சொன்னானே இவன் அரசனா, வெறும் மனிதனா இல்லை அவன் ஈசனின் குழந்தை.
கோவிலுக்கு நிவத்தம் கொடுத்த ஒருவர் பெயரும் விடாமல் கோவில் சுற்றி கல் வெட்டாக பதிய பட்டு உள்ளது.
இதில் வரும் கதை 95% உண்மை  சிறிது கற்பனை, இதில் வரும் பெயர்கள் 98%  உண்மை.
நான் என் பதினோராம் வயதில் பெரிய கோவில் பார்த்து இருக்கிறேன், ஆனால் அது வெறும் வேடிக்கை வெறும் கல் என்று விவரம் அறியாத வயதில் பார்த்து.
ஆனால் உடையார் படித்த பிறகு
நான் தஞ்சை போனால்.
அந்த பிரமாண்ட கோவில் முன் நின்று கொண்டு
" திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி.....
என்று அவன் மொய் கீர்த்தியை உரக்க கடத்துவேன்... அந்த சிவபதசேகரன் பெயர் பதித்த கல்லை தொட்டு தடவி அவன் நின்ன இடம் தொட்டு கண்ணில் ஒற்றுவேன்,
இங்கு தானே இராசராசன் நின்று இருப்பான், இங்கு நின்று தானே இந்த கல்லை தடவி இருப்பான், இங்கு அமர்ந்து தானே நிவத்தங்கள் கொடுத்து இருப்பான், இங்கு நின்று தானே ஈசனை வணங்கி இருப்பான் என்று ஒவ்வொன்றாக தொட்டு தடவி மொய் சிலித்து போவேன்.
அவன் பாதம் தொட்ட இடம் தொட்டு வாங்குவேன்.
அவர்கள் வாழ்ந்த கோட்டை இன்று இல்லை, அவர்களின் மாட மாளிகைகள் இல்லை எல்லாம் பினால் நடந்த படையெடுப்பில் அழிக்க பட்டது,
ஆனால் அந்த கோவில் அத்தனையும் கடந்து அவர் நினைத்தது போல் இன்றும் கம்பீரமாக நிற்கிறது..
"சந்திரர் சூரியன் இருக்கும் வரை இந்த கோவில் நிலைத்து நிற்கும் "
வாழ்க சோழ தேசம்
வளர்க தமிழ்
வாழ்க இராசராசன்
வளர்க சைவம்.
** உங்கள் வாழ் நாளில் நீங்கள் இறப்பதற்குள் கட்டாயம் 'உடையார்'  படியுங்கள் ***
உடையார் படித்து விட்டு தஞ்சை போங்கள், அந்த பிரமாண்ட கோவில் முன் நின்று,
கண்ணில் ஜலம் வழிய கத்துவீர்கள், வாழ்க இராசராசன் என்று வாழ்த்துவிர்கள்.
இப்படி ஒரு படைப்பை தந்த எழுத்தாளர் 'எழுத்து சித்தர் திரு பாலகுமாரன்'  அவர்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்... 

Monday, August 7, 2017

மலைவாசல்- சாண்டில்யன்




மலைவாசல் - சாண்டில்யன் 
பக்கங்கள்     : 486
கதை களம்   : கைபர் கனவாய் மலை பிரதேசம் 
பதிப்பகம்      : வானதி பதிப்பகம் 
கதை காலம் : கி. பி 460-470

இந்தியாவை நடுநடுங்க வைத்த படையெடுப்புகளில் ஒன்று ஹீணர்கள் என்னும் நாடோடிகள் படையெடுப்பு, ஹீணர்கள் அரக்கர்கள் கருணை என்பதை அறியாத காட்டு மிராண்டிகள் கூட்டம். இந்தியாவின் செல்வ வளத்தை கொள்ளையடிக்க கைபர் கனவாய் வழியாக இந்தியாவில் நுழைந்து நாசம் செய்தார்கள். அப்போது குப்தபேரரசு காலம் பாடலிபுத்திரம் தலை நகராக கொண்டு ஆட்சி செய்தார்கள். நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக ஆனது தங்கத்தின் மதிப்பு 103ல் இருந்து 73 ஆக சரிந்தது. ஸ்கந்தகுப்தர் உடல் நிலை இல்லாமல் படுக்கையில் படுத்தார் ஹீணர்கள் இந்தியாவில் கால் வைத்துவிட்டார்கள், இந்த படையெடுப்பை ஸ்கந்தகுப்தன் தனது படை தளபதியான ஆஜித் சந்ரனை வைத்து எப்படி முறியடித்தார் என்பது தான் கதை.
பல்வேறு திருப்பங்கள் உடன் கதை சலிப்பில்லாமல் விறு விறு என நகர்கிறது, திடீர் திடீர் என்று பல திருப்பங்கள் வாசிப்பை தடையில்லாமல் நகர செய்கிறது.
ஹீணர்கள் தலைவன் அடிலன் இடம் உபத்தியான் (அஜித் சந்திரன்) சிக்கி கொள்கிறான், அடிலன் இடம் அடிமையாக இருந்து கொண்டே ஒரு உளவாளியாக எப்படி குப்தபேரரசுசை ஹீணர்கள் இடம் இருந்து காக்கிறான் என்பது தான் கதை, இது ஒரு புறம் நடக்க ஸ்கந்தகுப்தன் தம்பி பூரகுப்தன் தன் தாய் ஆனந்தா தேவி உடன் சேர்த்து ஆட்சி பிடிக்க சதி செய்கிறான், எல்லாவற்றையும் எப்படி முறியடித்து ஸ்கந்தகுப்தன் வெற்றி வாகை சூடுகிறான் என்பது தான் கதையின் இறுதி பகுதி.... இது வரலாறு உண்மை சம்பவம், கதைக்காக சில கற்பனை பாத்திரங்கள் உருவாக்க பட்டு உள்ளது.

கதை மாந்தர்கள் :
அடிலன்(ஹீணர்கள் தலைவன்), சித்ரா தேவி (அடிலன் மகள்), தோரமான (அடிலன் படை தலைவன்), காமினி (மலைவாசல் பெண்), பல்தேவ் (காமினி கணவன்), அஜீத் சந்திரன் (சித்ரா தேவி காதலன், குப்த ராஜிய சேனாதிபதி), ராகுலன்(சித்ராவிற்கு நிச்சயிக்கப்பட்டவன்), ஸ்கந்தகுப்தன் (குப்த பேரரசு அரசர்), பூரகுப்தன் (ஸ்கந்தகுப்தன் தம்பி), ஆனந்தா தேவி (பூரகுப்தன் தாய்).

Monday, July 31, 2017

வில்லோடு வா நிலவே-வைரமுத்து

வில்லோடு வா நிலவே - வைரமுத்து

நாவல்              :வில்லோடு வா நிலவே
எழுத்தாளர்     : வைரமுத்து
நாவல் வகை  : வரலாறு புதினம்
பதிப்பகம்        : சூர்யா லிட்ரேசர் (பி) லிமிடெட்
பக்கங்கள்       : 305




கதைகளம் சுமார் கி. பி 40 முதல் 60 வரையான காலகட்டம்.
எதுகை மோனையில் அடுக்கு மொழி பேசி கவிதை உரைத்து கட கட என்று ஒட்டம் எடுக்கிறது கதை. சிலப்பதிகாரம், அகநானூறு என்று மேற்கோள் காட்டிகொண்டு அதன் ஊடே கதை பயணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் வரும் மடல் ஏறுதல் வைத்து கொண்டு 50 பக்க கதையை தள்ளிகொண்டு ஓடுகிறார் வைரமுத்து. மடலேறுதல் பற்றி விரிவாக சொல்லி இருப்பது சிறப்பு . பிறகு அதே சங்க இலக்கியத்தில் வரும் தமிழர் போர்முறையை வைத்து கொண்டு ஒரு 30 பக்கங்களை ஓட்டுகிறார். பேரில் யாரை எல்லாம் கொல்ல கூடாது எப்போது போர் செய்ய வேண்டும் என்று தெளிவாக ஆசான் சொல்லுகிறார் எவ்வளவு உன்னதமான போர்முறையை தமிழர்கள் கடைபிடித்து இருக்கிறார்கள் என்று நினைக்க வியப்பாக இருக்கிறது.
" ஒரு அரசன் கடைசியாக மூச்சு விடவேண்டியது போர்களம் தான் என்று தமிழர்கள் உறுதியாக நம்புவார்கள் " அகநானூறு 61,புறநானூறு 93 என்று மேற்கோள் காட்டிவிட்டு முன்னுரையில் இதை திராவிட நாகரிகம் என்று சொல்கிறார் வைரமுத்து ம் கலைஞர் இன் நண்பர் அல்லவா கல்லதனம் இல்லாமல் இருக்குமா?. மடல் ஏறிய பிறகும் தன் காதலை ஏற்க்காததால் மனம் உடைந்த காதலன் செத்தான்பாறையில் ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்டு இறந்துவிடுகிறான் அதை பார்க்க ஊர் மக்கள் கூறுகிறார்கள் இதை வைரமுத்து இப்படி எழுதுகிறார்.
"எல்லோரும் செத்தான்பாறை நோக்கி சிறகடித்துகொண்டு இருந்தார்கள் "
மரண வீட்டிற்கு அலறலோடு ஓடும் ஒருவன் எப்படி சிட்டுக்குருவின் சிறகடிப்போடு போக முடியும்?. வைரமுத்து இலக்கியம் எழுத லாயக்கு அற்றவர் அவர் சிறந்த பாடலாசிரியர் அவ்வளவு தான் என்ற குற்றசாட்டை அவரே இதில் நிருபிக்கிறார். இப்படி தொடர்பு இல்லாத பல செய்திகளை தனக்கு தெரியும் என்பதற்காக சேர்த்து இருக்கிறார்.



வில்லவன்கோதை குடித்து விட்டு களங்காய்கண்ணி கொலை பற்றி புலவர் இடம் சொல்கிறார், பிறகு அதே கொலை பற்றி புலவர் சேரலாதன் இடம் சொல்கிறார் ஒரு முறை சொன்ன செய்தியை இரண்டாவது முறை சுருக்கி சொல்வது தான் சிறந்தது ஆனால் இரண்டாவது முறையும் நீட்டி முழங்கி பூடாகரத்தோடு சொல்கிறார் வைரமுத்து இது வாசகனுக்கும் சலிப்பை ஏற்படுத்துவது. இப்படி தான் இரண்டு வரி செய்தியை வெட்டி வர்ணனையோடு 300 பக்கம் எழுதி இருக்கிறார். நச்செள்ளையின் புலவர் மாறு வேடம் மிகப்பெரிய நகைச்சுவை 1996 இல் எழுதப்பட்ட நாவல் என்பதால் இது எல்லாம் அப்போது கொண்டாடபட்டு இருக்கலாம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சாதாரண பெண்ணை அரசன் பட்டது அரசியாக்கி இருக்கிறார் என்றால் தமிழர் உம உரிமை எவ்வளவு வலிமையானது என்று புரிகிறது. அப்போதே பெண் விடுதலை சம உரிமை எல்லாம் சகஜமாக தமிழர் இடம் இருந்து உள்ளது. பிற்பாடு தொழில் பிரிக்க வந்த வர்ண பாகுபாடு தோல் பிரித்தது இந்து மத கலாச்சாரம் அத்தனையும் கலந்து தமிழ் பண்பாடு குலைந்தது. இப்போது பெண் சம உரிமை, பெண் விடுதலை என்று போராடிகொண்டு இருக்கிறோம்.
நல்ல தேர்த இலக்கிய வாசகனுக்கும் வில்லோடு வா நிலவே ஏமாற்றமே அளிக்கும், ஆனால் தொடங்க நிலை வாசகனுக்கும் இது நல்ல தேர்வாக இருக்கும் உங்கள் வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த உதவலாம்.