இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Wednesday, January 1, 2020

2019- வாசித்த புத்தகங்கள்

இந்த ஆண்டு உருப்படியாக எதுவும் வாசிக்கவே இல்லை. வாசித்தவை கிழே... இவை அனைத்தும் வாசிக்க வேண்டிய நல்ல புத்தகங்களே.


1) யாமம் - எஸ் ராமகிருஷ்ணன்
2) எங் கதெ - இமயம்
3) சஞ்சாரம் - எஸ் ராமகிருஷ்ணன்
4) திருடன் மணியன் பிள்ளை - ஆர் இந்துகோபன்
5) அஜ்வா - சரவணன் சந்திரன்
6) பிறகு - பூமணி
7) வெக்கை - பூமணி
8)நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்
9)ரூஹ்-லட்சுமி சரவணக்குமார்.

Monday, December 18, 2017

மகாத்மா காந்தி கொலை வழக்கு - என். சொக்கன்



மகாத்மா காந்தி கொலை வழக்கு - என். சொக்கன்.
கடந்த நான்கு நாட்களாக காந்தி பற்றிய பேச்சுகலாகவே இருந்தது அத்த நேரத்தில் தான், மகாத்மா காந்தியின் கொலை வழக்கு என்ற புத்தகம் கிடைத்தது.இந்தியாவே கொண்டாடிய ஒரு மனிதரை ஏன் உலகமே கொண்டாடிய ஒரு மாமனிதரை எதற்காக கொன்றார்கள் யார் கொன்றார்கள். என்ற இக்கேள்வி உள்ளவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு விடை. ஏன் கொன்றார்கள்  என்ற கேள்விக்கு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி இருந்தாலும் எதற்காக எப்படி கொலை நடந்தது என்று மிக விரிவாக பேசுகிறது இந்தப் புத்தகம். "நமது பூமி புனித பூமி அதை தெய்வ தன்மை இல்லாததாக மாற்ற விரும்பவில்லை மக்களை  பலியிட்டு அடைகின்ற சுதந்திரம் நமக்கு தேவையில்லை அப்படி அடையும் சுதந்திரம் நிலைக்காது என்றார் - காந்தி" அவர் எதை தடுக்க நினைத்தாரோ அது சுதந்திர இந்தியாவில்  நடந்தது கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் ரத்தத்தால் உரைத்தது மதக்கலவரங்களால்  லட்ச கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டார்கள். உண்மையில் காவல்துறை நினைத்திருந்தால் படுகொலையை தடுத்து இருக்கலாம் ஜனவரி 20ம் தேதி மகாத்மா ஒரு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது அப்போது மதன்லால் என்ற ஒருவன் கைது செய்யப்பட்டான் அவன் காவல்துறையிடம் வேறு பல வாக்குமூலங்களை சொன்னான் அவன் அடிக்கடி ஒன்றைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான் அது அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதுதான்.  இதை வைத்து காவல்துறை விசாரித்திருந்தால் மாபெரும் கொலையில் தடுத்திருக்கலாம் ஆனால் ஆனால் மும்பை  மற்றும் டெல்லி காவல் துறை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை இதன் விளைவாக பத்து நாள் கழித்து மகாத்மா காந்தி கொல்லப்பட்டார்.

காந்தி கொலைக்கு இவர்கள் திட்டமிட்டது எல்லாம் விளையாட்டு தனமான ஒன்றாக தான் திட்டம் போட்டு இருக்கிறார்கள். நாதுராம் கோட்ஸே இன்று இந்து முன்னணி RSS போற்றவர்கள் கொண்டாடுகிறார்கள். காந்தியின் கொலை ஒரு தவறான புரிதலால் நிகழ்ந்தது காந்தி இஸ்லாமியர்களுக்காக பேசவில்லை அவர் அறம் எதுவோ அதைத்தான் பேசினார். அவர் மதத்தின் பெயரால் படுகொலை செய்யப்பட்டார் இந்தியாவின் முதல் பெரும் வழக்கு இது எப்படி நடந்தது என்ன தீர்ப்பு வந்தது என்ன ஆவணங்கள் யார் எல்லாம் சாட்சி சொன்னார்கள் என்று இந்த புத்தகம் பேசுகிறது. 

Thursday, November 2, 2017

நொறுங்கிய குடியரசு-அருந்ததி ராய்

புத்தகம் - நொறுங்கிய குடியரசு
எழுத்தாளர் : அருந்ததி ராய்
விருது : புக்கர் பரிசு பெற்றவர்
பதிப்பகம் : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்
முதல் பதிப்பு : 2011
பக்கங்கள் : 190


அருந்ததி ராய் இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளர். The God off small things என்று புத்தகத்திற்கு புக்கர் பரிசு பெற்று உலகளவில் அறியப்பட்டவர். இந்தியாவில் ஒடுக்கப்படும் காஷ்மீர் மணிப்பூர் நாகலாந்து போன்ற பல மக்களுக்கு குரல் கொடுப்பவர் இந்து மதத்தால் நடக்கும் அட்டுழியங்களை எதிர்த்து எழுதுபவர். இந்தியாவில் வளர்ச்சி என்ற பெயரில் நிலங்கள் கையகப்படுத்தும் அரசு அந்த இடத்தில் இருந்த தன் சொந்த நாட்டு மக்களை பலவந்தமாக துரத்துகிறது பிறகு ஏதோ ஒரு கன்பெனிக்கு அந்த இடம் கொடுக்கபடுகிறது பிறகு வெறும் ஏழு சதவிகித இலாபம் மட்டும் அவற்றிடம் இருந்து பெறுகிறது, அந்த கன்பெனிக்கு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் கடற்கரை ஓரம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை தருகிறது ஆனால் அந்த மக்கள் அனாதையாக கைவிடபடுகிறார்கள், ஒரு கணக்கு சொல்கிறது இப்படி இடம் மாற்றம் செய்யப்பட்ட மக்கள் எண்ணிக்கை 5 கோடி பேர் என்று. அறுபதாம் சுதந்திர தினம் கொண்டாட டெல்லியில் இருந்து தெரு வாசிகள் பலர் இப்படி அப்புறப்படுத்த பட்டார்கள் பிச்சைகாரர்கள் இருந்த இடம் தெரியாமல் ஆனார்கள் இதுதான் வளர்ச்சியா உண்மையில் யோசித்து பார்த்தால் இந்திய வறுமையை போக்கவில்லை வறுமையில் இருக்கும் மக்களை கொல்லவும் கூட செய்கிறது அரசு எப்போதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பக்கமே நிற்கிறது இந்த தேசத்தின் ஏழை மக்களை அது மோசமாக நடத்துகிறது இதன் வெளிப்பாடு தான் 33 ரூ சம்பாதிக்கும் ஒருவர் வறுமை கோட்டிற்கு கிழ் இருப்பவர் இல்லை என்ற அறிவிப்பு கூட அரசு வறுமை போக்க திட்டம் போடுவதை விடை அதை மூடி மறைக்கவே திட்டம் போடுகிறது நம் அரசு செய்வது எல்லாம் நினைத்து பார்த்தால் நமக்கு வெட்கி தலைகுனிவாதாக தான் இருக்கிறது. பூர்வகுடி மக்களை அவர்கள் நிலத்தில் இருந்து விரட்டியடிக்க அரசு கையாளும் யுத்தியே மாவோயிஸ்ட் என்று சொல்கிறது முதல் பகுதி. அதே நேரத்தில் மாவோயிஸ்ட்களோ மக்களோ போராட்டத்தை விரும்பவில்லை மத்திய அரசு தான் அவர்கள் கையில் திணிக்கிறது என்று மாவோயிஸ்ட்களுக்கு வக்காலத்து வாங்கும் அருந்ததி ராய் தமிழ் ஈழம் விடுதலை புலிகளை மோசம் என்பது தான் எந்த தராசில் நிருத்தி எடை போடுவது என்று தெரியவில்லை.
இதன் முதல் பகுதியில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மலைகளை வெட்டி பாக்ஸைட் எடுக்க அந்த இடத்தில் இருந்து பூர்வகுடி மக்கள் எவ்வாறு துரத்தியடிக்கபடுகிறார்கள் என்றும் எவ்வாறு மக்கள் ஒடுக்கபடுகிறார்கள் என்றும் விரிவாக பேசுகிறது.

மேலே ஏனோ வாசிக்க ஆர்வம் இல்லை. 

Wednesday, August 16, 2017

2016 நான் வாசித்த புத்தகங்கள்

2016 நான் வாசித்த புத்தகங்கள்

2016 -ஆம் ஆண்டு நான் வாசித்து முடித்த புத்தகங்கள் :
1).உடையார் - பாலகுமாரன் (6 பாகங்கள்)
2).என் அன்பு காதலா - பாலகுமாரன்
3).குரு - பாலகுமாரன்
4).இனிய யட்சினி - பாலகுமாரன்
5).கவிழ்ந்த காணிக்கை - பாலகுமாரன்
6).குன்றிமணி- பாலகுமாரன்
7).சக்ரவஹகம்- பாலகுமாரன்
8).தேடி கண்டுகொண்டேன்-பாலகுமாரன்
9).நந்தா விளக்கு - பாலகுமாரன்
10).முதல் யுத்தம் - பாலகுமாரன்
11).முதிர் கன்னி - பாலகுமாரன்
12).மெர்குரி பூக்கள் - பாலகுமாரன்
13).ஆதி ஆயுதம் - வேல ராமமூர்த்தி
14).சோழ நிலா - மூ. மேதா
15).எனதருமை டால்ஸ்டாய் - எஸ். ராமகிருஷ்ணன்
16).குமரி கண்டமா சுமேரியமா? - பா. பிரபாகர்
17).தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப் பிள்ளை
18).வீர மங்கை வேலுநாச்சியார்-குன்றில் குமார்
19).உப்பு வேலி - ராய் மாக்ஸம்
20).உலோகம் - ஜெயமோகன்
21).ஊமை சென்நாய் - ஜெயமோகன்
22).அறம் - ஜெயமோகன்
23).உறுபசி - எஸ். ராமகிருஷ்ணன்
24).கூடுகள் சிதைந்த போது - அகில்
25).கோபல்ல கிராமத்து மக்கள் - கி. ராஜநாராயணன்
26).கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்
27).சங்கதாரா - 'கலாச்சாரம்' நரசிம்மா
28).சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி
29).விசாரணை கமிஷன் - சா. கந்தசாமி
30).சொல்லப்படாத நிஜங்கள்-சா. கந்தசாமி
31).திராவிடத்தால் விழ்தோம் - குணா
32).பட்டாம் பூச்சி - ரா. கி ரங்கராஜன்
33).பாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்
34). பொன்னியின் செல்வன் - கல்கி
35).யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை - செர்கி நிலஸ்
36).வனவாசம் - கண்ணதாசன்
37).விடுதலை - அன்ரன் பாலசிங்கம்
38).வேங்கையின் மைந்தன் - அகிலன்
39).அசுரன் - ஆனந்த் நீலகண்டன்
40).வீரபாண்டியன் மனைவி - அரு. ராமநாதன் (3 பகுதிகள்) 

Sunday, August 13, 2017

ஆறுமுகன் அவதாரம்

‘சான்றோர்களே கேளுங்கள்! மலையிலிருந்து வெண்மேகமும் நீரோடைகளும் கற்பாறைகளும் எரிமலைக்குழம்பும் பிறக்கின்றன. அழிவற்றவரான காசியப பிரஜாபதியின் கனிவும் கடுமையும் முனிவும் சோர்வும் கொண்ட கணங்கள் எழுந்து மைந்தர்களாயின. அவர் உளம் கடுத்த கணத்தில் உருவான வஜ்ராங்கன் என்னும் மைந்தன் இறுகிய உடலும் அதனுள் இறுகியமனமும் கொண்டவனாக இருந்தான். தன் அகமும்புறமும் இறுகியிருப்பதைக் கண்டு அவன் வெட்கினான். தன்னை நெகிழ்த்து நீராக்கி மேகமாக்கி வானாக விரிய அவன் விழைந்தான்.
பிரம்மனை எண்ணி தவம்செய்ய முற்பட்ட வஜ்ராங்கன் வராங்கி என்னும் பெண்ணை மணந்தான். கடம்பவனத்துக்குள் ஒரு மரத்தடியில் அமர்ந்த அவன் தன் முன் சிற்றகல் ஒன்றை ஏற்றி வைத்தான். அச்சுடரை அணையாமல் பார்த்துக்கொள்ளும்படி வராங்கியிடம் சொல்லிவிட்டு ஊழ்கத்திலாழ்ந்தான். முதலில் கண்ணிலும் பின் கண்ணகத்திலும் அதன்பின் அகத்திலும் அதன்பின் அகத்தகத்திலும் அச்சுடரை நிறுத்தி தன்னை விலக்கி தானதுவாக ஆனான். அவன் அகம் தழலென நெகிழ்ந்து நெகிழ்ந்து சென்றது.


தவம் முதிர்ந்தபோது அந்த அகல்சுடர் மேலும் ஒளிகொண்டது. அந்த வெண்ணொளி வளர்ந்து ஒரு வானளாவிய மரமாக ஆனது. அந்தமரத்தின் கிளைகளில் தழலிலைகள் துளிர்த்தன. தழல்மலர்கள் இதழிட்டன. அச்சுடரின் ஒளியில் பிரம்மன் தோன்றும் கணம் மென்மழை ஒன்று பெய்து சுடர் அணைந்தது. சினந்து கண்விழித்த வஜ்ராங்கன் வராங்கியைத் தேடினான். அவள் ஒரு மரத்தடியில் நின்று கண்ணீர்விடுவதைக் கண்டான்.
“என் விழிநீரே அச்சுடரை அணைத்தது” என்றாள் வராங்கி. வஜ்ராங்கன் தவம் செய்துகொண்டிருந்தபோது இந்திரன் வந்து அவள் கற்பை கவர்ந்ததைப்பற்றிச் சொன்னாள். யானையாக வந்து அவளை அச்சுறுத்தினான். பாம்பாக வந்து அவளைத் தீண்டினான். அவள் மயங்கியபோது மன்மதனாக வந்து அவளைப் புணர்ந்தான். “உங்கள் தவம் பொய்க்க என் நிறையை அவன் வென்றான்” என்றாள் வராங்கி.
கடும்சினம்கொண்ட வஜ்ராங்கன் தன் முன் ஒரு கற்பாறையை நட்டு அதை தன் கண்ணிலும் கண்ணுள்ளிலும் உள்ளிலும் உள்ளுள்ளும் நிறைத்து மீண்டும் தவத்திலாழ்ந்தான். அவன் அகம் இறுகி இறுகி எடைமுதிர்ந்தபோது அந்தப்பாறை ஒரு கரிய வைரமாகியது. அதன் ஆடிப்பரப்பில் பிரம்மன் தோன்றினான். “என் தவத்தை அவமதித்த தேவர்களைக் கருவறுக்கும் மைந்தன் ஒருவன் எனக்குத்தேவை” என்றான் வஜ்ராங்கன். “என் தவத்தின் மேல் ஆணை. இதை தேவபிதாவான நீங்களும் கேட்டாகவேண்டும்” என்றான். சான்றோரே தவத்தின் விளைவுக்கு தெய்வங்கள் அடிமை. தன் மைந்தரை அழிக்கும் வரத்தை அளித்து பிரம்மன் கண்ணீருடன் மீண்டான்.
வராங்கி வயிறுகனத்து ஈன்றமகவின் உடல் நூறுகோடி யுகங்கள் விண்நெருப்பில் வெந்து திசையாமைகளின் எடையில் அழுந்தி உருவான கரியவைரத்தால் ஆனதாக இருந்தது. அவன் கற்பாறைகளை தன் கைகளால் சந்தனக்குழம்பென அள்ளி எடுக்கக்கூடியவனாக இருந்தான். ஆயிரம் மடங்கு எடையுடன் அவன் விண்வெளியில் சுழன்று ஒரு வான்மீனானான். ஆகவே அவன் தாரகாசுரன் என்று அழைக்கப்பட்டான்.


தாரகன் ஐந்துநெருப்புகளை வளர்த்து அதன்நடுவே நின்று பிரம்மனை நோக்கி தவம்செய்தான். பாறைகள் உருகியோடும் வெம்மை அவனை அழிக்கவில்லை. வெம்மை அவன் அகத்தை மேலும் மேலும் இறுக்கியது. அவ்வெம்மையின் உச்சத்தில் பிரம்மன் தோன்றினான். “இறப்பின்மை வேண்டும் எனக்கு” என்றான் தாரகன். “அவ்விதியை அளிக்க மும்மூர்த்திகளுக்கும் உரிமை இல்லை” என்றான் பிரம்மன். “அப்படியென்றால் என் இறப்பு ஏழுவயதான குழந்தையின் கையால் மட்டுமே நிகழவேண்டும்” என்றான் தாரகன். அவ்வரமளித்து பிரம்மன் புன்னகையுடன் சென்றான்.
சாகாவரம் பெற்றவன் என்று எண்ணிய தாரகன் மண்ணை அடக்கினான். பின் ஏழு விண்ணகங்களையும் வென்றான். தேவர்களை தன் ஏவலராக்கினான். இந்திரனை தன் தேர்க்காலில் கட்டி இழுத்து கொண்டுசென்று தன் மாளிகைப்பந்தல்காலில் கட்டிப்போட்டான். பிழையுணர்ந்து கண்ணீர் விட்ட தேவர்கள்  தாரகனை வெல்லும் வழி தேடினர். முக்கண் முதல்வனே காக்கமுடியுமென்று தெளிந்தனர்.
அவர்களின் கண்ணீரைக் கண்டு முக்கண்ணன் கனிந்தான். அவனுடைய படைப்புசக்தி கங்கையில் ஓர் வெண்ணிற ஒளியாக விழுந்தது. கங்கை அதை சரவணப்பொய்கையில் ஒரு தாமரை மலரில் அழகிய சிறு மகவாக பிறப்பித்தது. சரவணப்பொய்கையில் நீராடவந்த கார்த்திகைப்பெண்கள் அறுவர் அக்குழந்தையைக் கண்டனர். அறுவரும் அதற்கு அன்னையராக விரும்பி அதை ஆறுதிசையிலிருந்தும் அள்ளத்துணிந்தனர். அவர்களின் அன்பைக்கண்டு அக்குழந்தை ஆறுமுகம் கொண்டு புன்னகைசெய்தது. ஆறுமுகனாகிய கார்த்திகேயனை வணங்குக! அவன் கருணையால் வாழ்கின்றன மண்ணும் விண்ணும்.
ஏழு பெருங்கடல்களின் நீரால் திருமுழுக்காட்டி ஏழுவயதான குமரனை தேவர்களுக்கு சேனாபதியாக அமர்த்தினர் முதல்மூவரும். கண்டாகர்ணன், லோகிதாக்‌ஷன், நந்திஷேணன், குமுதமாலி என்னும் நான்கு படைத்துணைவர்களைத் தன் மைந்தனுக்களித்தார் முக்கண்ணன். பிரம்மன் ஸ்தாணு என்னும் படைச்சேவகனை அளித்தார். விஷ்ணு ஸம்க்ரமன், விக்ரமன், பராக்ரமன் என்னும் மூன்று கொடித்துணைவர்களை அளித்தார். வல்லமை வாய்ந்த விண்ணக நாகங்கள் ஜயன், பராஜயன் என்னும் இரு தேர்த்துணைவர்களை அளித்தன.
ஊழித்தீயின் வெம்மை எரியும் வைரமேனி கொண்ட தாரகனை வெல்ல தேவர்களால் இயலாது, அன்னையரின் படையாலேயே இயலுமென்றனர் விண்ணோர்குலத்து நிமித்திகர்கள். ஏழுவயதான கந்தன் சென்று தன் மெல்லிய விரல்களால் தொட்டதும் மண்ணிலுள்ள புனிதநீர்க்குளங்களெல்லாம் கனிந்து அன்னையராக மாறி எழுந்தன. சோமதீர்த்தம் வசுதாமை என்னும் அன்னையாகியது. பிரபாச தீர்த்தம் நந்தினி என்னும் தாயாகியது. இந்திர தீர்த்தம் விசோகையையும் உதபான தீர்த்தம் கனஸ்வானையையும் அளித்தன.
சப்தசாரஸ்வதம் கீதப்பிரியை, மாதவி, தீர்த்தநேமி, ஸ்மிதானனை என்னும் மாதாக்களாகியது. நாததீர்த்தம் ஏகசூடையையும், திரிவிஷ்டபம் பத்ரகாளியையும், த்விருபாவனம் மகிமோபலியையும், மானசதீர்த்தம் சாலிகையையும் பிறப்பித்தன. பதரிதீர்த்தம் சதகண்டையையும், சதானந்தையையும், பத்மாவதியையும், மாதவியையும் பிறப்பித்தது. மண்ணிலுள்ள அனைத்து குளிர்நிலைகளும் அன்னையராகி எழ அவர்களின் தண்மொழிகளாலும் மழைவிழிகளாலும் விண்ணகமே குளிர்ந்து மெய்சிலிர்த்தது. அவர்களின் படை விண்ணில் ஒரு நீலப்பேராறாகப் பாய்ந்தது.
சான்றோரே, அன்று மண்ணில் குளிர்ந்த விழியென கருணைகொண்டு விண்ணைநோக்கியிருந்த ஸித்ததீர்த்தம் என்னும் நீலக்குளம் ஸித்தி என்னும் அன்னையாகி தன் நீலக்குளிரலைகளை ஆடையாக்கி தன்னுள் விழுந்த மின்னலை புன்னகையாக்கி அலைநாதத்தை நூபுரத்தொனியாக்கி கார்த்திகேயனை அடைந்தாள். அவன் பின்னால் அணிவகுத்த அன்னையரின் பெரும்படையில் தானும் இணைந்துகொண்டாள்.
கருடன் தன் மைந்தனான மயிலை சுப்ரமணியனுக்கு அளித்தான். அருணன் தன் மகவாகிய பொற்சேவலை அளித்தான். அக்னி ஒளிவிடும் வடிவேலை அளித்தான். அத்ரி சிறுமைந்தனுக்கு செம்பட்டாடை அளித்தார். பிரகஸ்பதி யோகதண்டமும் கமண்டலமும் அளித்தார். விஷ்ணுவின் மணிமாலையும் சிவனின் பதக்கமும் இந்திரனின் முத்தாரமும் அவனை அணிசெய்தன.
தாரகாசுரன் தன் படைத்துணைவனான மகிஷனுடன் போருக்கெழுந்தான். மாபலி பெற்ற மைந்தனான பாணாசுரன் அவனுக்கு ரதமோட்டினான். தாரகாசுரனின் மைந்தர்களான தாரகாக்‌ஷன், கமலாக்‌ஷன், வித்யுமாலி ஆகியோரும் பெருவலிகொண்டவர்களான அண்டகாசுரன் ஹ்ருதோதரன் திரிபாதன் ஆகியோரும் அவனுக்காக படைநடத்தினர். ஏழு மன்வந்தரங்கள் அகாலப்பெருவெளியில் நடந்தது அந்தப்பெரும்போர்.
தாரகனின் எல்லையற்ற பெருவெம்மையை அன்னையரின் குளிர் அணைத்தது. அவனுடைய வைரநெஞ்சம் அவர்களின் கருணைகண்டு இளகியது. வல்லமை இழந்து அடர்களத்தில் நின்ற அவனை பன்னிருகைகளிலும் படைக்கலம் கொண்டு வந்த பேரழகுக்குழந்தை எதிர்கொண்டது. அதன் அழகில் மயங்கி மெய்மறந்த விழிகளுடன் நின்ற அவனை அக்குழந்தை வென்றது. தன் காலடியில் ஒரு கருநாகமாக என்றுமிருக்க அருள்செய்தது. தேவசேனாதிபதியின் ஒளிர்கழல்களை நெஞ்சிலணிக! அவன் பெயரை நாவிலணிக! அவன் அழியாப்பெருங்கருணையை சிந்தையில் அணிக!
போர் முடிந்ததும் ஒவ்வொரு அன்னையையும் பேரெழில்குமரன் கட்டித்தழுவி முத்தமிட்டனுப்பினான். ஸித்தி அவனுடைய ஆறு செங்கனிவாய் முத்தங்களைப் பெற்று மண்ணுக்கு மீண்டாள். பிற அன்னையரைப்போல அவள் அகம் அடங்கவில்லை. மீண்டும் அந்த முத்தங்களைப்பெற அவள் விழைந்தாள். அவள் திரும்பிப்பார்த்தபோது அறுமுகத்து அண்ணலிருந்த இடத்தில் இருப்பும் இன்மையும் அற்ற பெரும்பாழே திகழக்கண்டாள்.
அவளுடைய விருப்பு அவளை மீண்டும் பிறக்கச்செய்தது. ஏழு பிறவிகளில் ஆறு மைந்தர்களுடன் அவள் மண்ணில் பிறந்துகொண்டே இருக்கிறாள். ஆறுமுகம் கொண்ட மைந்தர்களால் அணிசெய்யப்பட்டவள் ஸித்தி. ஆறுமுறை விண்ணால் அருள்புரியப்படுபவள். ஆறுமுறை மண்ணால் வாழ்த்தப்படுபவள். அவள் வாழ்க!’

நன்றி ஜெயமோகன். 

Monday, August 7, 2017

வந்தேறிகளா??





தமிழை வளர்ப்பது என்பது, அல்லது தமிழை அடுத்த தலைமுறைக்கு கையளிப்பது, தமிழை அழியாமல் பாதுகாதது நிட்சயமாக எழுத்தாளர்கள் தான். அவர்கள் ஏட்டில் எழுதி எழுதி தான் இன்றைய தமிழ் வடிவம் நமது கைக்கு வந்து சேர்ந்து உள்ளது. வாய் மொழியில் பல ஆயிரம் ஆண்டுகளாக கடத்தப்பட்ட தமிழ் மொழி, கடந்த ஐம்பது ஆண்டில் மிக மோசமான அறிவையும், மாற்றத்தையும் அடைத்து முகம் சிதைந்து தமிங்கலமாக இருக்கிறது இன்றைய பேச்சு மொழி தமிழ். ஆனால் எழுந்து வடிவில் பார்த்தால் தமிழ் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்க வேவையான இலக்கிய படைப்புகள் இருக்கிறது, என்று ஓரளவு பெருமை பட்டு கொள்ளலாம்.

" தமிழை வளப்பது என்பது தமிழ்கா உயிரை கொடுப்பது அல்ல,
தமிழை உலக அரங்கில் ஒரு படி மேலே உயர்த்துவது தான் "

அப்படி தமிழை உலக அரங்கில் ஒரு படி உயத்தியவர்கள் தமிழை தாய் மொழியாக கொள்ளாதவர்கள் பலர் தமிழ் மீது கொண்ட ஈர்பால் தமிழுக்கு பெரும் தொண்டு செய்து உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. 'ஜி யு போப்' தொடங்கி இன்று 'ஜெயமோகன்' வரை பலர் தமிழுக்காக அறும்பாடு பட்டு இருக்கிறார்கள். நவீன தமிழ் இலக்கிய முன்னோடிகளான குறிப்பிடத்தக்கவர்கள் என்றால் குறைந்தது ந.பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் (கு.ப.ரா), திருலோக சீத்தாராமன் என்று சொல்லலாம். இவர்கள் மூவரும் தெலுங்கு தாய் மொழியாக கொண்டார்கள். அப்படி தமிழ்க்காக தங்களை அற்பனித்து கொண்டவர்களை அவர்கள் காலத்தில் வந்தவர் அடையாளம் கண்டு கொண்டாடினார்களா? அவர்கள் வாழ்க்கை தரம் எப்படி இருந்தது என்றால் அய்யோ பரிதாபம் தான். பாரதியை பட்டினி போட்டு முப்பது எட்டு வயதிலே கொன்ற தமிழ் சமுகத்திற்கு அவரின் அருமை பெருமை எல்லாம் அவர் காலத்திற்கு பிறகே தெரிந்தது.

இன்று இளைஞர்களின் கதாநாயகனாக, அவரை தலைமேல் வைத்து கொண்டாடும் இளைஞர்கள் பாரதியார் வாழ்ந்த காலத்தில் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் உண்மை. பாரதியார் பாடல்களை அவரது தம்பி விஸ்வனாத ஐய்யர் இடம் இருந்து ஒரு குஜராத் சேட்டு வாங்கிவிட்டார், பிறகு அந்த சேட்டு விடம் இருந்து எ. வி மொய்யபன் செட்டியார் ரூபாய் பத்தாயிரம் கொடுத்து வாங்கினார், இதனால் பாரதியார் கவிதைகளை அனைவரும் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதை அறிந்த அப்போதைய முதல்வர் ஓமந்தூரார் எனப்படும் ஓமத்தூர் செட்டியார் (கன்னடர்) உடனடியாக இதில் தலையிட்டு எ வி மொய்யபன் செட்டியார் இடம் இருந்து பாரதியார் கவிதைகளை வாங்கி அனைவரும் பயன்படுத்தும் வகையில் வழி செய்தார். ஓமந்தூர் செட்டியாரை பார்க்க வேண்டும் என்றால் அவர் விவசாயம் செய்யும் அவரது வயலுக்கு தான் செல்ல வேண்டும். தமிழகத்தின் முதல்வர் ஒரு இத்தனை எளிமையாக வாழ்ந்தார் என்று இந்த கால இளைஞர்களுக்கு தெரியவில்லை. ஆனால் கருணாநிதியை தெரியும் கருணாநிதியை உதாரணம் காட்டி ஒட்டு மொத்த கன்னடர்களை ஈழிப்பது உதாசீனம் செய்வது தற்போதைய தமிழ் சுழலில் உச்சத்தை தொட்டு உள்ளது என்பது தான் உண்மை. எடுத்த எடுப்பிலேயே இவர் தமிழரா வேற்று மொழி காரரா என்ற ஆராய்ச்சி தொடங்கி விடுகிறது, அவர் வேறு மொழி காரர் என்று தெரிந்த உடனே வாய்க்கு வந்த வசை எல்லாம் அவர் மீது கொட்டுவது, அவர் எழுத்தில் ஒரு வரி கூட வாசிக்காமல் அவர்மீது வசை படுவது. இதற்கு தற்போதைய உதாரணம் ஜெயமோகன், அவர் மலையாள நாயாடி குடும்பத்தில் பிறந்தவர், பொதுவாக போரை வெறுப்பவர் அதனால் ஈழத்தில் நடந்த போரை இரண்டு தரப்பிலும் எதிர்த்தவர், இந்த இரண்டு காரணங்கள் தான் அவரை வசை பாடுபவர்களுக்கு தெரியும், அவர் எழுத்தை ஒரு வரி கூட வாசித்து இருக்கமாட்டார்கள் இனியும் வாசிக்க மாட்டார்கள். அவர் எழுதிய "மாடன் மோட்சம்" ஒரே ஒரு சிறு கதை போதும் அவர் யார் என்று சொல்ல. கி. ராஜநாராயணன் கூட கன்னட மக்களை பற்றி எழுதியிருக்கிறார் அவர் கனடன் என்ற குற்றச்சாட்டு கண்மூடித்தனமாக வைக்கிறார்கள், ஆனால் அவரின் எழுத்து தான் தமிழை இந்திய அளவில் கொண்டு சென்றது தமிழுக்கு ஒரு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது, அதனால் அவர் படைப்புகள் பிற மொழியில் மொழி பெயர்க்கபட்டது உலகத்திற்கு தமிழ் படைப்பு சிறிதளவேனும் சென்றடைந்தது. தமிழை நேசித்து தமிழ்கு தங்களை அற்பனித்த மனிதர்களை கண்மூடித்தனமாக எதிர்ப்பது சரியா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுகொள்வோம்.