இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Wednesday, June 17, 2026

சின்ன அரயத்தி


அரசர்கள் காலத்தில்,அரசர் பாதுகாப்பு படையில் காவல் பணி செய்த அரயன்கள், அரசர் போரில் தோற்றதால் அரயன்கள் தப்பி காடு மலையில் பதுங்கி வாழ்கின்றனர் பிறகு காலப்போக்கில் மலை அரயன்கள் என்றும் பழங்குடிகள் என்றும் பெயர் பெறுகிறனர். பழங்குடிகள் வாழ்க்கை முறை நாம் அறிந்ததே காடுகளில் இயற்கை உணவை உண்டு வேட்டையாடி சிறிது விவசாயம் செய்து அமைதியாக வாழ்க்கை வாழ்கின்றனர். நவீன வாழ்க்கை அவர்களை சென்றடையும் போது இயல்பான அவர்கள் வாழ்கை பற்றகுறையும் வறுமையானதாக மாறுகிறது. கூடவே நாடு விடுதலை அடைந்து புதிய அரசாங்கம் காவல்துறை ஏற்படும் போது அதிகாரம் குழங்குடி மக்கள் மீது பாய்ந்து இந்தியாவெங்கும் நிகழ்ந்தது. பழங்குடிகளின் விவசாய நிலங்கள் பறிக்கபடுதல், பெண்கள் மீதான வன்முறை, பழங்குடிகள் உடமைகள் சொத்துக்கள் சூரையாடப்படுதல் அறங்கேறியது. அதிகாரத்தின் முன் கையறு நிலையில் நின்று தனது சொத்துக்கள் குடும்பம் சூரையாடப்படுவதை பார்ப்பது என்பது மிகவும் வேதனையான ஒன்று.இதற்கு அரயன்கள் விதிவிலக்கல்ல அல்ல அவர்களுக்கும் இது நிகழ்கிறது. சுதந்திரத்திற்கு பின் பல வருடங்கள் கடந்து நிலமை ஊர் முக்கியஸ்தர்கள் மூலம் சற்று மேம்படுகிறது. மெல்ல கல்வி வேலைவாய்ப்பு கிடைக்க தொடங்குகிறது. ஆனால் நாவலின் இறுதி எனக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. முதல் முறையாக கல்வி கிடைத்த ஒரு பழங்குடி சமுகம் எதை நோக்கி சொல்கிறது என்பது தான் கேள்வி ? ... கல்வி கிடைத்து வெளி உலக அனுபவம் வந்த பிறகு காதலில் நாட்ட சென்ற பார்வதி பத்மநாதன் உடன் ஓடி போகிறார்கள். இதை முற்போக்கு என்ற கோணத்தில் அணுகினாலும் முற்போக்கு சிந்தனை பற்றி நாவலில் வருவது மிக குறைவே. நவீன மனிதற்கள் எந்த பழங்குடிகளையும் அவர்கள் தனி தன்மையோடு வாழ விட்டதில்லை துப்பாக்கியோடு சென்று ஆதிவாசிகளை கொன்று குவித்த வரலாறு உண்டு. 

கொச்சுராமன் மயக்க ஊசி இல்லாமல் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு பயந்து மருத்துவமனையில் இருந்து தப்பி செல்லும் காட்சியோடு நாவல் முடிகிறது . கொச்சுராமன் மனைவி குஞ்ஞிபொண்ணு உடன் தெரிந்தே மரணத்தை நோக்கி மெல்ல காலடியை எடுத்து வைத்து செல்கிறான். 
நவீனமும் பழமையும் ஒன்றை ஒன்று உரசி விலகி செல்லும் இரண்டு வழிகள்.


Tuesday, September 2, 2025

சாம்பன்


சாகித்திய அக்காதெமி 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சாம்பன் நாவல் 1978 ஆண்டு வெளிவந்து 1980 ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. கால்கூட் என்ற புனைப்பெயரில் எழுதியவர் சமரேஷ் பாசு (1924-1988) வங்க இலக்கியத்தில் முக்கியமான இவர் புராண இதிகாச கதைகளை நவீன படுத்தி தற்காலத்திற்கு ஏற்ற வகையில் பல நூல் எழுதி இருக்கிறார். பல புகழ்பெற்ற வங்க நூல்களை தமிழில் மொழிபெயர்த்து பெரும் இலக்கிய பணியாற்றிய சு . கிருஷ்ண மூர்த்தி தான் இதையு மொழிபெயர்த்து உள்ளார்.  தமிழ் விக்கியில் அவரின் ஒரே புகைப்படம் தான் இருக்கிறது. 

இந்த உலகை விட்டுப் போக நான் விரும்பவில்லை இந்த அற்புதமான உலகில் சுற்றி திரிய ஆசைப்படுகிறேன்  என்று தொடங்குகிறது நாவல்.சரி வாங்க போகலாம் இன்றிலிருந்து 5125 ஆண்டுகள் கடந்து நாம் துவாரகைக்கு செல்ல வேண்டும் அங்கு தான் எல்லா வகையான சிறப்புகலோடும் வாய்ந்த வசுநேசர் (கிருஷ்ணன்)வாழ்ந்தார் ஆமாம் அவரைப் பார்க்கத்தான் நாம் சென்று கொண்டு இருக்கிறோம் என்று கையைப் பிடித்துக் கொண்டு நம்முடன் வாசகனுடன் உரையாடிக் கொண்டு நம்மை துவாரகைக்கு அழைத்து செல்கிறார். பதினாறாயிரம் அடிமை பெண்களை மீட்டுக் கொண்டு வந்த கிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் தன்னுடைய பெண்டீராக ஆகிக்கொண்டு உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகைக்கு தான் நாம் செல்ல போகிறோம். வையத்தில் வாழ்வாங்கு வாழும் மனிதர்கள் வானுறையும் தெய்வத்திற்கு ஒப்பாக வைக்கப்படுவார்கள் இல்லையா ? அதைப்போல தான் வசுனேசரும் ஆனால் கதை அவரைப் பற்றியது அல்ல. கதை கிருஷ்ணனுக்கும் ஜம்பவதிக்கும்
பிறந்த சாம்பன் பற்றியது. ஆமாம் நீங்கள் நினைப்பது சரிதான் துரியோதனனின் மகள் கிருஷ்ணையை சிறை எடுத்துக் கொண்டு வந்தானே அவனே தான். பிறகு கிஷ்னணையை கௌரவர்கள் மற்றும் கர்ணன் வந்து மீட்டு அஸ்தினாபுரம் கொண்டு போக பிறகு மூத்த யாதவன் பலராமன் அஸ்தினாபுரத்தை தன் கலப்பையால் கிடுகிடுக்க வைத்து மீட்டு வந்தார் இல்லையா? நான் சொல்கிறேன் அது நில நடுக்கம் தான் இவரின் கலப்பையால் வந்தது அல்ல. யாதவர்கள் பல்வேறு குலங்களாக பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருந்த காலத்தில் நாரதர் துவாரகைக்கு வருகிறார் அவரை இந்த சாம்பன் உதாசீனப்படுத்தி விடுகிறார் எல்லா உலகையும் சுற்றித் திரிகிற நாரதர் அனைத்தும் அறிந்த திறமையானவர். அவரால் இந்த புறக்கணிப்பை ஏற்று கொள்ள முடியவில்லை சாம்பனுக்கு தக்க பாடம் புகட்ட சரியான சந்தர்ப்பத்தை நோக்கி காத்திருக்கிறார். சாம்பன் எப்போதும் பெண்களுடைய உல்லாசமாக இருப்பவன் பாறையில் பட்ட நீர் எப்படி உருண்டோடுமோ அதே போல் சாம்பன் இருக்கும் இடத்தில் பெண்கள் அனைவரும் அவளை நோக்கி உருண்டோடி வருவார்கள். அழகாலும் ஆணவத்தாலும் நாரதரை உதாசீன படுத்திய சாம்பன் தன் தந்தை மூலமாகவே அந்த அழகு அழிய சாபம் பெறும் படி நாரதர் செய்கிறார்.அதாவது தொழு நோய் அவனை தாக்குகிறது ஒரு வகையில் அது விதிபயன் என்றாலும் அந்த விதி தந்தையின் சாபத்தின் மூலமாக செயல்பட துவங்குகிறது. சாபம் என்று ஒன்று இருந்தால் அதற்கு தீர்வு என்று ஒன்று இருக்கும் அல்லவா ? இறுதியில் சாம்பன் என்ன ஆனான் என்பது தான் மீதி கதை சாம்பனின் வாழ்வில் இருந்து நாம் பெற்றுக் கொள்வது நம்பிக்கை எனும் ஒளி. வாழ்வில் என்ன இடர்கள் துன்ப துயரங்கள் வந்தாலும் நம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் அனைத்தையும் மீண்டும் அடைய முடியும் என்பது தான் சாம்பன் வாழ்வு நமக்கு உணர்த்தும் பாடம். அனைத்தையும் விட எளிய கேளிக்கையும் பொழுதுபோக்கும் உண்மையான மகிழ்ச்சி என்று நாம் நினைக்கும் போது அர்ப்பணிப்பும், லட்சியமும், தொடர் செயல்பாடும் தான் வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதை சாம்பன் மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்கு செல்லாமல் தொழு நோயாளிகளுக்கு பணிபுரியும் அவர்களுக்கு மருத்துவம் செய்யும் வேலையே தனக்கு மிகவும் மகிழ்ச்சியான வாழ்வு என்று முடிவு செய்வதிலிருந்து நாம் அறிய முடிகிறது. இருக்கும் அத்தனை எழுத்தாளர்களும் மகாபாரத கதையை எழுதாத யாரும் இருக்க முடியாது அந்த வகையில் கால்கூட்டும் ஒரு மகாபாரத கதையை நவீனப்படுத்தியிருக்கிறார். எளிமையான கதை சொல்லல் முறையும் வாசகனோடு உரையாடிக் கொண்டே செல்லும் முறையும் இந்த நாவலை சிறந்த ஒன்றாக அமைக்கிறது. மகாபாரத காலத்தில் இருந்தவர்களும் சாதாரண மனிதர் தான், சொர்க்கம் நரகம் எல்லாம் அவர்கள் ஆட்சி செய்த பகுதிகள் தான் என்று சொல்கிறார் கால்கூட். இன்னும் நிறைய சொல்கிறார். வாசிங்க.....

Wednesday, April 2, 2025

பதிமுனாவது மய்யவாடி -சோ.தர்மன்

கிறிஸ்தவ மடங்களில் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் காமத்தை ஒடுக்கி கட்டுப்படுத்தி கிறிஸ்தவம் கடைபிக்கப்படும் போது எவ்வாறான மீறல்களும் குற்றங்களும் நிகழ்கிறது என்று சொல்லும் படைப்பு, தனது தாய் மாமா பூமணி இடம் இருந்து படைப்பூக்கத்தை பெற்றதாக சொல்லும் சோ.தர்மன். பூமணியின் எதார்த்தவாதத்தை கையாண்டு வெற்றி அடைந்தாரா ? என கேள்வி எனக்கு எழுகிறது. பூமணியின் அத்தனை படைப்பும் அற்புதமானவை அனைத்தும் வாசித்த பிறகு தான் சொல்கிறேன். இவரின் கூகை , சூல், பதிமுனாம் மய்ய வாடி மூன்றையும் படித்து விட்டு தான் இந்த கேள்வியை கேட்கிறேன். ??

கருத்தமுத்து எளிய விவசாயின் மகன் வேலி ஓணாண் பிடித்து மூக்கு பொடி போட்டு விளையாடும் சிறுவன் வாழ்வின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ள அவன் முன் இருக்கும் சவால் முதலில் கல்வி, மதம், காமம். பொதுவாக வறுமை இந்த வரிசையில் சேர்ந்து கொள்ளும் ஆனால் கருத்தமுத்து பெற்றோர் அதை அவனுக்கு அளிக்கவில்லை.. ஒரு பள்ளி மாணவன் வாழ்வின் வழியே ஒரு மனிதனாக மலரும் நிகழ்வு தான் மொத்த நாவல்.

நண்பன் விட்டுக்கு செல்லும் கருத்தமுத்து ஜெஸ்ஸியை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலே கருத்தமுத்துவை இழுத்து அனைக்கிறாள் ஜெஸ்ஸி? 🤔 அவனின் முதல் காமம் ஜெஸ்ஸி மீது நிகழ்கிறது. பாதிரியார் மகனுடன் காதல் வைத்து ஓடி போய் ஒரு மாதத்தில் திரும்பி வந்துவிடுகிறாள். திரும்பி வந்தவள் கன்னியாக வந்தால் என்கிறார்? எதார்த்தத்தில் இது சாத்தியம் இல்லை. ஏன் கன்னியாகவே திரும்பி வந்தவள் என்ற விளக்கமும் இல்லை. கடைசி வரை அக்கா என்றே ஜெஸ்ஸியை அழைக்கிறான் . இன்றைய 2k கிட்ஸ் சுதந்திரத்திற்கு முன்பே... 

பள்ளி படிப்பை முடித்து கிருத்துவ கல்லூரி படிப்பில் சேர்கிறான் கருத்தமுத்து ஒரு பக்கம் கல்லூரி ஒருபக்கம் சுடு காடு சுடுகாட்டில் பிணம் எறிக்கும் அரியன் கருத்தமுத்து நண்பன். இங்கு தான் கருத்தமுத்து வாழ்வின் கொடூர மனிதர்களை சந்திக்கிறான், சமுகத்தின் அத்தனை குற்றங்களையும் நிகழ்தும் இடமாக கல்லறை இருக்கிறது. மறுபுறம் கல்லூரி மற்றும் விடுதியில் பாதிரியார்கள் ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவர் உடன் உடல் தேவைக்கு உறவில் இருக்கிறார்கள், தங்களுக்கு எதிரானவர்களை பழி சுமத்தி பைத்தியம் ஆக்கி மரணிக்க செய்கிறார்கள். கன்னியாஸ்திரிகளும் பாதிரிமார்களும் எந்த இடத்திலும் தங்கள் மதத்தில் குறிப்பிட்டு இருப்பது போல வாழ்வது இல்லை என்பதை நிறுவ முயன்றிருக்கிறார் சோ.தர்மன் ஆனால் அவரை மீறி மத வெறுப்பு சில வெளிதெறிகிறது.

ஒன்று 

கன்னியாஸ்திரிகளின் விடுதியில் சமையல் செய்யும் சமையல்காரன் ஆணும் மற்ற பெண்ணும் மற்ற ஒரு நபர். செந்தூர் கூர் மழுங்கிய அம்பு.அதிலும் எய்ய முடியாத அம்பு. எய்தாலும் உடலை துளைத்து உள் செல்ல முடியாத அம்பு.. ( அதாவது சிஸ்டர்கள் இவரை தங்கள் காம தேவைக்கு பயன்படுத்த முடியாதாம்)

இரண்டு 

செந்தூர் காய்கறிகள் வங்க செல்கின்றன் அப்போது கருத்த முத்து கேட்கிறார் எண்ணே எதுக்கு இவ்வளவு வெள்றிக்கா? அது என்னவோ டா முத்து வெள்ளரிக்காய் எவ்வளவு கொடுத்தாலும் எனக்கு உனக்கென வாங்கிக்கிறாளுவ மூட்டை மூட்டையா வெள்ளரிக்காய் கொண்டு போய் கொடுக்கிறான் அவ அவ ரூமுக்கு எடுத்துகிட்டு போயிடுறா . கத்தரிக்காய் வாங்கலாம் இல்ல ? எவடா கத்தரிக்காய் கேட்கிறா அப்படியே வாங்கினாலும் நீளமா காம்பு இல்லாத கத்திரிக்காய் கேட்குறாளுங்க . (அதாவது சுய இன்பத்திற்கு கத்தரிக்காய் வெள்ளறியாம்)

மூன்று 

அப்புறம் அவங்க சாப்பிடற சாப்பாடு இருக்கேன் ராஜா சாப்பாடு முறை  தின்னு தின்னு உடம்பு தெனவெடுத்ததுனா சும்மா இருக்குமா உறக்கம் வருமா? உடம்பு மனசும் அலக்கழியும் படாத பாதபடுபடுத்தும்... 

இப்படி பல இடங்கள். 

தங்களுக்கு எதிராக இருக்கும் கன்னியாஸ்திரி அல்லது பாதிரியாரை பைத்தியம் என்று முத்திரை குத்தி ஒரு ஊருக்கு அனுப்பி சங்கிலியால் கட்டிப்போட்டு விடுகிறார்கள். அப்படி வருபவர்களுக்கு கைவிளங்கு கால் விளங்கு செய்வதற்கு ஒரு இடத்திற்கு செல்கிறார்கள். கை விளங்கு கால் விளங்கு செய்யும் இரும்பை இலவசமாக கொடுக்கிறார்கள் அதை செய்யும் ஆசாரியும் இலவரசமாக செய்து கொடுக்கிறான் கேட்டால் தொழில் தர்மம் என்கிறார்கள். ஏதோ பெரிய அற செயல் செய்வது போல் பில்டப்.செய்வது பாவ செயல் இதில் என்னடா உங்களுக்கு நாய மயிறு வேண்டி கிடக்குது ? .... ( இதான் எதார்தவாதமா )

மரக்கால் பாண்டியர் என்று ஒருவன் வருகிறான் அவன் மூலம் தன்னுடைய கம்யூனிச அரசியல் பார்வையை எழுத்தாளர் சொல்கிறார். அதாவது ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்கிற மதம் ஒரு அங்கியை இழந்தால் பத்து அங்கியை கொடு என்கிற மதம் இவர்களை மழுந்தடித்து மரக்கட்டைகளாக ஆக்கிவிட்டது .இவர்கள் எப்படி அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் ?  சிறுபான்மையாக இருக்கும் கிறிஸ்தவர்களிடம் 45 சதவீத கல்வி நிலையங்கள் சென்று விட்டதால் இந்த நாட்டில் சுதந்திரம் அடைய வழி இல்லை அதாவது அவர்கள் மரக்கட்டையாக போய்விட்டார்களாம் போரட மாட்டார்களாம். கம்யூனிசம் இரண்டாக உடையாமல் இருந்தால் இந்த நாட்டின் பெரிய புரட்சி வெடித்திருக்கும் என்கிறார். 

என்னதான் கிறிஸ்தவர்கள் மதத்தை பரப்புவதற்காக கல்வி நிலையங்களை ஆரம்பித்திருந்தாலும் இந்த நாட்டில் பெரும்பான்மையர்களுக்கு கல்வி அளித்தது கிறிஸ்தவ நிறுவனங்கள் தான். என்பதை யாரும் மறுக்க முடியாது. ( ஏன் இந்துக்கள் இந்து பள்ளியை தொடங்கி கல்வியை அளிக்க கூடாது என்று ஏதேனும் சட்டம் இருந்ததா என்ன நீங்களும் செய்ய வேண்டியது தானே)

தனக்குத் தெரிந்த டெய்லரிடம் கூட்டிக்கொண்டு போனால் சுடலை மேஸ்திரியின் பெண்டாட்டி. ஏஞ்சல் முதல் முறையாக தன் உடலை அளவெடுத்தாள். தனக்கு இப்படி ஒரு உடல் இருப்பதையே நினைத்துப் பார்த்தால். பூக்களை பல வண்ணங்களில், படைத்து பூக்க வைத்த இறைவன் அதன் நிறத்தையும், அழகையும், வாசனையையும் நுகர விடாமல் பார்க்க விடாமல் ஆடை கொண்டு மூடி வைப்பானா அப்படியானால் அந்தப் பூவை ஏன் படைக்க வேண்டும்.? பூ என்றால் பூப்பது மட்டும்தானா ? பிஞ்சாக வேண்டாமா? காயாகி கனிய வேண்டாமா வம்ச விருத்திக்கான விதைகளை பூமியில் விதைப்பது யாரோ. 

-நூலில் இருந்து....

பெண்களை வெறும் காமத்திற்கு பயன்படும் சதை பிண்டமாகவும், குழந்தைகளை பெற்று தள்ளும் மிஷின் ஆகவும் நினைக்கும் சுத்த மூடத்தனத்தின் உச்சம். 


கருத்தமுத்து ஏஞ்சல்ஸ் சிஸ்டர் உறவில் கருத்த முத்து நினைப்பது எல்லாம் நடக்கிறது எப்படி  இதான் எதார்த்தவாதமா ? . கருத்தமுத்து எதார்த்தங்களோடு முட்டி மோதி ஒரு வழியில் கனிந்த நல்ல மனிதனாக ஆகிறான் அதுவே இந்த நாவலை சிறப்பான ஒன்று என்ற நம்பிக்கையும் ஆறுதலையும் அளிக்கிறது.









Monday, August 21, 2023

 

 

கூளமாதாரி பெருமாள் முருகன்

 

 

கதை களம் கொங்கு மண்டலம் , கதை பண்ணை அடிமையாக விடப்படும் சிறுவர்கள் பற்றியது. அதனால் இது ஒரு துன்பியல் நாவலாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் வழக்கமாக இருக்கும் தமிழ் நாவல் போல் அல்லாமல் உள்ளதால் இதன் கலை வெற்றி கைகூடி உள்ளது எனலாம் . தமிழின் சிறந்த நுறு புத்தகங்கள் என்ற எஸ் ரா வின் பட்டியலில் இந்த புத்தகம் உள்ளது. நாவல் எடுத்துக்கொண்ட களத்தில் சிறப்பாகவே உள்ளது, பண்ணை அடிமை முறை இப்போது இல்லை என்றாலும் அவர்களின் கடந்தகால நினைவுகளாக இந்த நாவல் இருக்கும் . இதில் வரும் சிறுவர்களுக்கு பெயர்கள் இருந்தாலும் எல்லாம் காரண பெயர்கள் தான் . மொண்டி , கூளையன் , வவுறி , செவிடி , நெடும்பன் . ஆனால் பண்ணையார் வீட்டு பசங்களுக்கு மணி , செல்வம் என்றுதான் பெயர்கள் உள்ளது . சிறுவர்கள் கடுமையான வேலை வங்கபடுகிரர்கள் ஆடு மேய்ப்பது தான் அவர்களுக்கு விடுதலை .

வீரனை வளர்க்கும் கூளையன் திருவிழாவில் அனுமதிக்காது பொது தான் அவர்கள் எவ்வளவு ஓடுக்கப்படுகிரர்கள் என்பது புரிகிறது , இத்தனைக்கும் அவர்கள் ஆடு மேய்க்கும் போது ஏறி  விளையாடும் அதே முனியன் கோவிலில் அவர்கள் திருவிழாவின்போது கிட்ட போகமுடியாது . நிலக்காட்சிகள் நாவல் முடிந்தபின்பும் நம் மனதில் நிற்கிறது காரணம் துள்ளியமான விவரணைகள் . பொட்டல் காடும் பனைமரமும் ஏரியும் மனதில் நீங்கா  கட்சிகளாக உள்ளது. நான் எல்லாம் ஒரு பனிரெண்டு வருடங்கள் ஆடு   மேய்த்து இருக்கிறேன் விடுமுறை நாள் என்றால் அதான் வேலை என்பதால் இந்த நாவல் இன்னும் எனக்கு நெருக்கமாக உள்ளது  , அதனால் ஆடு மேய்ப்பது பராமரிப்பது போன்றவைகள்  பற்றியும் சிறப்பாகவே எழுதி உள்ளார் . பொட்டல் காடும் செவிடி வீரன் பிரிவும் நம்மை எதோ செய்கிறது ...

 

 நாவலின் குறைகள் நிறைய தகவல் பிழைகள் இருக்கிறதாக எனக்கு படுகிறது . காடை முட்டை வெள்ளைவெளேர் என்று இருந்தது என்று வருகிறது , கௌதாரி முட்டை தான் வெள்ளை காடை முட்டை பழுப்பு புள்ளிகள் இருக்கும் .கூளையன் முதலில் ஆடு ஓட்டி கொண்டு வருவான் அப்போ சிறிது நேரம் வேப்பம்மரத்து அடியில் தூங்கி எழுவான் அப்போது முதுகில் இருக்கும் தூசி போக  துண்டு போட்டு துடைக்கும் பொது அழுக்கு வரும் காரணம் குளிபதில்லை என்று வருகிறது ஆனால் அடுத்து அனைவரும் கிணத்தில் குளிக்கிறார்கள் இது தினம் நடப்பது தான் என வருகிறது , தினம் குளிக்கும் கூளையனுக்கு பிறகு எப்படி அழுக்கு வந்தது ஏன் குளிக்கவில்லை என்று பெருமாள் எழுதுகிறார் என்றல் சக்கிலிய பயல்கள் குளிபதில்லை என்பதை நிறுவ .

 செல்வம் கூளையன் பட்டி போடும் பொது இரவில் கள் எடுக்க கூளையன் பனைமரம் ஏறுகிறான் இருட்டில் கள் ஊற்றும்போது அதில் உள்ள தேனீ எல்லாம் ஊதிவிட்டு ஊற்றுவான் இருட்டில் எப்படி தேனீ தெரிந்தது ? பிறகு அவன் மரத்திலே குடிப்பான் அபோது அவன் வாய்க்கு தேனீ போவிடத்தை துப்புவான் இது எப்படி முனாடியே அவன் உத்தி தானே கள் உற்றினான் முன்னுக்கு பின் முரன். .