இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, October 2, 2017

வெட்டு மலை முகடு

வெட்டு மலை முகடு ( Hacksaw Ridge)
1 ஏப்ரல் 1945 இரண்டாம் உலகம் யுத்தத்தின் போது ஒகைநாவ (Okinawa) என்ற இடத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டிற்கு இடையில் நடந்த ஒரு போரையும் அந்த போரில் ஈடுபட்ட Desmond doss
என்பவர் வாழ்வை வைத்து  எடுக்கப்பட்ட திரைப்படம் Hacksaw Ridge. (உண்மை கதை) இயக்குனர் மெல் கிப்சன் ( mel Gibson) கதாநாயகனாக Andrew Garfield மிகச்சிறப்பாக நடித்து விருதுகள் பெற்று உள்ளனர்... Doss குழந்தையாக இருக்கும் போது அவர் சகோதரன் உடன் சண்டையில் அவனை செங்கல்லால் அடித்து விடுகிறான் அது முதல் கிருஸ்துவ முறைப்படி யாரையும் தாக்ககூடாது  கொல்ல கூடாது என்று முடிவு செய்கிறார். ஒருமுறை ஒருவர் அடிபட்ட போது அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு Dorothy சந்தித்து காதல்வயபட்டு அவரை பிறகு திருமணம் செய்துகொண்டார். இராணுவத்தில் சேர நினைத்து தன் விருப்பத்தை தந்தை இடம் சொல்ல அவர் மறுப்பு தெரிவிக்கிறார், அவர் முதல் உலக போரி ஈடுபட்டவர் அதில் பல நன்பர்களை இழந்தவர், அதனால் போர் எல்லாம் பயனற்றது நாம் ஏன் போரில் இறக்க வேண்டும் என்று போரை இராணுவத்தை வெறுப்பவர். doss ஐ அந்த கல்லறைக்கு அழைத்து சென்று என் மகனை நான் இங்கு கானவிரும்பவில்லை அதனால் நீ இராணுவத்தில் இணைய வேண்டாம் என்கிறார் ஆனால் அவர் ஏற்கனவே இராணுவ அறிக்கையில் கையெழுத்து போட்டுவிட்டதால் வேறு வழி இல்லை. தன் காதலி டார்தி இடம் சொல்லி விட்டு இராணுவ பயிற்சி பள்ளி செல்கிறார் மிக கடுமையான இரணுவத்திற்கே உறிய பயிற்சி, அங்கு டாஸ் மிக அமைதியாக இருக்கவே மற்றவர்கள் அவரை அடிக்கிறார்கள் கேலி செய்கிறார்கள் எல்லவற்றையும் பொருத்துகொண்டு பைபிள் வாசித்து கொண்டு இருக்கிறார். உண்மையான கிருஸ்துவன் யாரையும் கொல்வதில்லை என்பதால் அவர் துப்பாக்கி தொட மறுக்கிறார் அதனால் அவர் மீது இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு போடபடுகிறாது, அந்த வழக்கில் இருந்து அவன் தந்தை அவனை கபற்றுகிறார், பயிற்சி முடிந்து அமெரிக்கா படையில் 77 வது பிரிவில் மருத்துவ உதவிக்காக அவர் பணியில் சேர்ந்தார். இவர்கள் அங்கு செல்லும் போதே இவர்களுக்கு முன்பு சென்ற படையில் இறந்தவர்களை பினகுவியலாக ஏற்றிகொண்டு சொல்லும் போது இவர்களும் இப்படி தானே திரும்புவார்கள் என்று தோன்றுகிறது இருந்தும் மரணகளம் நோக்கி செல்கிறார்கள். போர் தொடங்குகிறது உண்மையில் ஒரு போர்களம் எப்படி இருக்கும் என்று மிக தத்ரூபமாக கண்முன் நிறுத்துகிறது இந்த திரைப்படம், எங்கு பார்த்தாலும் ஒரே மரண ஓலம் இரத்தம் புகை நெருப்பு உடல் சிதறி கிடக்கும் மனிதர்கள், செத்து நாறும் உடல்கள் என்று நம் வாழ்நாளில் போரை வெறுக்க செய்து விடும் இந்த திரைப்படம். ஒரு நொடியில் ஒருவன் இருவரை கொல்கிறான் அடுத்த நொடி அவனும் கொல்ல படுகிறான் அப்போது இங்கு நடக்கும் போர்கள் எல்லாம் எதற்காக என்று தோன்றுகிறது, ஒரு கட்டத்தில் அமெரிக்க படை பின்வாங்கிவிடுகிறது அடிபட்ட அத்தனைபேரையும் போர்கலத்திலே விட்டுட்டு எஞ்சியவர்கள் திரும்பி விடுகிறார்கள்.
ஆனால் doss மட்டுமே தனியாளாக அடிபட்டவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்புகிறார். அவர் சோர்ந்து விழும்போதெல்லாம் இன்னும் ஒருவர் இன்னும் ஒருவர் கடவுளே என்று சொல்லும் போது கதை நம்மை கலங்க செய்கிறது. மிக நேர்த்தியான ஒலி, ஒளி பதிவுகள் மேலும் மேலும் காட்சிகளை உண்மையாக்குகிறது. அந்த போரில் 72 பேர் உயிரை டாஸ் காபற்றுகிறார், ஆனால் எல்லோருக்கும் கையோ காலோ கண்ணோ பாதிக்கப்பட்ட நிலைதான். அவர்களை எல்லாம் காப்பாற்றி விட்டு doss வரும் காட்சிகளில் ஏதோ நம்மை கலங்கடிகிறது. மீண்டும் போர் 82 இரண்டு நாள் நடக்கிறது இறுதியில் ஜப்பான் சரணடைகிறது இந்த போரில் doss காயம் அடைகிறார் அவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார். இதோடு படம் முடிகிறது.
இந்த திரைப்படம் பார்த்த பிறகு போர் எவ்வளவு கொடுமையானது எத்தனை உயிர்கள் இதற்காக பலி கொடுக்கபடுகிறது எதன் பொருட்டும் இனி போர் நிகழகூடாது என்று நினைக்க செய்கிறது இங்கு தான் இந்த திரைபடத்தின் வெற்றி உள்ளதாக தோன்றுகிறது. இந்த படம் இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்றது மேலும் சிறந்த கதை, சிறந்த ஒலி, ஒளி பதிவு, சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம் என்ற பல விருதுகளை வென்றது.

Desmond doss அந்த போரில் அடிபட்டு ஐந்து வருடம் மருத்துவமனையில் இருக்கிறார் பிறகு 96% உடல் குறையோடு வீடு வருகிறார் தொடர்ந்து கொடுக்கபபட்ட மருந்தால் அவர் காது கேட்காமல் போகவே  100% உடல் இயக்கம் இல்லாதவர் ஆகிறார் மார்ச் 2006 ம் ஆண்டு 87 வயதில் இறந்தார். அமெரிக்காவின் உயரிய விருது இராணுவத்தில் எதிரியை கொல்லாதவருக்கு முதன் முதலில் doss க்கு கொடுக்கப்பட்டது. கான வேண்டிய திரைப்படம். 

No comments:

Post a Comment