இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Friday, October 20, 2017

ஜீரோ டிகிரி - விமர்சனம்

நாவல் : ஸீரோ டிகிரி
எழுத்தாளர் : சாரு நிவேதிதா
பதிப்பகம் : ஜியே பதிப்பகம்
முதல் பதிப்பு : 1998
பக்கங்கள் : 252
வகை :  நான் லீனியர் நாவல்
விருது : சுவிட்சர்லாந்தின் யான் மிஸால்ஸ்கி இலக்கிய விருதுக்கு  2013-ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. 



முனியாண்டி கடும் உழைப்பாளி எந்த வேலையும் தட்டாமல் செய்வான் ஆனால் பேச்சு என்று வந்தால் வாக் னா வாக் டாக் னா டாக் பேக் னா பேக் சாக்னா எழுதுறது லுக்னா பாக்குறது பெக்னா சரக்கு இப்படி தான் பேசுவான்.

[°]

நீனா மாதிரி எத்தனை எத்தனை நீனாக்கள் வரலாற்றில் சுவடே இல்லாமல் கொடுமை சித்ரவதைகள் அனுபவித்து இருப்பார்கள் என்று நினைத்தால் கடும் மன வலி எழுகிறது. அதுவும் ஒரு மாகா ராணியின் பெண் அடுத்த நாள் யாருக்கோ அடிமை. வரலாற்றில் நாம் வீரம் என்று கொண்டாடுவது எல்லாம் இதை தானா, அடுத்த நாட்டை கைப்பற்றுவது, அவன் பிள்ளைகள் மனைவிகளை அடிமை படுத்தி தாசியாக விற்பது, அல்லது அனந்தபுரத்தில் தள்ளுவது. தமிழர்கள் தலைமேல் வைத்து ஆடிகொண்டு இருக்கும் இராஜராஜ சோழன் செய்ததும் இதை தானே?.முனியாண்டி எங்கு செத்தான் தென் ஆப்பிரிக்கா அல்லது காஸ்மீரா?. கல்வியறிவு உயர்ந்து மட்டும் என்ன பயன் இன்னும் சாமியார்கள் பெண்களை வன்புணர்வு செய்து கொண்டு தானே இருக்கிறார்கள் அப்போ எதுவும் மாறபோவது இல்லையா மனித அகம் எத்தனை நூற்றாண்டு கடந்தாலும் தனக்குள் இருக்கும் அந்த கொடுர குணத்தை கடத்தி கொண்டே தான் இருக்குமா.

[°]

கூண்டு கிளியின்
குஞ்சுற்கு
ஏன்
சிறகுகள்
முளைக்கிறது ?

[°]

ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை இது வரை சாரு வின் மூன்று புத்தகம் படித்து இருக்கிறான் எக்ஸைல் வாழ்வது எப்படி சீரோ டீகிரி இந்த மூன்றையும் வைத்து ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளை சொன்னது சாரு எழுதுவது சரிபாதி அவர் சொந்த கதை சோக கதை என்று. ஒன்றை எழுதுவது பிறகு அதை விட்டுவிட்டு வேறு எதையாவது எழுதுவது பிறகு எப்போ தோன்றுகிறதோ அப்போது அதை ஐம்பது பக்கம் தாண்டி எழுதுவது கேட்டால் உலகத்தில் இப்படி எழுத ரெண்டோ மூன்றோ பேர் தான் இருக்கிறார்கள் அதில் நானும் ஒருவன் என்று விளக்கம் தருவார்.
முனியாண்டியை நாய் துரத்துகிறது வல் வள் வள் கல் வள் வாஆல் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் வள் க்கள் வல் கல் வல்.   புகழ் பெற்ற விளையாட்டு வீரர் மணிக்கு முப்பது ஒரு கிலோமீட்டர் வேகத்தில் ஓடுகிறார்.
தேன் மூத்திரம் நாய் பானை இரும்பு விந்து மரம் வைப்பாட்டி வாசனை நான் கோழி மலம் வீடு மூக்கு சளி மொழி எல்லாம் வெறும் சத்தத்தால் ஆனது இந்த உலகமே சத்தங்களால் ஆனது இப்போது எழுதி கொண்டு இருக்கும் இதுவும் தான். எக்ஸைல் இல் வரும் திவாகர் நாய் போலவே இதிலும் ஒருவன்.

{°}

இதில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் எல்லாம் நம் எங்கோ அன்றாடம் கேட்பது படிப்பது ஒரு கண்ணாடி அறை உள் நடப்பவை நாம் அறிந்து இருந்தாலும் அவர்களின் குரல் நம் காதில் விழுவதில்லை அந்த குரல்களின் அலறல் தான் சாரு வின் எழுத்து அதை தான் டார்ன்கிஸ்யும் ரைட்டிங் என்று சொல்கிறார்கள் அப்புறம் இது பின்நவினதுவம் என்ற வார்த்தை ஒத்துவரவில்லை நான்லீனியர் நான் சரி ¿. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அனைத்தும் செக்ஸ் சம்மந்தப்பட்டது என்பதால் அதை அதே வார்த்தைகள் கொண்டு சாரு சாடுகிறார் ஆனால் அதில் இங்கு வாசிப்பவர்களுக்கு அந்த ஆபாச வார்த்தைகள் தான் தெரிகிறதே ஒழிய அவர் பேசும் பொருள் புரிவதில்லை இதனா‌ல் சாரு ஒரு குப்பை என்று அவரை நாடு கடத்தி தூக்கில் போட வேண்டும் என்று எல்லாம் பேசுகிறார்கள். மூடர்கள். நீனா விற்கு போய் பிடித்து விட்டது அதனால் அவள் முலை மொட்டை வெட்டி எடுத்தான் அந்த சாமியார் பிறகு அதில் பிளகாய் பொடி அள்ளி கொட்டினான் இதை எப்படி எழுதுவது ரோஜா மொட்டு கிள்ளப்பட்டது என்றா பைத்தியக்காரத்தனம் மாக இல்லை செக்ஸ் பற்றிய புரிதல் இல்லாமை தான் இதற்கு காரணம். என்று சுத்த தமிழ் எழுத்தாளன் சொல்கிறான்.

[¿]

காஸ்மேனியர்கள் கார்மீனியர்களை கொள்கிறார்கள் கார்மீனியர்களை கார்மீனியர்கள் கொள்கிறார்கள்  என்ன வித்தியாசம் ஒரு எழுத்து தாணே ஆனால் இது 2700 ஆண்டுகளாக இது நடந்து வருகிறது கார்மீனியர்கள் கிருஸ்துவர்கள் அரேபியர்கள் அந்த நாட்டை கைப்பற்றிய போது (1908) சுமார் பதினெட்டு லட்சம் மக்கள் கொள்ளப்பட்டார்கள் இப்படி உலகம் முழுவதும் எத்தனையோ படுகொலைகள் இன்று முதல் நடந்து கொண்டு நான் இருக்கிறது பிறகு என்ன தான் வளச்சியோ என்ன எழவோ ஒன்று புரியவில்லை. இப்படி genocide மத சண்டை சாதி சண்டை பெண்கள் கொடுமைகள் என்று எல்லவற்றையும் சாடுகிறார் சாரு இதனால் தான் என்னவோ சாரு நிவேதிதா நாகரீகம் முன்னேற்றம் என்ற பழமைவாத ஒழுக்க விதிகளை எட்டி மிதிக்கிறார் போலும் எந்த மாற்றமும் நிகழாத போது பிறகு என்ன ஒழுக்கம் கட்டுபாடு வெங்காயம் கந்தரிக்காய் என்று.

[°]

தாயுமானவன் போன்றவர்கள் ஏன் சக மனிதனை இந்தனை கொடுமை செய்கிறார்கள், மனித அகம் ஏன் மற்ற மனிதன் துண்ப படும் போது மகிழ்கிறது அவனுள் இருக்கும் மிருக தனமா மிருகங்கள் இப்படி செய்கிறதா. மனிதர்கள் தான் தன் சக மனிதனை எப்படி எல்லாம் கொடுமை படுத்தலாம் என்று ஆயிரம் ஆயிரம் வழிகளை கண்டுபிடித்து இருக்கிறான் வரலாற்றில் என்ன என்ன சித்ரவதை முறைகள் இருந்தன என்று பார்த்தால் தலை கிறுகிறுக்கும் இப்படி எல்லாம் மனிதன் சிந்திக்க முடியுமா என்று தோன்றும். தாயுமானவன் வாயில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றினால் என்ன செய்வான் அம்மனை வேண்டுவனா. அவன் கால் தசையை மெழுகுவர்த்தியால் சுட்டு வெட்டி எடுத்து வெந்துவிட்டதா என்று சாபிட சொன்னால். Zero° degree is point of a perfect 360° circul we all are standing in zero point we can watch around the entire world but we don't but charu did this then only can write zero degree.

[°]

இந்த நாவலின் சவால் பல பக்கங்களில் சிதறி கிடக்கும் நாவல் பகுதிகளை ஒன்று திரட்டி தொகுத்து கொள்வது தான். உங்கள் நாட்டில் யானை இருந்தும் நீங்கள் ஏன் உண்பது இல்லை. வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் உண்மை. சரி நீங்களும் வாசித்து தான் பாருங்களேன்.

[.....]

Monday, October 2, 2017

வெட்டு மலை முகடு

வெட்டு மலை முகடு ( Hacksaw Ridge)
1 ஏப்ரல் 1945 இரண்டாம் உலகம் யுத்தத்தின் போது ஒகைநாவ (Okinawa) என்ற இடத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாட்டிற்கு இடையில் நடந்த ஒரு போரையும் அந்த போரில் ஈடுபட்ட Desmond doss
என்பவர் வாழ்வை வைத்து  எடுக்கப்பட்ட திரைப்படம் Hacksaw Ridge. (உண்மை கதை) இயக்குனர் மெல் கிப்சன் ( mel Gibson) கதாநாயகனாக Andrew Garfield மிகச்சிறப்பாக நடித்து விருதுகள் பெற்று உள்ளனர்... Doss குழந்தையாக இருக்கும் போது அவர் சகோதரன் உடன் சண்டையில் அவனை செங்கல்லால் அடித்து விடுகிறான் அது முதல் கிருஸ்துவ முறைப்படி யாரையும் தாக்ககூடாது  கொல்ல கூடாது என்று முடிவு செய்கிறார். ஒருமுறை ஒருவர் அடிபட்ட போது அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அங்கு Dorothy சந்தித்து காதல்வயபட்டு அவரை பிறகு திருமணம் செய்துகொண்டார். இராணுவத்தில் சேர நினைத்து தன் விருப்பத்தை தந்தை இடம் சொல்ல அவர் மறுப்பு தெரிவிக்கிறார், அவர் முதல் உலக போரி ஈடுபட்டவர் அதில் பல நன்பர்களை இழந்தவர், அதனால் போர் எல்லாம் பயனற்றது நாம் ஏன் போரில் இறக்க வேண்டும் என்று போரை இராணுவத்தை வெறுப்பவர். doss ஐ அந்த கல்லறைக்கு அழைத்து சென்று என் மகனை நான் இங்கு கானவிரும்பவில்லை அதனால் நீ இராணுவத்தில் இணைய வேண்டாம் என்கிறார் ஆனால் அவர் ஏற்கனவே இராணுவ அறிக்கையில் கையெழுத்து போட்டுவிட்டதால் வேறு வழி இல்லை. தன் காதலி டார்தி இடம் சொல்லி விட்டு இராணுவ பயிற்சி பள்ளி செல்கிறார் மிக கடுமையான இரணுவத்திற்கே உறிய பயிற்சி, அங்கு டாஸ் மிக அமைதியாக இருக்கவே மற்றவர்கள் அவரை அடிக்கிறார்கள் கேலி செய்கிறார்கள் எல்லவற்றையும் பொருத்துகொண்டு பைபிள் வாசித்து கொண்டு இருக்கிறார். உண்மையான கிருஸ்துவன் யாரையும் கொல்வதில்லை என்பதால் அவர் துப்பாக்கி தொட மறுக்கிறார் அதனால் அவர் மீது இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு போடபடுகிறாது, அந்த வழக்கில் இருந்து அவன் தந்தை அவனை கபற்றுகிறார், பயிற்சி முடிந்து அமெரிக்கா படையில் 77 வது பிரிவில் மருத்துவ உதவிக்காக அவர் பணியில் சேர்ந்தார். இவர்கள் அங்கு செல்லும் போதே இவர்களுக்கு முன்பு சென்ற படையில் இறந்தவர்களை பினகுவியலாக ஏற்றிகொண்டு சொல்லும் போது இவர்களும் இப்படி தானே திரும்புவார்கள் என்று தோன்றுகிறது இருந்தும் மரணகளம் நோக்கி செல்கிறார்கள். போர் தொடங்குகிறது உண்மையில் ஒரு போர்களம் எப்படி இருக்கும் என்று மிக தத்ரூபமாக கண்முன் நிறுத்துகிறது இந்த திரைப்படம், எங்கு பார்த்தாலும் ஒரே மரண ஓலம் இரத்தம் புகை நெருப்பு உடல் சிதறி கிடக்கும் மனிதர்கள், செத்து நாறும் உடல்கள் என்று நம் வாழ்நாளில் போரை வெறுக்க செய்து விடும் இந்த திரைப்படம். ஒரு நொடியில் ஒருவன் இருவரை கொல்கிறான் அடுத்த நொடி அவனும் கொல்ல படுகிறான் அப்போது இங்கு நடக்கும் போர்கள் எல்லாம் எதற்காக என்று தோன்றுகிறது, ஒரு கட்டத்தில் அமெரிக்க படை பின்வாங்கிவிடுகிறது அடிபட்ட அத்தனைபேரையும் போர்கலத்திலே விட்டுட்டு எஞ்சியவர்கள் திரும்பி விடுகிறார்கள்.
ஆனால் doss மட்டுமே தனியாளாக அடிபட்டவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்புகிறார். அவர் சோர்ந்து விழும்போதெல்லாம் இன்னும் ஒருவர் இன்னும் ஒருவர் கடவுளே என்று சொல்லும் போது கதை நம்மை கலங்க செய்கிறது. மிக நேர்த்தியான ஒலி, ஒளி பதிவுகள் மேலும் மேலும் காட்சிகளை உண்மையாக்குகிறது. அந்த போரில் 72 பேர் உயிரை டாஸ் காபற்றுகிறார், ஆனால் எல்லோருக்கும் கையோ காலோ கண்ணோ பாதிக்கப்பட்ட நிலைதான். அவர்களை எல்லாம் காப்பாற்றி விட்டு doss வரும் காட்சிகளில் ஏதோ நம்மை கலங்கடிகிறது. மீண்டும் போர் 82 இரண்டு நாள் நடக்கிறது இறுதியில் ஜப்பான் சரணடைகிறது இந்த போரில் doss காயம் அடைகிறார் அவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார். இதோடு படம் முடிகிறது.
இந்த திரைப்படம் பார்த்த பிறகு போர் எவ்வளவு கொடுமையானது எத்தனை உயிர்கள் இதற்காக பலி கொடுக்கபடுகிறது எதன் பொருட்டும் இனி போர் நிகழகூடாது என்று நினைக்க செய்கிறது இங்கு தான் இந்த திரைபடத்தின் வெற்றி உள்ளதாக தோன்றுகிறது. இந்த படம் இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்றது மேலும் சிறந்த கதை, சிறந்த ஒலி, ஒளி பதிவு, சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம் என்ற பல விருதுகளை வென்றது.

Desmond doss அந்த போரில் அடிபட்டு ஐந்து வருடம் மருத்துவமனையில் இருக்கிறார் பிறகு 96% உடல் குறையோடு வீடு வருகிறார் தொடர்ந்து கொடுக்கபபட்ட மருந்தால் அவர் காது கேட்காமல் போகவே  100% உடல் இயக்கம் இல்லாதவர் ஆகிறார் மார்ச் 2006 ம் ஆண்டு 87 வயதில் இறந்தார். அமெரிக்காவின் உயரிய விருது இராணுவத்தில் எதிரியை கொல்லாதவருக்கு முதன் முதலில் doss க்கு கொடுக்கப்பட்டது. கான வேண்டிய திரைப்படம். 

Tuesday, September 26, 2017

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாவல் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
எழுத்தாளர் : ஜெயகாந்தன்
பக்கங்கள் : 330
பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்





கிருஷ்ணாபுரம் என்னும் கிராமத்தில் வாழ்ந்த ஒரு மனிதன் இல்லை ஒரு வீட்டு இல்லை ஒரு உலகத்தின் கதை. சபாபதி பிள்ளை என்ற அவர் தனது மனைவி வேறு ஒருவனுடன் ஓடி போனதை இரவோடு இரவாக மறைப்பதற்காக இவரும் வீட்டை விட்டு ஓடி விடுகிறார், கிராமம் அவர்கள் குழந்தை இல்லாத துக்காதால் எங்கோ சன்யாசம் போய்விட்டதாக நினைக்கிறது. பர்மா போரின் போது ஒரு பெண்ணை சந்தித்து தப்பி இந்தியாவுக்கு வரும் போது ஒரு குழந்தையை கண்டெடுத்து வளர்க்கிறார்கள். அக்குழந்தைக்கு தனது சொத்துக்களை எல்லாம் சபாபதி பிள்ளை உயிர் எழுதி கொடுத்துவிடுகிறார். சபாபதி பிள்ளை அவரது அங்லோ இந்தியன் மனைவியும் இறந்து விடவே அவர் வளர்ப்பு மகன் ஹென்றி அவன் பப்பா ஊரான கிருஷ்ணராஜபுரம் வருகிறான். அதுவும் அவன் பப்பா தனது சொத்துகளை எல்லாம் அவன் பெயருக்கு எழுதி கொடுத்த உயிலோடு. நகரத்தில் வாழ்த ஒருவன் எப்படி தனக்கான உலகை எந்த நெருடலும் இல்லாமல் எப்படி ஏற்று நகர்கிறான் என்பது வியப்பு, பலருக்கு அடுத்தவர் வீட்டிற்கு சென்றாலே தூக்கம் வராது ஆனால் ஹென்றி மிக இயல்பாக அனைத்தையும் ஏற்று கொண்டு வாழ்வின் பகுதியாக மகிழ்ச்சியாக கடக்கிறான். பியானோ இசையை கிராமத்து கால்நடைகள் கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் மணி ஓசையோடு ஒப்பிடுகிறான், அருமையான தருணம் அது பொதுவாக மேட்டு குடி வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தனக்கு கீழ் இருப்பதை மிக எளிதாக உதாசீனம் செய்வார்கள் முகம் சுளிப்பார்கள், ஆனால் ஹென்றி ஒரு இடத்தில் கூட எதையும் குறைகூறவோ முகம் சுளிக்கவோ இல்லை ஒவ்வொன்றில் இருந்தும் ஏதாவது ஒன்றை கற்றுகொள்ள முனைவதோடு அதை வாழ்வின் மகிழ்ச்சியான தருணமாக மாற்றி கொண்டு மிக இயல்பாக இருக்கிறான். குறிப்பாக ஆற்றில் குளிக்கும் போது சோப்பு விழுந்துவிடுகிறது இதை 'சோப்பெங்கபா' என்று பாடலாக மாற்றி பல நேரங்களில் பாடி மகிழ்கிறான். நமக்கெல்லாம் சோப்பு விழுந்த அய்யோ சோப்பு போச்சே தான் தோன்றும்?!. அவன் பப்பா வின் எந்த சொத்தும் வேண்டாம் அவர் வாழ்ந்த இந்த ஊரும் அவர் உடன் வாழ்ந்த சக மனிதர்களும் போதும் அதுவே வாழ்வின் மகத்தானவை என்று ஹென்றி நினைக்கும் போது, அப்போ நமக்கெல்லாம் நாம் பிறந்து வளர்ந்த மண் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு வரும் ஆனால் எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு மனிதனுக்கு அவன் அப்பா வாழ்ந்த ஊர் என்பதால் அந்த மண் மீதும் மக்களின் மீதும் ஈர்ப்பு வருகிறது என்றால் எப்படி நிகழ்கிறது இது? ஒரு வேளை சாபாதி பிள்ளைக்கு பிறந்த மகனாக இருந்தால் கூட குருதி வழி ஈர்ப்பு என்று சொல்லலாம் ஆனால் எந்த தொடர்புமே இல்லாத ஒருவனுக்கு அவன் பப்பாவின் அன்பு மட்டுமே இதை நிகழ்துகிறது என்றால் அன்பு எந்த மகத்தான ஒன்று, உண்மையில் மிக நுணுக்கமான மாற்றங்களை அப்பு செலுத்துபவர்கள் நம்மில் நிகழ்த்துகிறார்கள். வெறும் குருதி வழி சொந்ததிற்காக தான் நம் உறவுகள் மீது அன்பு செலுத்துகிறோம் ஆனால் அது அன்பல்ல கடமை என ஆகிறது, அப்புடையார் எம்பும் உரியர் பிறர்க்கு தானே? எம்பும் தமது சொந்தங்களுக்கு என்றால் அது அன்பிலார் எல்லாம் தமக்குறியர் தானே. இதில் வரும் அனைத்து பெண்களும் ஏதோ ஒரு வகையில் கனவனை பிரிந்து வாழ்கிறார்கள், தேவராஜன் மனைவி, அக்காம்பள், துரைக்கண்ணு மாமியார் பஞ்சவர்ணத்தாமள் , கிளியம்பள், ஏன் ஹென்றி தாய் கூட கனவனை இழந்தவர் தான். பெண்கள் எல்லா வாழ்வில் மிக எளிதாக புரக்கனிகபடுகிறார்கள் என்று நினைத்தால் அதே நேரம் சப்பாத்தி பிள்ளை மனைவி கனவனை புரக்கனித்து வேறு ஒருவனுடன் ஓடி போகிறாள், மனையகாரர் மனைவி நாகம்மா சிறு தவறுக்காக அவரை மிக கடுமையாக திட்டுகிறாள் அப்போது இது இரண்டுமே இரு முனை போல எப்போதும் மறி மறி நடந்து கொண்டே தான் இருக்கிறது அது தான் வாழ்வின் போக்கா எடுத்துகொண்டு நாம் நகர வேண்டியுள்ளது.
ஒரு இடத்தில் ஹென்றி சொல்கிறான் எனக்கு மதம் கிடையாது என்று, துரைக்கண்ணு அப்புறம் சமி கும்பிடுற என்று கேட்கும் போது இறைவனை கும்பிட மதம் எதற்கு என்று இப்படி பல நுக்கமான செய்திகளை சொல்லியபடி நாவல் நகர்கிறது. ஒரு இடத்தில் ஒரு பெண் நிர்வாணமாக தெருவில் சுற்றுகிறாள் அவளை எல்லோரும் பைத்தியம் என்கிறார்கள், நிர்வனமாக இருந்தால் பைத்தியமா சாமியார்கள் எல்லாம் நிர்வாணமாக தானே இருக்கிறார்கள் ஏன் சாமி சிலைகள் கூடத்தான் அப்போ உண்மையில் யார் பைத்தியம்? குளியல் அறையில் நாம் கூட அறைமணி நேரம் உடைகலைகிறோம் அப்போது நாம் கூட அறைமணி நேரம் பைத்தியம் தானே. என்னால் தேவராஜன் விட்டில் இருந்து துரைக்கண்ணு வீட்டிற்கு வாசகனாகவே செல்ல முடியவில்லை ஆனால் ஹென்றி எந்த சலனமும் இல்லாமல் போகிறான் அங்கு தங்கி குழந்தைகளோடு விளையாடி மகிழ்ச்சியாக இருக்கிறான். எது ஒன்றிலுமே ஒரு அழகு இருப்பதாக நினைத்து அதை செய்யும் ஹென்றி போலவே நாமும் இருக்க வேண்டும் அல்லவா ஆனால் நமக்கு விருப்பம் உள்ளது விருப்பம் இல்லாதது என்று பார்த்து பார்த்து வேலைகள் செய்கிறோன், ஹென்றி இடத்தில் யார் இருந்தாலும் சுண்ணாம்பு அடிக்கும் வேலையை நினைத்து கூட பார்க்க மாட்டோம் ஆனால் அவர் அனைத்தையும் வாழ்வில் இயல்பாக ஏற்றுகொள்கிறான். புதிய வீட்டிற்கு மின்சாரம் கொடுக்க சொல்லும் போது எதற்கு மின்சாரம் இந்த அகல் வெளிச்சம் போதுமே வீட்டில் வாழ மின்சாரம் தேவையில்லை என்று சொல்கிறான். திருமணம் குடும்ப வாழ்விற்கு நான் எதிரி கிடையாது ஆனால் எனக்கு திருமணம் தேவையில்லை என்று சொல்லும் போதுதான் இந்த படைப்பு உச்சம் பெறுகிறது. நம் வாழ்க்கையில் நாம் எதையும் நமது தேவைக்காக செய்வதில்லை மற்றவர்கள் செய்வதால் தானே செய்கிறோம் அல்லது மற்றவர்கள் விருப்பம் ஆசைக்கு தான் நமக்கு தேவையே இல்லாத பல விஷயங்கள் செய்து கொண்டு வாழ்வை பிரச்சனை நிறைந்த ஒன்றாக மாற்றி கொண்டு கஷ்டபடுகிறோம். இதனால் தான்  தேவராஜன் ஹென்றியை பிஃளாசபியர்,கைய்டு என்று கனகவல்லிக்கு அறிமுகம் செய்கிறான். இதில் வரும் ஆண்களும் சரி பெண்களும் சரி பிரிந்து இருந்தாலும் மனதிற்குள் அது குறித்து கவலையோடு தான் இருக்கிறார்கள் இருந்தாலும் ஏதோ ஒன்று தடுக்கிறது. ஒரு இடத்தில் சிவ பானம் உடலுக்கு கெடுதல் இல்லை என்று வருகிறது கஞ்சா புகைப்பது உண்மையில் கெடுதல் இல்லையா என்று தெரியவில்லை. நாம் அன்றாடம் தவறவிடும் அனைத்தையும் ஹென்றி கூர்ந்து கவனித்து கற்று கொள்கிறான், எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் அதை மகத்தான ஒன்றாக நினைத்து அகம் மகிழும் அந்த குணம் அனைவரையும் சமமாக நினைப்பது அனைத்தையும் சமமாக நினைப்பது என்று எத்தனையே நாம் ஹென்றி இடம் இருந்து கற்றுகொள்ள வேண்டும். இதில் இருந்து ஒன்று நன்றாக தெரிகிறது மனிதன் குணம் அவன் தந்தை வழி குருதியில் வருவதில்லை அது வளர்பிலும் சுற்றி இருப்பவர்களாலும் தான் வருகிறது. இந்த நாவல் வந்த காலகட்டத்தில் இது கொண்டாட பட்டத்திற்கு பல சிறப்புகள் இருக்கிறது சில வற்றை மட்டுமே இங்கே சொல்லி உள்ளேன். பேபி ஹென்றி வீட்டிற்கு வந்து சில நாளுக்குள் திருப்பவும் பழையபடி தான் போன போக்கில் போய்விடுகிறாள், புது வீட்டில் குத்து விளக்கு கொண்டு வந்து வைக்கிறாள் யாரோ விழுந்து கும்பிட்டு என்று சொன்கிறார்கள் கும்பிட்டு விட்டு கிளம்பி விடுகிறாள். அவள் இங்கு வந்தது முதலே எல்லோரும் ஏதேதோ கட்டளைகள் போட்டுகொண்டே இருக்கிறார்கள். ஏதற்கு இது எல்லாம் பேபி போல தானே நாம் எல்லாம் இருந்தோம் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சொல்ல போனால் அவளை போலவே நிர்வாணமாக ஆனால் இப்போது? இந்த கட்டுபாடு வரையறைகள் எல்லாம் எதற்கு. நாமும் பேபி போல இருந்தால் என்ன?. இந்த நாவல் வந்த காலகட்டத்தில் இது கொண்டாட பட்டத்திற்கு பல சிறப்புகள் இருக்கிறது சில வற்றை மட்டுமே இங்கே சொல்லி உள்ளேன்.