இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Monday, December 4, 2017

வெண்முரசு - வண்ணக்கடல்




ஏழ்தெங்க நாட்டு பழையன் அவையில் நுழைந்த இளநாகன், உன் வெண்குடை நாய் குடை என்று பன் பாடி அதற்காக அவன் துரத்தப்படுவதால் மதுரைக்கு தப்பி ஒட அங்கு இருந்த அஸ்தினபுரம் போகிறான். இளநாகன் பஃறுளி ஆற்றைகடந்து தென் மதுரையை அடைகிறான், பஃறுளி ஆறு மறைந்த குமரிகண்டத்தில் ஓடிய ஆறு, ஏழ்தெங்க நாடும் குமரிகண்டநாடு,  காட்சிகள் விரிப்பால் மனம் மிக எளிதாக குமரிகண்டத்தில் ஒன்றி விடுகிறது. சதசிருங்கத்திலிருந்து தனது ஐந்து மைந்தர்கள் உடன் குந்தி நகர் திரும்பும் வழியில் நதியில் எழுந்த கார்க்கோடகன் எனும் நாகம் பிருதையின் சூரியபுதல்வன் இருக்கும் இடத்தை காட்டி விதி பயனை உரைத்து மறைந்தான். கதையும் காட்சி விரிப்பும் காவிய நடையில் நகர்வதால் சற்றே கடினமான தோன்றாலாம்..
"விண்பனித்து திரண்ட முதல்துளியென சிற்றுடலில் விழித்த பிரக்ஞை உணர்வு குடியேறா வண்ணங்களில் உவமை நிகழா வடிவங்களில் தன்னைக் கண்டு நீ பிரம்மம் என்றது"
இதை போன்ற வரிகளை வாசிக்கும் அதே வேகத்தில் கற்பனை செய்வது கடினமே ஆக இரு முறை கூறிய வாசிப்பு தேவையாகிறது. துரியோதனன் பீமன் மார் போர் செய்கிறார்கள் வெற்றி யாருக்கும் அல்ல இறுதி என் உயிர் யாருக்கேனும் தருவதாக இருந்தால் என் தமயன் துரியோதனன்க்கு அளிக்கிறேன் என்று பீமன் வாக்கு சொல்கிறான். ஆனால் விண்ணாளும் தெய்வங்கள் தங்கள் விளையாட களங்களும் காய்களும் அல்லவா தாயர் செய்கின்றனர் அவர்கள் ஆட்டிவிக்கும் பாவைகள் அல்லவா இவர்கள், அவை இவர்களை எதிரெதிர் களத்தில் அல்லவா நிறுத்துகிறது. துரியோதனனை கொல்ல வந்த கரடியிடம் இருந்து அவனை காபற்றியதன் மூலம் வெறுப்பும் குரோதமும் அணல் என மேல் எழுகிறது வளர்கிறது. பரசுராமரும் பீஷ்மரும் சரத்வானும் மட்டுமே வெல்ல முடிந்த மாபெரும் வீரனை இந்த சமுகம் எவ்வளவு எளிமையாக மிக மூர்க்கமாக காயபடுத்துகிறது குலம் இனம் என்று எந்த ஒரு மாவீரனையும் இழிந்துரைக்கிறது இந்த சமுகம், பிறந்த நாள் முதல் புறக்கணிப்பும் அவமரியாதைகளையுமே சந்தித்து கூனி குறுகும் துரோணருக்காக அகம் நீர் குமிழ்னென உடைந்து கனக்கிறது. வில் கொண்டு வெல்ல முடியாத மாவீரனை சொல் கொண்டு மிக மென்மையான தாக்கி அவனை நிலைகுலையவைக்கிறதே சமுகம். துரோணர் எதிர்காலத்தில் என்னவாக ஆவார் என்று தெரியவில்லை ஆனால் அவர் அகத்தில் இருக்கும் ஆற்றாமை மூர்க்கம் கொண்டு சினந்தெழும் போது துரோணர் முன் எதுவும் நிற்க இயலாது என்று தோன்றுகின்து.

நடப்பவை அனைத்தும் வரவிருக்கும் பாரத போருக்காக என்பதால் எதிர் எதிர் நிற்க போரவர்களை அகம் எளிதில கண்டைய விழைகிறது , துரியோதனன் - பீமன், அர்ஜுனன் - கர்ணன், ஆனால் பீமன் வாக்கு தன் உயிர் தன் தமயன் துரியோதனன்க்கு என்றும் அஸ்வத்தாமனை எந்த நிலையிலும் கொல்ல கூடாது என்ற துரோணர் சொல்லும் இருக்கிறது அப்போது இறுதியில் நிகழபோவது என்ன என்பது இந்த காய்களை நகர்த்தும் பிரம்மமே அறியும். கொடை என்றால் அது கர்ணன் என்று நாம் அறிந்ததே அப்படி பட்ட கர்ணனின் கொடை வெண்முரசுசில் எவ்வாறு அறிமுகம் ஆவர் என்று பெரிதும் எதிர்பார்த்தேன் அது ஒரு அருமையான தருணம் எதிர்பார்க்காத இடத்தில் சட்டென்று நிகழ்கிறது அது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.  வாழ்நாள் எல்லாம் அவமரியாதையும் புரக்கனிப்பும் சந்தித்த துரோணர் கர்ணனை பார்த்து நான் சூதனுக்கு கற்ப்பிப்பது இல்லை என்று சொல்லும் தருணம் ஏதோ நெருடல் கொடுக்கிறது. இந்த புவியியல் அவமரியாதை, புரக்கனிப்புக்கு நிகரான நரகம் வேறில்லை என்று ஒர் இடத்தில் வருகிறது அதே அவமரியாதை துரோணரக்கு இனையாக கர்ணன் அடையும் போது துரோணரக்கு அகம் உருகியதை விட கர்ணனுக்கு உடைந்து விம்முகிறது இயல்பாகவே அந்த இடத்தை நாம் அடைய வேண்டும் என்பது தான் கர்ணன் பாத்திரம் பளுபெரும் அது தன்னிச்சையாக நடக்கிறது அல்லது எழுத்தாளர் நுட்பம். மீண்டும் ஏகலைவன் துரோணரால் புரக்கனிக்கபடுகிறான் ஏகலைவன் துரோணரை அக கண் கொண்டு வித்தை பழகிவிட்டதால் குரு கனிக்கையாக கட்டைவிரல் பெற்ற சபையில் ஏகலைவன் அன்னையின் தீ சொல் துரோணரை படைகலத்தில் வேரறுக்கு ஆற்றல் கொண்டது அந்த ஊழ் என்றோ ஒரு நாள் அவர் முன் எழும். குரோதமும் பொறாமையும் இயல்பாகவே இரு அணிகளை எதிர் எதிராக பிரிக்கிறது அது களம் காணும் நிகழ்வில் நிகழ்கிறது. வண்ணக்கடல் புரக்கனிக்கபட்டவர்கள் வழியாக தொடங்கி முடிகிறது அதே சரடு தான் மஹாபாரதத்தின் மய்யத்தை உருவாக்கப் போவதாகவும் உள்ளது.


வண்ணக்கடல் வாசிக்க தொடங்கியதில் இருந்து " மண்மறைந்த ", "மண்மறையும்" இந்த சொல் மட்டுமே நளொன்றுக்கு பத்து முறையாவது அகத்தி எழுகிறது ஏன் என்று அறிய முடியவில்லை.

www.venmurasu.in

Wednesday, November 8, 2017

திசை அறியும் பறவைகள் - சாரு நிவேதிதா




சாரு நிவேதிதா எழுத்து விறுவிறுப்பான நடைகொண்டது அதுவும் இந்த கட்டுரை தொகுதி இன்னும் விறு விறு. வழக்கம் போல் பல்வேறு உலக செய்திகள் திபெத் மக்கள் உணவு முறை படிக்கும் போது உலகில் தலைசிறந்த உணவு முறை என்று புரிகிறது. அதிலும் ஊழல் செய்பவர்களை தூக்கி என்ற கட்டுரை ஹஹா! ஐரோபா எப்படி குளிரை எதிர்கொள்கிறது இந்திய எப்படி எதிர்கொள்கிறது என்பதை பற்றியது இந்தியாவில் இன்னும் குப்பை கூலம் போட்டு தீ வைத்து தான் குளிர்காய வேண்டும் அதாவது ஆதி மனிதன் போல, ஆனால் ஐரோபாவில் பொது இடத்தில் எங்கும் வெப்ப கற்று வீச வசதி இருக்குமாம் அனைத்து இடத்திலும் சுடு தண்ணீர் தான். இந்தியாவில் சுடுதண்ணீர் வைக்க மின் கம்பியை தண்ணீரில் வைத்து பிறகு அது சுட்டதா என்று பார்க்க கை வைத்தால் ஜாக் அடித்து சாக வேண்டும். அப்புறம் ஏன் சாரு விற்கு இளையராஜா இசை பிடிப்பதில்லை என்று இந்த புத்தகத்தில் விரிவாக சொல்லி இருக்கிறார் ஏதே Dionysian இல்லையாம் இளையராஜா இசையில். Dionysian என்றால் என்னவென்று இந்த புத்தகம் படித்து தெரிந்து கொள்ளவும்.சரி இளையராஜா தான் இப்படி என்றால்  ஏ ஆர் ரஹ்மான் பற்றி கேட்டால் விமர்சிக்க கூட ஒரு தகுதி வேண்டும் அது ஏ ஆர் ரஹ்மான் இடம் இல்லை என்று ஒரே போடாக போட்டுகிறார். அப்புறம் பெரு என்ற கட்டுரை பெரு பற்றியது அங்கே சேகுவாரா பற்றி எல்லாம் அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை நம்ம ஊரில் ங்கோத்தா எப்படியோ அப்படி அங்க சே என்று மட்டும் அடிக்கடி சொல்லுங்களாம்.

ரஜினி சார் என்ற கட்டுரையில் தமிழர்களுக்கு தாழ்வு மனப்பான்மையும் அடிமை தனமும் இரத்தத்தில் ஊறிபோன என்கிறார் அது உண்மை தான் என்று தோன்றுகின்து ஒரு தமிழன் சக தமிழனை பார்த்து தமிழில் பேசுவது இது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு தான் அல்லவா. தனூஷ்கோடி அழிய காரணம் 1948 ல காந்தியின் அஸ்தி அங்கு கரைத்த பிறகு தான் அடுத்த புயலில் தனூஷ்கோடி அழிந்து குட்டிசுவர போச்சு என்று நீச்சல் காளி சொல்கிறார், யாரு நீச்சல் காளி என்றால் படித்து தெரிந்து கொள்க. வியட்நாம் போரின் போது அமெரிக்க ராணுவ களியாட்டம் போட தங்கள் நாட்டையும் பெண்களையும் விட்டு கொட்தது பாங்காக் அதன் விளைவாக தான் இன்னும் விபச்சாரம் அந்த நாட்டின் தேசிய தொழில். ஒரு மந்திரி " பெண்கள் நமது நாட்டின் இயற்கை சொத்து என்கிறார்" இன்னும் ஒரு மந்திரி " நிங்கள் செய்வது விபச்சாரம் அல்ல heroic என்றும் நாடு உங்கள் வளர்கிறது என்று சொல்கிறார். தாய்லாந்து சிவப்பு பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்கு 1,00,00,000.

அதிகாரம் அமைதி சுதந்திரம் என்று கட்டுரை இன்றைய காலத்தின் தேவை இங்கு எப்படி நாம் எல்லாம் வெறும் நுகர்வு பண்டமாக இருக்கிறோம் என்பது புரியும் என்ன தான் இப்படி அற்புதமாக எழுதினாலும் எவனாவது நாலு பேர் படிக்கனும் இல்லைனா என்ன காட்டு கத்து கத்தியும் என்ன பயன்?. சரபோஜி மன்னர் சாப்பிடும் கோழி கரி சமயல் எப்படி செய்வது என்ற சமயல் குறிப்பு இதில் இதில் இருக்கு. கடைசி கட்டுரை 100% உண்மை உண்மை உண்மை. அப்புறம் நான் இப்போது தான் எமினெமின் 50 cent tamil versoin கேட்டேன் இதுக்கு காரணம் சாரு தான். 

Thursday, November 2, 2017

நொறுங்கிய குடியரசு-அருந்ததி ராய்

புத்தகம் - நொறுங்கிய குடியரசு
எழுத்தாளர் : அருந்ததி ராய்
விருது : புக்கர் பரிசு பெற்றவர்
பதிப்பகம் : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்
முதல் பதிப்பு : 2011
பக்கங்கள் : 190


அருந்ததி ராய் இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளர். The God off small things என்று புத்தகத்திற்கு புக்கர் பரிசு பெற்று உலகளவில் அறியப்பட்டவர். இந்தியாவில் ஒடுக்கப்படும் காஷ்மீர் மணிப்பூர் நாகலாந்து போன்ற பல மக்களுக்கு குரல் கொடுப்பவர் இந்து மதத்தால் நடக்கும் அட்டுழியங்களை எதிர்த்து எழுதுபவர். இந்தியாவில் வளர்ச்சி என்ற பெயரில் நிலங்கள் கையகப்படுத்தும் அரசு அந்த இடத்தில் இருந்த தன் சொந்த நாட்டு மக்களை பலவந்தமாக துரத்துகிறது பிறகு ஏதோ ஒரு கன்பெனிக்கு அந்த இடம் கொடுக்கபடுகிறது பிறகு வெறும் ஏழு சதவிகித இலாபம் மட்டும் அவற்றிடம் இருந்து பெறுகிறது, அந்த கன்பெனிக்கு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் கடற்கரை ஓரம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை தருகிறது ஆனால் அந்த மக்கள் அனாதையாக கைவிடபடுகிறார்கள், ஒரு கணக்கு சொல்கிறது இப்படி இடம் மாற்றம் செய்யப்பட்ட மக்கள் எண்ணிக்கை 5 கோடி பேர் என்று. அறுபதாம் சுதந்திர தினம் கொண்டாட டெல்லியில் இருந்து தெரு வாசிகள் பலர் இப்படி அப்புறப்படுத்த பட்டார்கள் பிச்சைகாரர்கள் இருந்த இடம் தெரியாமல் ஆனார்கள் இதுதான் வளர்ச்சியா உண்மையில் யோசித்து பார்த்தால் இந்திய வறுமையை போக்கவில்லை வறுமையில் இருக்கும் மக்களை கொல்லவும் கூட செய்கிறது அரசு எப்போதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பக்கமே நிற்கிறது இந்த தேசத்தின் ஏழை மக்களை அது மோசமாக நடத்துகிறது இதன் வெளிப்பாடு தான் 33 ரூ சம்பாதிக்கும் ஒருவர் வறுமை கோட்டிற்கு கிழ் இருப்பவர் இல்லை என்ற அறிவிப்பு கூட அரசு வறுமை போக்க திட்டம் போடுவதை விடை அதை மூடி மறைக்கவே திட்டம் போடுகிறது நம் அரசு செய்வது எல்லாம் நினைத்து பார்த்தால் நமக்கு வெட்கி தலைகுனிவாதாக தான் இருக்கிறது. பூர்வகுடி மக்களை அவர்கள் நிலத்தில் இருந்து விரட்டியடிக்க அரசு கையாளும் யுத்தியே மாவோயிஸ்ட் என்று சொல்கிறது முதல் பகுதி. அதே நேரத்தில் மாவோயிஸ்ட்களோ மக்களோ போராட்டத்தை விரும்பவில்லை மத்திய அரசு தான் அவர்கள் கையில் திணிக்கிறது என்று மாவோயிஸ்ட்களுக்கு வக்காலத்து வாங்கும் அருந்ததி ராய் தமிழ் ஈழம் விடுதலை புலிகளை மோசம் என்பது தான் எந்த தராசில் நிருத்தி எடை போடுவது என்று தெரியவில்லை.
இதன் முதல் பகுதியில் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மலைகளை வெட்டி பாக்ஸைட் எடுக்க அந்த இடத்தில் இருந்து பூர்வகுடி மக்கள் எவ்வாறு துரத்தியடிக்கபடுகிறார்கள் என்றும் எவ்வாறு மக்கள் ஒடுக்கபடுகிறார்கள் என்றும் விரிவாக பேசுகிறது.

மேலே ஏனோ வாசிக்க ஆர்வம் இல்லை.