இங்கே எழுதப்படுபவை என் வாசிப்பு நிரைவுக்காக மட்டுமே.

Tuesday, September 2, 2025

சாம்பன்


சாகித்திய அக்காதெமி 1995 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சாம்பன் நாவல் 1978 ஆண்டு வெளிவந்து 1980 ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. கால்கூட் என்ற புனைப்பெயரில் எழுதியவர் சமரேஷ் பாசு (1924-1988) வங்க இலக்கியத்தில் முக்கியமான இவர் புராண இதிகாச கதைகளை நவீன படுத்தி தற்காலத்திற்கு ஏற்ற வகையில் பல நூல் எழுதி இருக்கிறார். பல புகழ்பெற்ற வங்க நூல்களை தமிழில் மொழிபெயர்த்து பெரும் இலக்கிய பணியாற்றிய சு . கிருஷ்ண மூர்த்தி தான் இதையு மொழிபெயர்த்து உள்ளார்.  தமிழ் விக்கியில் அவரின் ஒரே புகைப்படம் தான் இருக்கிறது. 

இந்த உலகை விட்டுப் போக நான் விரும்பவில்லை இந்த அற்புதமான உலகில் சுற்றி திரிய ஆசைப்படுகிறேன்  என்று தொடங்குகிறது நாவல்.சரி வாங்க போகலாம் இன்றிலிருந்து 5125 ஆண்டுகள் கடந்து நாம் துவாரகைக்கு செல்ல வேண்டும் அங்கு தான் எல்லா வகையான சிறப்புகலோடும் வாய்ந்த வசுநேசர் (கிருஷ்ணன்)வாழ்ந்தார் ஆமாம் அவரைப் பார்க்கத்தான் நாம் சென்று கொண்டு இருக்கிறோம் என்று கையைப் பிடித்துக் கொண்டு நம்முடன் வாசகனுடன் உரையாடிக் கொண்டு நம்மை துவாரகைக்கு அழைத்து செல்கிறார். பதினாறாயிரம் அடிமை பெண்களை மீட்டுக் கொண்டு வந்த கிருஷ்ணன் அவர்கள் அனைவரையும் தன்னுடைய பெண்டீராக ஆகிக்கொண்டு உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும் துவாரகைக்கு தான் நாம் செல்ல போகிறோம். வையத்தில் வாழ்வாங்கு வாழும் மனிதர்கள் வானுறையும் தெய்வத்திற்கு ஒப்பாக வைக்கப்படுவார்கள் இல்லையா ? அதைப்போல தான் வசுனேசரும் ஆனால் கதை அவரைப் பற்றியது அல்ல. கதை கிருஷ்ணனுக்கும் ஜம்பவதிக்கும்
பிறந்த சாம்பன் பற்றியது. ஆமாம் நீங்கள் நினைப்பது சரிதான் துரியோதனனின் மகள் கிருஷ்ணையை சிறை எடுத்துக் கொண்டு வந்தானே அவனே தான். பிறகு கிஷ்னணையை கௌரவர்கள் மற்றும் கர்ணன் வந்து மீட்டு அஸ்தினாபுரம் கொண்டு போக பிறகு மூத்த யாதவன் பலராமன் அஸ்தினாபுரத்தை தன் கலப்பையால் கிடுகிடுக்க வைத்து மீட்டு வந்தார் இல்லையா? நான் சொல்கிறேன் அது நில நடுக்கம் தான் இவரின் கலப்பையால் வந்தது அல்ல. யாதவர்கள் பல்வேறு குலங்களாக பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருந்த காலத்தில் நாரதர் துவாரகைக்கு வருகிறார் அவரை இந்த சாம்பன் உதாசீனப்படுத்தி விடுகிறார் எல்லா உலகையும் சுற்றித் திரிகிற நாரதர் அனைத்தும் அறிந்த திறமையானவர். அவரால் இந்த புறக்கணிப்பை ஏற்று கொள்ள முடியவில்லை சாம்பனுக்கு தக்க பாடம் புகட்ட சரியான சந்தர்ப்பத்தை நோக்கி காத்திருக்கிறார். சாம்பன் எப்போதும் பெண்களுடைய உல்லாசமாக இருப்பவன் பாறையில் பட்ட நீர் எப்படி உருண்டோடுமோ அதே போல் சாம்பன் இருக்கும் இடத்தில் பெண்கள் அனைவரும் அவளை நோக்கி உருண்டோடி வருவார்கள். அழகாலும் ஆணவத்தாலும் நாரதரை உதாசீன படுத்திய சாம்பன் தன் தந்தை மூலமாகவே அந்த அழகு அழிய சாபம் பெறும் படி நாரதர் செய்கிறார்.அதாவது தொழு நோய் அவனை தாக்குகிறது ஒரு வகையில் அது விதிபயன் என்றாலும் அந்த விதி தந்தையின் சாபத்தின் மூலமாக செயல்பட துவங்குகிறது. சாபம் என்று ஒன்று இருந்தால் அதற்கு தீர்வு என்று ஒன்று இருக்கும் அல்லவா ? இறுதியில் சாம்பன் என்ன ஆனான் என்பது தான் மீதி கதை சாம்பனின் வாழ்வில் இருந்து நாம் பெற்றுக் கொள்வது நம்பிக்கை எனும் ஒளி. வாழ்வில் என்ன இடர்கள் துன்ப துயரங்கள் வந்தாலும் நம்பிக்கை என்ற ஒன்று இருந்தால் அனைத்தையும் மீண்டும் அடைய முடியும் என்பது தான் சாம்பன் வாழ்வு நமக்கு உணர்த்தும் பாடம். அனைத்தையும் விட எளிய கேளிக்கையும் பொழுதுபோக்கும் உண்மையான மகிழ்ச்சி என்று நாம் நினைக்கும் போது அர்ப்பணிப்பும், லட்சியமும், தொடர் செயல்பாடும் தான் வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதை சாம்பன் மீண்டும் தன் பழைய வாழ்க்கைக்கு செல்லாமல் தொழு நோயாளிகளுக்கு பணிபுரியும் அவர்களுக்கு மருத்துவம் செய்யும் வேலையே தனக்கு மிகவும் மகிழ்ச்சியான வாழ்வு என்று முடிவு செய்வதிலிருந்து நாம் அறிய முடிகிறது. இருக்கும் அத்தனை எழுத்தாளர்களும் மகாபாரத கதையை எழுதாத யாரும் இருக்க முடியாது அந்த வகையில் கால்கூட்டும் ஒரு மகாபாரத கதையை நவீனப்படுத்தியிருக்கிறார். எளிமையான கதை சொல்லல் முறையும் வாசகனோடு உரையாடிக் கொண்டே செல்லும் முறையும் இந்த நாவலை சிறந்த ஒன்றாக அமைக்கிறது. மகாபாரத காலத்தில் இருந்தவர்களும் சாதாரண மனிதர் தான், சொர்க்கம் நரகம் எல்லாம் அவர்கள் ஆட்சி செய்த பகுதிகள் தான் என்று சொல்கிறார் கால்கூட். இன்னும் நிறைய சொல்கிறார். வாசிங்க.....

No comments:

Post a Comment