கிறிஸ்தவ மடங்களில் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் காமத்தை ஒடுக்கி கட்டுப்படுத்தி கிறிஸ்தவம் கடைபிக்கப்படும் போது எவ்வாறான மீறல்களும் குற்றங்களும் நிகழ்கிறது என்று சொல்லும் படைப்பு, தனது தாய் மாமா பூமணி இடம் இருந்து படைப்பூக்கத்தை பெற்றதாக சொல்லும் சோ.தர்மன். பூமணியின் எதார்த்தவாதத்தை கையாண்டு வெற்றி அடைந்தாரா ? என கேள்வி எனக்கு எழுகிறது. பூமணியின் அத்தனை படைப்பும் அற்புதமானவை அனைத்தும் வாசித்த பிறகு தான் சொல்கிறேன். இவரின் கூகை , சூல், பதிமுனாம் மய்ய வாடி மூன்றையும் படித்து விட்டு தான் இந்த கேள்வியை கேட்கிறேன். ??
கருத்தமுத்து எளிய விவசாயின் மகன் வேலி ஓணாண் பிடித்து மூக்கு பொடி போட்டு விளையாடும் சிறுவன் வாழ்வின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ள அவன் முன் இருக்கும் சவால் முதலில் கல்வி, மதம், காமம். பொதுவாக வறுமை இந்த வரிசையில் சேர்ந்து கொள்ளும் ஆனால் கருத்தமுத்து பெற்றோர் அதை அவனுக்கு அளிக்கவில்லை.. ஒரு பள்ளி மாணவன் வாழ்வின் வழியே ஒரு மனிதனாக மலரும் நிகழ்வு தான் மொத்த நாவல்.
நண்பன் விட்டுக்கு செல்லும் கருத்தமுத்து ஜெஸ்ஸியை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலே கருத்தமுத்துவை இழுத்து அனைக்கிறாள் ஜெஸ்ஸி? 🤔 அவனின் முதல் காமம் ஜெஸ்ஸி மீது நிகழ்கிறது. பாதிரியார் மகனுடன் காதல் வைத்து ஓடி போய் ஒரு மாதத்தில் திரும்பி வந்துவிடுகிறாள். திரும்பி வந்தவள் கன்னியாக வந்தால் என்கிறார்? எதார்த்தத்தில் இது சாத்தியம் இல்லை. ஏன் கன்னியாகவே திரும்பி வந்தவள் என்ற விளக்கமும் இல்லை. கடைசி வரை அக்கா என்றே ஜெஸ்ஸியை அழைக்கிறான் . இன்றைய 2k கிட்ஸ் சுதந்திரத்திற்கு முன்பே...
பள்ளி படிப்பை முடித்து கிருத்துவ கல்லூரி படிப்பில் சேர்கிறான் கருத்தமுத்து ஒரு பக்கம் கல்லூரி ஒருபக்கம் சுடு காடு சுடுகாட்டில் பிணம் எறிக்கும் அரியன் கருத்தமுத்து நண்பன். இங்கு தான் கருத்தமுத்து வாழ்வின் கொடூர மனிதர்களை சந்திக்கிறான், சமுகத்தின் அத்தனை குற்றங்களையும் நிகழ்தும் இடமாக கல்லறை இருக்கிறது. மறுபுறம் கல்லூரி மற்றும் விடுதியில் பாதிரியார்கள் ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவர் உடன் உடல் தேவைக்கு உறவில் இருக்கிறார்கள், தங்களுக்கு எதிரானவர்களை பழி சுமத்தி பைத்தியம் ஆக்கி மரணிக்க செய்கிறார்கள். கன்னியாஸ்திரிகளும் பாதிரிமார்களும் எந்த இடத்திலும் தங்கள் மதத்தில் குறிப்பிட்டு இருப்பது போல வாழ்வது இல்லை என்பதை நிறுவ முயன்றிருக்கிறார் சோ.தர்மன் ஆனால் அவரை மீறி மத வெறுப்பு சில வெளிதெறிகிறது.
ஒன்று
கன்னியாஸ்திரிகளின் விடுதியில் சமையல் செய்யும் சமையல்காரன் ஆணும் மற்ற பெண்ணும் மற்ற ஒரு நபர். செந்தூர் கூர் மழுங்கிய அம்பு.அதிலும் எய்ய முடியாத அம்பு. எய்தாலும் உடலை துளைத்து உள் செல்ல முடியாத அம்பு.. ( அதாவது சிஸ்டர்கள் இவரை தங்கள் காம தேவைக்கு பயன்படுத்த முடியாதாம்)
இரண்டு
செந்தூர் காய்கறிகள் வங்க செல்கின்றன் அப்போது கருத்த முத்து கேட்கிறார் எண்ணே எதுக்கு இவ்வளவு வெள்றிக்கா? அது என்னவோ டா முத்து வெள்ளரிக்காய் எவ்வளவு கொடுத்தாலும் எனக்கு உனக்கென வாங்கிக்கிறாளுவ மூட்டை மூட்டையா வெள்ளரிக்காய் கொண்டு போய் கொடுக்கிறான் அவ அவ ரூமுக்கு எடுத்துகிட்டு போயிடுறா . கத்தரிக்காய் வாங்கலாம் இல்ல ? எவடா கத்தரிக்காய் கேட்கிறா அப்படியே வாங்கினாலும் நீளமா காம்பு இல்லாத கத்திரிக்காய் கேட்குறாளுங்க . (அதாவது சுய இன்பத்திற்கு கத்தரிக்காய் வெள்ளறியாம்)
மூன்று
அப்புறம் அவங்க சாப்பிடற சாப்பாடு இருக்கேன் ராஜா சாப்பாடு முறை தின்னு தின்னு உடம்பு தெனவெடுத்ததுனா சும்மா இருக்குமா உறக்கம் வருமா? உடம்பு மனசும் அலக்கழியும் படாத பாதபடுபடுத்தும்...
இப்படி பல இடங்கள்.
தங்களுக்கு எதிராக இருக்கும் கன்னியாஸ்திரி அல்லது பாதிரியாரை பைத்தியம் என்று முத்திரை குத்தி ஒரு ஊருக்கு அனுப்பி சங்கிலியால் கட்டிப்போட்டு விடுகிறார்கள். அப்படி வருபவர்களுக்கு கைவிளங்கு கால் விளங்கு செய்வதற்கு ஒரு இடத்திற்கு செல்கிறார்கள். கை விளங்கு கால் விளங்கு செய்யும் இரும்பை இலவசமாக கொடுக்கிறார்கள் அதை செய்யும் ஆசாரியும் இலவரசமாக செய்து கொடுக்கிறான் கேட்டால் தொழில் தர்மம் என்கிறார்கள். ஏதோ பெரிய அற செயல் செய்வது போல் பில்டப்.செய்வது பாவ செயல் இதில் என்னடா உங்களுக்கு நாய மயிறு வேண்டி கிடக்குது ? .... ( இதான் எதார்தவாதமா )
மரக்கால் பாண்டியர் என்று ஒருவன் வருகிறான் அவன் மூலம் தன்னுடைய கம்யூனிச அரசியல் பார்வையை எழுத்தாளர் சொல்கிறார். அதாவது ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்கிற மதம் ஒரு அங்கியை இழந்தால் பத்து அங்கியை கொடு என்கிற மதம் இவர்களை மழுந்தடித்து மரக்கட்டைகளாக ஆக்கிவிட்டது .இவர்கள் எப்படி அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் ? சிறுபான்மையாக இருக்கும் கிறிஸ்தவர்களிடம் 45 சதவீத கல்வி நிலையங்கள் சென்று விட்டதால் இந்த நாட்டில் சுதந்திரம் அடைய வழி இல்லை அதாவது அவர்கள் மரக்கட்டையாக போய்விட்டார்களாம் போரட மாட்டார்களாம். கம்யூனிசம் இரண்டாக உடையாமல் இருந்தால் இந்த நாட்டின் பெரிய புரட்சி வெடித்திருக்கும் என்கிறார்.
என்னதான் கிறிஸ்தவர்கள் மதத்தை பரப்புவதற்காக கல்வி நிலையங்களை ஆரம்பித்திருந்தாலும் இந்த நாட்டில் பெரும்பான்மையர்களுக்கு கல்வி அளித்தது கிறிஸ்தவ நிறுவனங்கள் தான். என்பதை யாரும் மறுக்க முடியாது. ( ஏன் இந்துக்கள் இந்து பள்ளியை தொடங்கி கல்வியை அளிக்க கூடாது என்று ஏதேனும் சட்டம் இருந்ததா என்ன நீங்களும் செய்ய வேண்டியது தானே)
தனக்குத் தெரிந்த டெய்லரிடம் கூட்டிக்கொண்டு போனால் சுடலை மேஸ்திரியின் பெண்டாட்டி. ஏஞ்சல் முதல் முறையாக தன் உடலை அளவெடுத்தாள். தனக்கு இப்படி ஒரு உடல் இருப்பதையே நினைத்துப் பார்த்தால். பூக்களை பல வண்ணங்களில், படைத்து பூக்க வைத்த இறைவன் அதன் நிறத்தையும், அழகையும், வாசனையையும் நுகர விடாமல் பார்க்க விடாமல் ஆடை கொண்டு மூடி வைப்பானா அப்படியானால் அந்தப் பூவை ஏன் படைக்க வேண்டும்.? பூ என்றால் பூப்பது மட்டும்தானா ? பிஞ்சாக வேண்டாமா? காயாகி கனிய வேண்டாமா வம்ச விருத்திக்கான விதைகளை பூமியில் விதைப்பது யாரோ.
-நூலில் இருந்து....
பெண்களை வெறும் காமத்திற்கு பயன்படும் சதை பிண்டமாகவும், குழந்தைகளை பெற்று தள்ளும் மிஷின் ஆகவும் நினைக்கும் சுத்த மூடத்தனத்தின் உச்சம்.
கருத்தமுத்து ஏஞ்சல்ஸ் சிஸ்டர் உறவில் கருத்த முத்து நினைப்பது எல்லாம் நடக்கிறது எப்படி இதான் எதார்த்தவாதமா ? . கருத்தமுத்து எதார்த்தங்களோடு முட்டி மோதி ஒரு வழியில் கனிந்த நல்ல மனிதனாக ஆகிறான் அதுவே இந்த நாவலை சிறப்பான ஒன்று என்ற நம்பிக்கையும் ஆறுதலையும் அளிக்கிறது.