Wednesday, November 2, 2022

அஞ்சலை - கண்மணி குணசேகரன்


குத்துற ஒரலுக்கு ஒரு பக்கம் அடி, அடிக்கிற மத்தாலத்துக்கு ரெண்டு பக்கமும் அடி , சுத்துற ரொப்பு உரல் குழவி கல்லுக்கு எல்லா பக்கமும் அடி . அப்படித்தான் ஆகிப்போச்சு அஞ்சலை வாழ்க்கை எல்லா பக்கமும் அடி ,துன்பம் கண்ணீர் அவமதிப்பு, ஏமாற்றம். அவ வாழ்க்கை முழுவதும் ஊர் மக்கள் சொல்லும் வாய் பேச்சும் வம்பு பேச்சும் தான் முடிவு செய்யுது. நடவு நட பேன எடத்துல காட்டுகாரன் மவன் கூட சிரிச்சி பேச ஊரு கதை கட்ட இவளுக்கு கல்யாணம் பன்னிடலாம்னு ஆத்தா காரி முடிவு பன்ன, அவ மருமவன் கிட்ட சொல்ல நானே இவள ரெண்டாம் தரமா கட்டிக்கிரேனு அக்கா வீட்டுகாரன் சொல்ல முடியாதுனு தலையாட்டிடுறா அஞ்சலை.இருடி உன்ன பாத்துக்கிறேன்னு அவள பழிவாங்குறான் அக்கா வீட்டுகாரன். அப்பன் இல்லாம கம்முனாட்டிய கெடந்து  மூனு பொட்ட பிள்ளையும் ஒரு ஆம்பளை பிள்ளையும் வளந்தா அவ ஆத்தா காரி கல்யாணி அவள சுளூவா எல்லாரும் ஏமாத்தி போடறாங்க. பிறகு அவள் வாழ்க்கை எங்கெங்கு லோல் பட்டு இந்த சமூகத்தின் கொடிய கரங்களால் கிழிக்கப்பட்டு எறியப்படுகிறாள் இறுதியாக நம் கண் முன் எஞ்சும் அஞ்சலை இந்த சமூகத்தின் கோர கரங்களால் கிழித்து எறியப்பட்ட வெறும் குப்பையாகவே காட்சி அளிக்கிறாள்.

இந்த நாவலில் முதன்மையாக நாம் கருத்தில் கொள்ள வேண்டியது இந்த சமூகத்தில் நிலவும் வன்முறை மனநிலையும் ஆணாதிக்க போக்கும் ஒரு பெண்ணின் வாழ்வை எவ்வாறு சிதைத்து போடுகிறது என்பதை காட்டுகிறது. மொத்த நாவல் முழுவதுமே பெண் என்பவள் ஒரு பொருட்டாகவே எங்கேயும் யாராலும் மதிக்கப்படவில்லை. அஞ்சலையின் தம்பி கூட ஓரளவு கல்வி அறிவு பெற்ற பின்பு கூட நிலாவை கைவிடும் இடம் குறிப்பாக சொல்ல வேண்டும். அதற்கு அவன் சொல்லும் காரணம் வேறு என்றாலும்  வாசகர்கள் அதன் அடித்தளத்தை அறிந்து கொள்வார்கள். மண்ணாங்கட்டி மட்டுமே சற்று அஞ்சல இடம் தாழ்ந்து செல்கிறான் அதுவே கூட அவனின் ஊனம் மற்றும் இயலாமையில் வெளிப்பாடால்தான் என்று நாவல் இறுதியில் அவன் அஞ்சலையை அடிக்கும் போது புரிந்து கொள்ளலாம் . மண்ணாங்கட்டி இடமிருந்து அஞ்சலையில் பிரிந்து சென்று நிலாவை பெற்று கார்கூடலில் விட்டுவிட்டு வந்த பிறகும் கூட மண்ணாங்கட்டி அவளை ஏற்றுக் கொள்கிறான் ஆனால் நிலாவை அவன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதற்கும் காரணம் அஞ்சலையாகத்தான் தெரிகிறது அவள் திரும்பி வந்த பிறகும் கூட மண்ணாங்கட்டியிடன் நெருக்கமும் பரிவும் இல்லாதவே காலத்தை தள்ளுகிறாள் அதன் காரணமாகவே நிலா மீது எந்த அக்கறையும் இல்லாதவனாக ஆகிவிடுகிறான். இதில் வரும் மக்கள் அனைவரும் அடுத்தவரின் மகிழ்ச்சியை அபகரிப்பதிலும் புறம் பேசி வம்பு வளர்ப்பதிலும் பிரதானமாக இருக்கிறார்கள் ஒருவகையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையின் மீதான வெறுப்பும் அதீத உடல் உழைப்பால் தன்னையே நொந்து கொண்ட மனநிலையும் சிறிதளவு எனும் தனக்கென்று ஒரு தனி வாழ்க்கை இல்லாத சூழலும் அவர்களுக்கு இவ்வாறான பிக்கல் பிடுங்கள் குணத்தை அளிப்பதாக நினைக்கின்றேன். 

குறைத்து காட்டப்பட்டாலும் அஞ்சலியை விட நிலாவின் சித்திரமே வலுவானதாக எனக்கு படுகிறது ஏனென்றால் கல்யாணியை விட அஞ்சலை மனதில் உறுதியும் பிடிக்கும் அற்றவளாகவே இருக்கிறாள் அதன் காரணமாக ஒவ்வொரு இடமாக தாவித்தாவி செல்கிறாள் ஆனால் கல்யாணி உடலில் இரத்தம் ஓடும் வரை உழைத்து வாழ்வேன் என்கிறாள். பீங்கான் தொழிற்சாலையில் அஞ்சலை வேலை செய்துவிட்டு உடல் முழுவதும் பீங்கான் மாவோடு தெருவில் வந்து நிலாவை சந்திக்கும்போது நிலா எந்தவித முகசுலிப்பும் இல்லாமல் அன்போடு தாயை எதிர்கொள்கிறாள் இந்த இடத்தில் நிலாவின் சித்திரம் வேறொரு தலத்திற்கு செல்கிறது குறிப்பாக இந்த தலைமுறை பிள்ளைகள் காரணம் இல்லாமல் பெற்றோர்களிடம் விளக்கத்தை அடையும்போது நிலா அதிலிருந்து மாறுபட்டவளாக இருக்கிறாள். இறுதியில் தற்கொலை செய்து கொள்ள போகும் அஞ்சலையிடம் "கம்மனாட்டி மவளே நீ ஏண்டி சாகப்போற யாரும் இல்லாமல் நான் தாண்டி சாகனும் ஒரு பத்து நாள் வாழ்ந்து புட்டா எல்லாம் சரியா போயிடும்"  என்னும் இடத்தில் நிலா இன்னும் வாழ்வின் மீதான தெளிந்த பார்வையும் பிடிப்பும் கொண்டவளாக ஆகிவிடுகிறாள். அவள் கை பிடித்து அஞ்சலை துணிவோடு நடக்கும் இடம் நாவல் அழகியல் தளத்திலும் எதார்த்த தளத்திலும் வலுவான ஒரு மொழி தளத்திலும் தன்னை நிறுவிக் கொள்கிறது. நாவலின் கட்டுமானத்தில் கண்மணி குணசேகரனின் வட்டார வழக்கு பேச்சு மொழி இன்னொரு வலுவை சேர்க்கிறது. 

வைரமுத்துவின் " கருவாச்சி " கவனிக்கப்பட்ட அளவிற்கு கண்மணி குணசேகரனின் "அஞ்சலை" கவனிக்கப்படாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.

- சந்தேகமே இல்லாமல் தமிழ் சமுகம் ஒரு பில்ஸ்டைன் சமூகம் தான்- 

 ''சோறு அடுப்பிலயும் - எங்க சுந்தரனார் தொட்டிலுல! நான் சோத்த எறக்குவனா ஏஞ் சுந்தரனாரத் தூக்குவனா? பாலு அடுப்பிலயும் - ஏம் பாலகனார் தொட்டிலுல! நான் பால எறக்குவனா - ஏம் பாலகனத் தூக்குவனா?''

நெடுஞ்சாலைக்கு பிறகு கண்மணி குணசேகரனின் அஞ்சலை நான் இரண்டாவதாக வாசித்த புத்தகம் இரண்டுமே எந்த வகையிலும் என்னை ஏமாற்றவில்லை . 

Sunday, February 20, 2022

Review: துணையெழுத்து [Thunai Ezhuthu]

துணையெழுத்து   [Thunai Ezhuthu] துணையெழுத்து [Thunai Ezhuthu] by S. Ramakrishnan
My rating: 5 of 5 stars

இதில் இருக்கும் கட்டுரைகள் எஸ் ரா தான் சந்தித்த விதவிதமா மனிதர்கள் பற்றிய நினைவாக உள்ளது , ஒரு சிறிய சம்பவத்தை எடுத்துக்கொண்டு வாழ்வின் இனிமையை உணதுவதில் எஸ் ரா தனித்துவமான எழுத்தாளர் . கால ஓட்டத்தில் எத்தனயோ மனிதர்கள் எல்லோர் வாழ்விலும் வந்து செல்வர்கள் பிறகு அவர்கள் வெறும் நினைவுகளாக மட்டுமே எஞ்வர்கள் எலோர் வாழ்விலும் இப்படியாக நிறைய மனிதர்கள் இருப்பார்கள் அவர்களை நினைவாக மெல்ல அசைபோட வைக்கும் புத்தகம் இது மேலும் அவர்களை அவர்களோடு பழகிய காலத்தில் நாம் புரிந்து கொல்லாமல் இருந்து இருக்கலாம் ஆனால் காலம் கடந்த பிறகு அவர்களை நம் புரிந்துகொண்ட போது அவர்கள் நம்மை விட்டு போய் இருப்பார்கள் அவர்களை நல்ல நினைவாக மாற்றிகொள்ள இந்த நூல் உதவுகிறது ... எஸ் ரா வின் எழுத்து எப்போதும் ஏதோதோ எண்ண அலைகளை கிளறிவிடும் இதுவும் அதுபோல தான் ....


View all my reviews

Saturday, February 5, 2022



தன்மீட்சிஜெயமோகன் ...

 

இந்த நுற்றாண்டின் மிக முக்கியமான பிரச்சனை ஒவொரு தனி மனிதனும் தங்களுக்கான தனி வாழ்வை அடைய நினைப்பது , சென்ற தலைமுறை தனிப்பட வாழ்வு இல்லாமல் இருதார்கள் குடும்ப வெற்றி குடும்ப சொத்து என்று இன்று தனிப்பட வாழ்வை அடயநினைக்கும் அனைவர் முன் நிற்கும் கேள்வி , நான் யார் ? மனித வழிவிற்கு என்ன அர்த்தம் ? விங்குகள் போல வாழ்ந்து மடிவது தான் மனிதன் வேலையா ? என்ற கேள்விகள் வரும்  இதை போன்ற வாசகர்கள் கேட்ட கேள்விக்கு  ஜெயமோகன் தொடர்ந்து இருபது வருடங்களாக பதில் எழுதிக்கொண்டு இருக்கிறார் காரணம் இதை அவர் இந்து நூற்றாண்டின் உள சிக்கல் என்று கருதுகிறார் . மனித இருப்பு குறித்த கேள்வி ஒருவன் மனதில் எழும்போது கூடவே அறம் சார்ந்த குழப்பங்களும் வருகிறது அதற்க்கான பதிலாக இந்த நூல் உள்ளது . பொதுவாக இன்றைய இளஞ்சர்கள் விருப்பம் இல்லாத துறைகளில் சமுக குடும்ப நெருக்கடியால் தங்களை செளுதிகொண்டு விருப்பம் இல்லாமல் உழலுகிறார்கள் , சிலார் பொருளியல் தேவைக்காக தங்கள் கனவுகளை துறக்கிறார்கள் . அவர்கள் போன்றவர்கள் தங்கள் அக கனவுலகை கண்டடைய இந்த நூல் வழிக்காட்டும் ... ஒரு மனிதன் எப்படி தன்னை பகுதுகொண்டு தான் புறவுளகிலும் சமூகத்திலும் நற்பெயரை பெற்று தான் அகவிடுதலையும் சாத்திய படுதிகொல்வது என்று இந்த நூல் பதில் அளிக்கிறது ....